MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • WhatsApp: நண்பர்களுக்கு பர்த்டே விஷ் பண்ண மறக்குதா? வாட்ஸ்அப் ஃபீச்சரை ஆக்டிவேட் பண்ணுங்க.!

WhatsApp: நண்பர்களுக்கு பர்த்டே விஷ் பண்ண மறக்குதா? வாட்ஸ்அப் ஃபீச்சரை ஆக்டிவேட் பண்ணுங்க.!

WhatsApp Birthday Reminder Feature: உங்கள் நண்பர்கள், உறவினர்களின் பிறந்தநாளை நினைவில் வைத்து வாழ்த்துச் சொல்ல மறந்துவிடுகிறீர்களா? இனி வாட்ஸ்அப் உங்கள் அன்புக்குரியவர்களின் பிறந்தநாட்களை உங்களுக்கு நினைவூட்டும். 

2 Min read
Author : Ramprasath S
| Updated : Jul 10 2026, 12:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
வாட்ஸ்அப்பின் புதிய பிறந்தநாள் நினைவூட்டல் அம்சம்
Image Credit : stockPhoto

வாட்ஸ்அப்பின் புதிய பிறந்தநாள் நினைவூட்டல் அம்சம்

வேலைப்பளு காரணமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பிறந்தநாளை மறந்துவிடுகிறீர்களா? இனி கவலை வேண்டாம், வாட்ஸ்அப் உங்களுக்கு நினைவூட்டும். வாட்ஸ்அப் (WhatsApp) தனது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த தொடர்ந்து பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது வாட்ஸ்அப் செயலியில் வரவிருக்கும் மிக முக்கியமான மற்றும் பயனுள்ள ஒரு அம்சம் தான் "பிறந்தநாள் நினைவூட்டல்" (Birthday Reminder) அம்சம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
 வாட்ஸ்அப் பர்த்டே ஃபீச்சர்: எப்படி வேலை செய்கிறது?
Image Credit : Getty

வாட்ஸ்அப் பர்த்டே ஃபீச்சர்: எப்படி வேலை செய்கிறது?

பொதுவாக நாம் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் மட்டுமே நண்பர்களின் பிறந்தநாள் அறிவிப்புகளை பார்த்து பழகியிருப்போம். தற்போது அதே போன்ற ஒரு வசதியை வாட்ஸ்அப் தனது தளத்திலும் கொண்டு வருகிறது. இதன் மூலம், உங்கள் காண்டாக்ட்டில் (Contacts) உள்ளவர்களின் பிறந்தநாள் வரும்போது வாட்ஸ்அப் உங்களுக்கு அதை நினைவூட்டும். பிற செயலிகளைப் போலல்லாமல், வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் பிறந்தநாள் நினைவூட்டல் அம்சத்தை வழங்குகிறது.

Related Articles

Related image1
Interesting Facts: 3-பின் பிளக்கில் ஒரு பின் மட்டும் ஏன் பெரிதாக உள்ளது? இது வெறும் டிசைன் கிடையாது.! உயிரைக் காப்பாற்றும் செம இன்ஜினியரிங் ட்ரிக்.!
Related image2
Interesting Facts: ஹோட்டல் ரூமில் படுக்கையின் காலடியில் ஏன் வண்ணத் துணி விரிக்கிறார்கள் தெரியுமா? இதன் பின்னணியில் உள்ள ரகசியம்!
36
நண்பர்களின் பிறந்தநாளை வாட்ஸ்அப் எப்படி கண்டறிகிறது?
Image Credit : Getty

நண்பர்களின் பிறந்தநாளை வாட்ஸ்அப் எப்படி கண்டறிகிறது?

பயனர்கள் தங்கள் சுயவிவரப் பக்கத்தில் (Profile) தங்களின் பிறந்த தேதியை உள்ளிடுவதற்கான ஆப்ஷன் வழங்கப்படும். உங்கள் நண்பர் ஒருவர் தனது பிறந்தநாளை பதிவிட்டிருந்தால், அந்தத் தேதியில் உங்களுக்கு வாட்ஸ்அப் சாட் லிஸ்ட்டில் அல்லது பிரத்யேக நோட்டிபிகேஷன் மூலம் நினைவூட்டல் காட்டப்படும். வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்யும்போது கொடுக்கப்படும் பிறந்த தேதியை வைத்து, உங்கள் கான்டாக்ட்களில் உள்ளவர்களின் பிறந்தநாளை நோட்டிபிகேஷன் மூலம் தெரிவிக்கும். நினைவூட்டலை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் நேரடியாக அவர்களுக்கு வாழ்த்துச் செய்திகளையோ, ஸ்டிக்கர்களையோ அனுப்ப முடியும். 

46
புதிய ஃபீச்சரால் பிரைவசிக்கு ஆபத்தா?
Image Credit : Getty

புதிய ஃபீச்சரால் பிரைவசிக்கு ஆபத்தா?

பிறந்த தேதியை மற்றவர்களுக்குத் தெரிவிப்பது சிலரின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு எதிரானது என்பதால், இந்த புதிய அம்சம் பிரைவசி குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. வாட்ஸ்அப் எப்போதும் பயனர்களின் தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிப்பதால், இந்த அம்சத்திலும் சில கட்டுப்பாடுகள் வழங்கப்பட உள்ளன. உங்கள் பிறந்தநாளை வாட்ஸ்அப்பில் பதிவிடுவது கட்டாயமல்ல, அது உங்கள் தனிப்பட்ட விருப்பம். உங்கள் பிறந்தநாளை யாரெல்லாம் பார்க்க வேண்டும் (எல்லோருமா, உங்கள் காண்டாக்ட்ஸ் மட்டுமா அல்லது யாருமே இல்லையா) என்பதை நீங்களே ‘Privacy Settings’ மூலம் முடிவு செய்து கொள்ளலாம்.

56
இதனால் என்ன பயன்?
Image Credit : Asianet News

இதனால் என்ன பயன்?

பிஸியான லைஃப்ஸ்டைலில் நெருங்கியவர்களின் பிறந்தநாட்களை மறப்பதைத் தவிர்க்கலாம். சரியான நேரத்தில் வாழ்த்துக்களைப் பகிர்வதன் மூலம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான பிணைப்பு பலப்படும். பிறந்தநாளை நினைவில் வைக்க இனி காலண்டர் குறிப்புகளோ அல்லது பிற செயலிகளோ தேவையில்லை.

66
பீட்டா வெர்ஷனில் சோதனை
Image Credit : AI Generated

பீட்டா வெர்ஷனில் சோதனை

இந்த புதிய அம்சம் தற்போது பீட்டா வெர்ஷனில் டெஸ்டிங்கில் உள்ளது. விரைவில் இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் (iOS) பயனர்கள் அனைவருக்கும் அதிகாரப்பூர்வ அப்டேட் மூலம் கிடைக்கவுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தொழில்நுட்பச் செய்திகள்
வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் அம்சங்கள்
வாட்ஸ்அப் மேம்படுத்தல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
OPPO Reno16 சீரிஸ் வந்துவிட்டது. உங்களுக்குள் இருக்கும் படைப்பாளியை வெளிக்கொணர புதிய வழிமுறை
Recommended image2
WhatsApp Update: வாட்ஸ்அப்பில் புது மாஸ் அப்டேட்! இனி நண்பர்களின் பிறந்தநாளை அதுவே நினைவூட்டும்! எப்படித் தெரியுமா?
Recommended image3
Engineering Secrets : உயரமான கட்டிடங்கள் காற்றில் ஆடுமா? ஆமாம்! ஆனா அது ஏன் ஆபத்து இல்ல தெரியுமா?
Related Stories
Recommended image1
Interesting Facts: 3-பின் பிளக்கில் ஒரு பின் மட்டும் ஏன் பெரிதாக உள்ளது? இது வெறும் டிசைன் கிடையாது.! உயிரைக் காப்பாற்றும் செம இன்ஜினியரிங் ட்ரிக்.!
Recommended image2
Interesting Facts: ஹோட்டல் ரூமில் படுக்கையின் காலடியில் ஏன் வண்ணத் துணி விரிக்கிறார்கள் தெரியுமா? இதன் பின்னணியில் உள்ள ரகசியம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved