MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Interesting Facts: ஹோட்டல் ரூமில் படுக்கையின் காலடியில் ஏன் வண்ணத் துணி விரிக்கிறார்கள் தெரியுமா? இதன் பின்னணியில் உள்ள ரகசியம்!

Interesting Facts: ஹோட்டல் ரூமில் படுக்கையின் காலடியில் ஏன் வண்ணத் துணி விரிக்கிறார்கள் தெரியுமா? இதன் பின்னணியில் உள்ள ரகசியம்!

Interesting Facts: ஹோட்டல் படுக்கையின் கீழே ஒரு வண்ணத் துணி விரிக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இது அலங்காரத்தை தாண்டி ஒரு நடைமுறை பயனையும் தருகிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Jul 09 2026, 03:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Hotel Bed Runner Purpose
Image Credit : stockPhoto

Hotel Bed Runner Purpose

நாம் பல காரணங்களுக்காக வெளியூருக்கு செல்லும் பொழுது, ஹோட்டல்களில் அறை எடுத்து தங்குவது வழக்கம். அப்படி செல்லும்போது பெரும்பாலான ஹோட்டல்களின் அறைகளில் படுக்கையின் கால் பகுதியில் நேர்த்தியாக விரிக்கப்பட்ட ஒரு வண்ணமயமான துணிப்பட்டை இருப்பதை கவனித்திருப்பீர்கள். இது வெறும் அலங்கார பொருள் மட்டும் கிடையாது. இது ‘பெட் ரன்னர்’ என்று அழைக்கப்படுகிறது. இது அறையின் தோற்றத்தை மேம்படுத்துவதைத் தாண்டி பல நடைமுறைப் பயன்களையும் கொண்டுள்ளது. அது குறித்து இந்த விரிவாகப் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:  Hotel Safety Tips: ஹோட்டல் அறைக்குள் போனதும் பெட்டுக்கு அடியில பாட்டில உருட்டி விடுங்க! 99% பேருக்கு இந்த சேஃப்டி ட்ரிக் தெரியாது.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
படுக்கை விரிப்பு அழுக்காவதைத் தடுப்பது
Image Credit : stockPhoto

படுக்கை விரிப்பு அழுக்காவதைத் தடுப்பது

தொலைதூரப் பயணங்களை மேற்கொண்டு அறைக்கு வரும் விருந்தினர்கள், தங்களின் சோர்வு காரணமாக பல நேரங்களில் காலணிகளை கழற்றாமலோ அல்லது கால்களை கழுவாமலோ அப்படியே படுக்கையில் சாய்ந்து ஓய்வெடுப்பதுண்டு. அப்போது கால்களில் உள்ள தூசி அல்லது அழுக்குகள் வெண்மையான படுக்கை விரிப்பில் பட்டு அது பாழாவதை இந்த வண்ணத்துணி தடுக்கிறது. ஹோட்டல் அறையில் நுழைந்தவுடன் பலரும் தங்கள் சூட்கேஸ், கைப்பை லேப்டாப் பைகளை படுக்கையின் கால்மாட்டில் வைப்பார்கள். பயணத்தின் போது பைகளின் அடியில் படிந்திருக்கும் அழுக்குகள் படுக்கையில் ஒட்டாமல் இந்த பெட் ரன்னர் ஒரு பாதுகாப்பு கேடயமாக செயல்படுகிறது.

இதையும் படியுங்கள்:  Hotel Safety Tips: ஹோட்டல் ரூமில் உள்ள இந்த ஒரு பொருளை கையால் கூட தொடாதீர்கள்.! அருவருக்க வைக்கும் காரணங்கள்.! 

Related Articles

Related image1
Hotel Safety Tips: ஹோட்டல் அறைக்குள் போனதும் பெட்டுக்கு அடியில பாட்டில உருட்டி விடுங்க! 99% பேருக்கு இந்த சேஃப்டி ட்ரிக் தெரியாது.!
Related image2
Hotel Safety Tips: ஹோட்டல் ரூமில் உள்ள இந்த ஒரு பொருளை கையால் கூட தொடாதீர்கள்.! அருவருக்க வைக்கும் காரணங்கள்.! உண்மை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.!
36
அறையின் அழகியல் மற்றும் வடிவமைப்பு
Image Credit : stockPhoto

அறையின் அழகியல் மற்றும் வடிவமைப்பு

பெரும்பாலான ஹோட்டல்களில் படுக்கை விரிப்புகள், போர்வைகள் தலையணை உறைகள் என அனைத்துமே பளிச்சென்ற வெள்ளை நிறத்திலேயே பயன்படுத்தப்படுகின்றன. முழுக்க முழுக்க வெள்ளை நிறத்தில் இருக்கும் படுக்கை பார்ப்பதற்கு சற்றே வெற்றுத்தன்மையுடனும், சுவாரஸ்யம் இல்லாமலும் இருக்கும். எனவே படுக்கையின் மேல் திரைச்சீலைகள் அல்லது சுவர்களின் நிறத்திற்கு பொருத்தமான ஒரு பிரகாசமான வண்ணத்துணியை விரிக்கும் பொழுது அது படுக்கைக்கு ஒரு கம்பீரமான தோற்றத்தையும், ஆடம்பரமான அழகையும் தருகிறது.

இதையும் படியுங்கள்: Interesting Facts: 3-பின் பிளக்கில் ஒரு பின் மட்டும் ஏன் பெரிதாக உள்ளது? இது வெறும் டிசைன் கிடையாது.! உயிரைக் காப்பாற்றும் செம இன்ஜினியரிங் ட்ரிக்.!

46
பராமரிப்புச் செலவைக் குறைத்தல்
Image Credit : stockPhoto

பராமரிப்புச் செலவைக் குறைத்தல்

ஹோட்டல்களில் தினசரி படுக்கை விரிப்புகளை துவைப்பது என்பது பெரிய வேலை மற்றும் செலவு பிடிக்கும் விஷயமாகும். வெள்ளை நிற படுக்கையில் சிறிய கறை பட்டாலும் அதை முழுமையாக துவைத்து வெளுக்க வேண்டி இருக்கும். இது துணியின் ஆயுளையும் குறைக்கும். ஆனால் கறைகள் அதிகம் படியும் காலடி பகுதியில் இந்த வண்ணத்துளியை வைப்பதன் மூலம் படுக்கை விரிப்பு அடிக்கடி அழுக்காவது தவிர்க்கப்படுகிறது. முழு படுக்கை விரிப்பையும் துவைப்பதற்குப் பதிலாக அழுக்கு படிந்த பெட் ரன்னர் துணியை மட்டும் தனியாக எடுத்து எளிதாக துவைத்து விடலாம். இது தண்ணீர் பயன்பாடு, சலவை சோப்பு மற்றும் மனித உழைப்பையும் மிச்சப்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்: Bathroom Cleaner: உப்புத் தண்ணி கறையா? பக்கெட், பைப்பை பளபளன்னு மாத்த சூப்பர் டிப்ஸ்!

56
விருந்தினர்களின் உளவியல்
Image Credit : stockPhoto

விருந்தினர்களின் உளவியல்

இந்த பெட் ரன்னர் துணி அழகு மற்றும் நடைமுறை காரணங்கள் மட்டுமல்லாமல் உளவியல் காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை நிறம் என்பது தூய்மையின் அடையாளம். அதன் மீது ஒரு வண்ணத் துணி இருந்தால் அந்த படுக்கை நேர்த்தியாகவும், சுத்தமாகவும் பராமரிக்கப்படுகிறது என்ற நிம்மதியும், பாதுகாப்பான உணர்வும் விருந்தினர்களுக்கு ஏற்படுகிறது. ஹோட்டல் நிர்வாகம் தங்கள் வசதிக்காக சிறிய விவரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதை விருந்தாளிகளுக்கு இது உணர்த்துகிறது. இது விருந்தினர்களின் உளவியலுடன் தொடர்புடையது என்பதால் இந்த சிறிய துணி அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

இதையும் படியுங்கள்:  Water Bottle: வாட்டர் பாட்டிலில் இந்த கோடுகள் ஏன் இருக்கு? இது வெறும் டிசைன் இல்ல, செம இன்ஜினியரிங் ட்ரிக்!

66
பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது
Image Credit : stockPhoto

பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது

சுருக்கமாகச் சொன்னால், இந்த துணி வெறும் அழகுக்கானது மட்டுமல்ல. ஹோட்டல் அறையின் அழகை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் அதே வேளையில், படுக்கையின் தூய்மையை பராமரிக்கும் ஒரு பாதுகாப்பு கவசமாகவும் செயல்படுகிறது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Fridge: ஃபிரிட்ஜில் பேக்கிங் சோடா வச்சா இவ்ளோ நடக்குமா? 30 நிமிடத்தில் புத்தம் புதுசாக மாறும் மேஜிக்!
Recommended image2
Fish Food: எடை குறையணுமா? வாரத்தில் 3 தடவையாவது இந்த மீனை சாப்பிடுங்க.! விலை குறைவு, நன்மைகள் ஏராளம்.!
Recommended image3
Kitchen Hacks : லூசான மிக்ஸி ஜார் மூடியை வீட்டிலயே ஈசியா சரி பண்றது எப்படி?
Related Stories
Recommended image1
Hotel Safety Tips: ஹோட்டல் அறைக்குள் போனதும் பெட்டுக்கு அடியில பாட்டில உருட்டி விடுங்க! 99% பேருக்கு இந்த சேஃப்டி ட்ரிக் தெரியாது.!
Recommended image2
Hotel Safety Tips: ஹோட்டல் ரூமில் உள்ள இந்த ஒரு பொருளை கையால் கூட தொடாதீர்கள்.! அருவருக்க வைக்கும் காரணங்கள்.! உண்மை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved