MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • WhatsApp Big Update: அக்டோபர் 1 முதல் வாட்ஸ்அப்-ல் 14 பைசா கட்டணம்.. யார் பணம் செலுத்தணும்?

WhatsApp Big Update: அக்டோபர் 1 முதல் வாட்ஸ்அப்-ல் 14 பைசா கட்டணம்.. யார் பணம் செலுத்தணும்?

WhatsApp Big Update: வாட்ஸ்அப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான மக்களுக்கு அக்டோபர் 1 முதல் புதிய மாற்றம் வர உள்ளது. இதில் பல மாற்றங்கள், கட்டணங்கள் வரவுள்ளது. இவை யாருக்கு பொருந்தும், பொருந்தாது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Oct 02 2026, 09:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
வாட்ஸ்அப் புதிய விதி
Image Credit : Google

வாட்ஸ்அப் புதிய விதி

வாட்ஸ்அப் பிசினஸ் பிளாட்பாரமில் நிறுவனங்கள் அனுப்பப்படும் சில வகை மெசேஜ்களுக்கு புதிய கட்டண விதிமுறை அமலுக்கு வருகிறது. இதனால் வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைவரிடமும் மெசேஜ் அனுப்பப்படும் பணம் வசூலிக்கப்படும் என்பது அர்த்தமில்லை. நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது வழக்கமான தனிப்பட்ட உரையாடல்களுக்கு எந்த புதிய கட்டணமும் விதிக்கப்படுவதில்லை. மேலும் ஒரு வணிக நிறுவனத்துடன் வாடிக்கையாளர் வாட்ஸ்அப் வழியாக உரையாடும் வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூலிக்கப்படாது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
வாட்ஸ்அப் கட்டணம்
Image Credit : Google

வாட்ஸ்அப் கட்டணம்

மாற்றம் முழுவதும் வாட்ஸ்அப் பிசினஸ் பிளாட்பார்மை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ்களை அனுப்பும் நிறுவனங்கள் மற்றும் பிற வணிகங்களுக்கான மெட்டா கட்டண முறையில் உள்ளது. தற்போதைய முறையில், வாடிக்கையாளர் ஒரு நிறுவனத்துக்கு வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பிய பிறகு குறிப்பிட்ட 24 மணி நேரத்துக்குள் சில சேவை சார்ந்த பதில்களை இலவசமாக அனுப்ப முடியும். இதில் ஆர்டர் உறுதிப்படுத்தல், டெலிவரி நிலை, வாடிக்கையாளர் சேவை தொடர்பான தகவல்கள் போன்ற பயன்பாட்டு மெசேஜ்கள் இடம்பெறுகின்றன.

36
அக்டோபர் முதல் புது ரூல்ஸ்
Image Credit : Google

அக்டோபர் முதல் புது ரூல்ஸ்

ஆனால் அக்டோபர் 1 முதல் இந்த 24 மணி நேர காலத்துக்குள் அனுப்பப்படும் குறிப்பிட்ட பயன்பாட்டு மெசேஜ்களுக்கும் கட்டணம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஒவ்வொரு வணிக தொலைபேசி எண்ணும் ஒரு மாதத்தில் முதல் 1,000 சேவை மெசேஜ்கள் இலவசமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அந்த வரம்பைத் தாண்டி அனுப்பப்படும் மெசேஜ்களுக்கு கட்டணம் பொருந்தும். இந்த கட்டணம் யாருக்கு என்பதுதான் பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம். வங்கிகள், இணையவழி வணிக நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளும் பிற நிறுவனங்கள்தான் இந்த கட்டணத்தை மெட்டாவுக்கு செலுத்த வேண்டும்.

46
வாட்ஸ்அப் மெசேஜ் கட்டணம்
Image Credit : Google

வாட்ஸ்அப் மெசேஜ் கட்டணம்

இந்தியாவில் பயன்பாட்டு மெசேஜ்களுக்கு ஒரு மெசேஜுக்கு ரூ.0.115, அதாவது 11.5 பைசா என்ற அடிப்படை கட்டணம் இருப்பதாக வழங்கப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு 18% சரக்கு மற்றும் சேவை வரி சேரும்போது ஒரு மெசேஜுக்கான தொகை சுமார் 14 பைசாவாகும். விளம்பரம் அல்லது சந்தைப்படுத்தல் மெசேஜ்களுக்கு இதைவிட அதிக கட்டணம் இருக்கலாம். ஒரு நிறுவனம் அனுப்பும் மெசேஜ்களின் வகை மற்றும் எண்ணிக்கையைப் பொறுத்து அதன் மொத்த செலவு மாறுபடும். இதனால் சாதாரண வாட்ஸ்அப் பயனர்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் நண்பருக்கு “ஹாய்” என்று மெசேஜ் அனுப்புவதற்கும், குடும்பத்தினருடன் உரையாடுவதற்கும் புதிய கட்டணம் எதுவும் வருவதில்லை.

56
வாட்ஸ்அப் பிசினஸ்
Image Credit : Google

வாட்ஸ்அப் பிசினஸ்

ஒரு நிறுவனத்திடம் ஆர்டர் தொடர்பாக வாட்ஸ்அப்பில் கேட்பதற்கும் வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. மாறாக, நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் குறிப்பிட்ட சேவைகளுக்கான செலவுதான். உதாரணமாக ஆன்லைனில் பொருள் வாங்கிய பிறகு வரும் ஆர்டர் உறுதிப்படுத்தல் அல்லது டெலிவரி தகவல் போன்ற மெசேஜ்களை பெறுவதற்காக வாடிக்கையாளர் தனியாக பணம் செலுத்த வேண்டியதில்லை.

66
வாட்ஸ்அப் பயனர்கள்
Image Credit : Google

வாட்ஸ்அப் பயனர்கள்

எனவே “அக்டோபர் 1 முதல் வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு காசு” என்ற தகவலை பொதுவான வாட்ஸ்அப் பயன்பாட்டுக்கான கட்டணமாகப் புரிந்துகொள்ளக் கூடாது. உண்மையில் மாற்றம் வாட்ஸ்அப் பிசினஸ் பிளாட்பாரம்-ஐ பயன்படுத்தும் நிறுவனங்களின் செய்தி கட்டணத்தில் வருகிறது. மேலும் வாட்ஸ்அப்புக்கு கிளிக் செய்யவும் விளம்பரங்கள் அல்லது பேஸ்புக் பக்கங்களில் உள்ள குறிப்பிட்ட தொடர்பு பொத்தான்கள் மூலம் தொடங்கும் உரையாடல்களுக்கு வழங்கப்படும் இலவச காலம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இதனால் வழக்கமான அரட்டை அனுபவத்தில் நேரடி கட்டண மாற்றம் இல்லை. நிறுவனங்கள் மட்டும் தங்களது வாடிக்கையாளர் தொடர்பு செலவுகளால் ஏற்படும் மாற்றத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் மேம்படுத்தல்
வாட்ஸ்அப் அம்சங்கள்
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
54 மணி நேர பேட்டரி, 3D ஆடியோ: களமிறங்கியது ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர்
Recommended image2
வெறும் 5.2 கிராம் எடையுள்ள அரிய இரட்டைத் தலை ஆமை: இயற்கையின் அபூர்வ அதிசயம்!
Recommended image3
AI யுகத்தில் இந்தியாவின் அடுத்த பெரிய புரட்சி இதுதான்.! சரியான சிப்களே வெற்றியின் ரகசியம் – ராஜீவ் சந்திரசேகர்
Related Stories
Recommended image1
54 மணி நேர பேட்டரி, 3D ஆடியோ: களமிறங்கியது ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர்
Recommended image2
Bluetooth speaker: ப்ளூடூத் ஸ்பீக்கர் வாங்கப் போறீங்களா? இந்த 7 விஷயங்களைத் தெரியாமல் வாங்காதீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved