- Home
- டெக்னாலஜி
- 7200mAh பேட்டரி, ஸ்டைலிஷ் லுக், நீருக்கடியில் போட்டோ எடுக்கலாம்... விவோ புதிய போனின் மிரள வைக்கும் அண்டர்வாட்டர் கேமரா பீச்சர்கள்!
7200mAh பேட்டரி, ஸ்டைலிஷ் லுக், நீருக்கடியில் போட்டோ எடுக்கலாம்... விவோ புதிய போனின் மிரள வைக்கும் அண்டர்வாட்டர் கேமரா பீச்சர்கள்!
50MP ஜீஸ் கேமரா மற்றும் 7200mAh பேட்டரியுடன் வெளியாகும் விவோ வி80 (Vivo V80) ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரங்களை பற்றி பார்போம்.

விவோவின் மிரட்டலான வி80 ஸ்மார்ட்போன்
கேமரா பிரியர்களைக் கவரும் வகையிலான அட்டகாசமான அம்சங்களுடன் விவோ வி80 (Vivo V80) ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது. 50 எம்பி ஜீஸ் நைட் டெலிபோட்டோ கேமரா, அண்டர்வாட்டர் வீடியோகிராபி மற்றும் ஏ.ஐ தீபாவளி போர்ட்ராய்டு 2.0 உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்தப் போன் வெளியாகவுள்ளது. வருகிற அக். 6ஆம் தேதி இந்திய சந்தையில் வெளியாகவிருக்கும் இந்த விவோ வி80 ஸ்மார்ட்போனின் அனைத்து சிறப்பம்சங்களும், அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்பாகவே விவோ மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக இதன் கேமரா அம்சங்கள் ஒட்டுமொத்த தொழில்நுட்ப உலகினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
கேமரா சிறப்பம்சங்கள்
சோனி லைட்டியா 700வி (Sony LYT-700V) சென்சாருடன் 50 எம்பி ஜீஸ் ஓஐஎஸ் மெயின் கேமரா வழங்கப்பட்டுள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்882 (SONY IMX882) சென்சார் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி ஜீஸ் நைட் டெலிபோட்டோ கேமரா இடம்பெற்றுள்ளது. இந்த கேமராவில் ஆட்டோ ஃபோகஸ் (Autofocus) மற்றும் 3x ஆப்டிகல் ஜூமிங் வசதி உள்ளது.
மேலும், இதில் 100x டிஜிட்டல் ஜூமிங், 8 எம்பி டெலிபோட்டோ கேமரா மற்றும் 50 எம்பி ஜீஸ் செல்பீ கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. ரியர் கேமரா மூலம் 4கே 60 எப்பிஎஸ் (4K 60fps) வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ள முடியும் என்பதால், சினிமா தரத்திலான அவுட்புட்டை எதிர்பார்க்கலாம். ஜீஸ் 100 எம்.எம் சென்டர்-ஸ்டேஜ் போர்ட்ராய்டு (ZEISS 100 mm Center-Stage Portrait) மற்றும் ஏஐ லைட்டிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் ஏஐ கிரியேட்டிவ் கேமரா (AI Creative Camera) கொடுக்கப்பட்டுள்ளது.
அண்டர்வாட்டர் (Underwater) எனப்படும் நீருக்கடியில் போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி செய்யும் வசதியுடன், லைவ் ஸ்டிக்கர் கோலாஜ் (Live Sticker Collage) சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய பயனர்களுக்காகப் பிரத்யேகமாக 'ஏஐ தீபாவளி போர்ட்ராய்டு 2.0' (AI Diwali Portrait 2.0) வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய லைட்டிங்கிற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட புகைப்படங்களை எடுத்துக்கொள்ள முடிவதுடன், பிரத்யேக தீபாவளி ஃபிரேம்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
மற்ற முக்கிய அம்சங்கள்
டிஸ்பிளே - 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.59 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதில் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. செயல்திறன் (Performance) - பிரீமியம் பர்ஃபாமென்ஸ் வழங்குவதற்காக ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Octa Core Snapdragon 7 Gen 4) சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த போன் ஓர்ஜின் ஓஎஸ் 7 உடன் ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) கொண்டு இயங்குகிறது.
பாதுகாப்பு மற்றும் வடிவமைப்பு - நீருக்கடியில் போட்டோ மற்றும் வீடியோ எடுக்கும் வசதிக்காக IP68 மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டைப்-சி போர்ட், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் ஐஆர் சென்சார் (IR Sensor) ஆகியவை இடம்பெற்றுள்ளன. நிறங்கள் - இந்த ஸ்மார்ட்போன் ஸ்டெல்லர் பிளாக், அரிசோனா ப்ளூ மற்றும் சன்ரைஸ் ஆன்த்தம் ஆகிய கலர்களில் வெளிவரவுள்ளது. பேட்டரி - 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட மிகப்பெரிய 7200mAh பேட்டரி இதில் வழங்கப்பட்டுள்ளது.
விலை விவரம்
இதன் அதிகாரப்பூர்வ விலை விவரங்கள் இன்னும் உறுதியாகவில்லை. இருப்பினும், இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை சுமார் ரூ. 63,000 அளவில் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

