MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Samsung Galaxy A08: ரூ.18,499 தான் விலை... 6,000mAh பேட்டரி, 50MP கேமரா, 6 ஆண்டு அப்டேட் கொண்ட சாம்சங் போன்

Samsung Galaxy A08: ரூ.18,499 தான் விலை... 6,000mAh பேட்டரி, 50MP கேமரா, 6 ஆண்டு அப்டேட் கொண்ட சாம்சங் போன்

Samsung Galaxy A08: சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய கேலக்சி A08 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ரூ.18,499 விலையில் வரும் இந்த போனில் 6,000mAh பேட்டரி, 50MP பின்புற கேமரா உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

2 Min read
Author : Raghupati R
Published : Oct 04 2026, 08:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
சாம்சங் கேலக்சி A08
Image Credit : Samsung

சாம்சங் கேலக்சி A08

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய கேலக்சி A08 ஸ்மார்ட்போனை ரூ.18,499 விலையில் அறிமுகம் செய்துள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒரே பதிப்பில் இந்த போன் கிடைக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் பிரத்யேக விற்பனை நிலையங்கள், முக்கிய சில்லறை கடைகள், நிறுவனத்தின் இணையதளம் மற்றும் பிற இணையவழி விற்பனை தளங்களில் போனை வாங்கலாம். கருநீலம், பச்சை மற்றும் வெள்ளி ஆகிய மூன்று வண்ணங்களில் இது கிடைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ஆறு மாதங்கள் வரை கூடுதல் வட்டி இல்லாத தவணை வசதி, சில நிதி நிறுவனங்கள் மூலம் ஒன்பது மாதங்கள் வரை தவணை வசதியும் வழங்கப்படுகிறது.

விலையைப் பொறுத்தவரை, அதிக பேட்டரி திறன், நல்ல கேமரா மற்றும் நீண்ட கால மென்பொருள் ஆதரவை எதிர்பார்க்கும் பயனர்களை இலக்காக வைத்து இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேலக்சி A08-ன் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அதன் நீண்ட கால மென்பொருள் ஆதரவு. இந்த போனுக்கு ஆறு தலைமுறை ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஆறு ஆண்டுகள் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என சாம்சங் தெரிவித்துள்ளது. இதனால் போனை நீண்ட காலம் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு இது கூடுதல் பயனாக இருக்கும். சாம்சங் Knox பாதுகாப்பு வசதியும் இதில் உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
கேலக்சி A08 வசதிகள்
Image Credit : Samsung

கேலக்சி A08 வசதிகள்

கடவுச்சொற்கள், தனிப்பட்ட தகவல்கள் மற்றும் உடல் அடையாளத் தகவல்களைப் பாதுகாக்க இது உதவுகிறது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த சில வசதிகளும் இதில் வழங்கப்பட்டுள்ளன. தேடல் 3.0, Google Gemini மற்றும் Perplexity ஆகியவற்றைப் பயன்படுத்த முடியும். மொபைலின் பட்டனை நீண்ட நேரம் அழுத்துவதன் மூலமாகவோ அல்லது குரல் கட்டளை மூலமாகவோ சில செயற்கை நுண்ணறிவு சேவைகளை அணுகலாம். டிஸ்பிளேவை பொறுத்தவரை கேலக்சி A08-l 6.7 இன்ச் அளவிலான HD+ PLS LCD டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது.

இதில் 90Hz புதுப்பிப்பு வீதம் இருப்பதால் இணையதளங்களை பார்ப்பது, சமூக வலைதளங்களில் ஸ்கிரால் மற்றும் பிற அன்றாட பயன்பாடுகள் சீராக இருக்க உதவும். செயல்திறனுக்காக MediaTek Helio G99+ செயலி பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனுடன் 4GB ரேம் மற்றும் 64GB உள் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. கூடுதல் ஸ்டோரேஜ் தேவைப்படுபவர்கள் microSD கார்டு மூலம் 2TB வரை விரிவாக்கிக்கொள்ளலாம். மேலும் Quick Share மற்றும் Modes & Routines போன்ற சாம்சங் நிறுவனத்தின் வழக்கமான வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் சாதாரண அன்றாட பயன்பாடுகளுக்கு தேவையான முக்கிய அம்சங்கள் ஒரே போனில் வழங்க சாம்சங் முயற்சி செய்துள்ளது என்றே கூறலாம்.

33
கேலக்சி A08 கேமரா
Image Credit : Samsung

கேலக்சி A08 கேமரா

புகைப்படங்களை எடுக்க கேலக்சி A08-ன் பின்புறத்தில் இரண்டு கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. 50MP முதன்மை கேமரா இடம்பெற்றுள்ளது. முன்புறத்தில் செல்ஃபி மற்றும் காணொலி அழைப்புகளுக்காக 8MP கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை 6,000mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் 25W வேகமான சார்ஜ் வசதியும் கிடைக்கிறது. போனின் தடிமன் 8mm ஆக உள்ளது. டிஸ்பிளேக்கு Corning Gorilla Glass 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தூசி மற்றும் லேசான நீர் தெறிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான IP64 மதிப்பீடு இதில் உள்ளது.

ரூ.18,499 விலையில் அறிமுகமாகியுள்ள கேலக்சி A08-l சாம்சங் முக்கிய மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. பெரிய 6,000mAh பேட்டரி, 50MP கேமரா மற்றும் நீண்ட கால மென்பொருள் ஆகியவை இதில் முக்கியமானவை. குறிப்பாக ஆறு தலைமுறை இயக்க முறைமை அப்டேட்கள் மற்றும் ஆறு ஆண்டுகள் பாதுகாப்பு அப்டேட்கள் என்ற அறிவிப்பு, இந்த விலையில் நீண்ட காலம் போனை பயன்படுத்த நினைப்பவர்கள் கவனிக்க வேண்டிய அம்சமாக உள்ளது. இதனுடன் 90Hz டிஸ்பிளே, 25W வேகமான சார்ஜ், கூடுதல் சேமிப்பக வசதி மற்றும் தூசி, நீர் பாதுகாப்பு ஆகியவையும் சேர்கின்றன. எனவே, அதிக பேட்டரி திறன் மற்றும் நீண்ட கால மென்பொருள் ஆதரவை முன்னுரிமையாகக் கொண்ட பயனர்கள் கேலக்சி A08 முக்கியமாக குறிவைக்கப்படுகிறது என்றே கூறலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சாம்சங்
நகர்பேசி
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bajaj Pulsar NS400Z: புதிய பஜாஜ் பல்சர் NS400Z அறிமுகம்! 5 இன்ச் TFT திரை.. விலை எவ்வளவு தெரியுமா?
Recommended image2
மாருதி கார்களுக்கு ரூ.1.36 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி.. எந்தெந்த மாடல்கள்? முழு லிஸ்ட் இதோ!
Recommended image3
Himalayan 440: ஹிமாலயன் 440க்கு செம டிமாண்ட்... 6 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு நிறுத்தம்!
Related Stories
Recommended image1
UPI Rule: அக்டோபர் 15 முதல் யுபிஐ-ல் புதிய விதி! ரூ.2,000க்கு மேல் பணம் செலுத்தினால் என்ன ஆகும்?
Recommended image2
Bajaj Pulsar NS400Z: புதிய பஜாஜ் பல்சர் NS400Z அறிமுகம்! 5 இன்ச் TFT திரை.. விலை எவ்வளவு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved