MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • UPI Rule: அக்டோபர் 15 முதல் யுபிஐ-ல் புதிய விதி! ரூ.2,000க்கு மேல் பணம் செலுத்தினால் என்ன ஆகும்?

UPI Rule: அக்டோபர் 15 முதல் யுபிஐ-ல் புதிய விதி! ரூ.2,000க்கு மேல் பணம் செலுத்தினால் என்ன ஆகும்?

UPI Charges Above Rs 2000: அக்டோபர் 15, 2026 முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் முக்கியமான மாற்றம் உள்ளது. புதிய விதியில் 0.4 சதவீத கட்டணம் வணிகரிடம் இருந்து வசூலிக்கப்படும். மக்கள் இதுகுறித்து தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை காண்போம்.

2 Min read
Author : Raghupati R
| Updated : Oct 04 2026, 08:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அக்டோபர் 15 முதல் புதிய விதிகள்
Image Credit : Gemini AI

அக்டோபர் 15 முதல் புதிய விதிகள்

இந்தியாவில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறை அக்டோபர் 15, 2026 முதல் புதிய மாற்றம் அமலுக்கு வருகிறது. குறிப்பிட்ட வணிகர்களுக்கு ரூ.2,000க்கு மேல் செய்யப்படும் யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத வணிகர் கட்டணம், அதாவது எம்டிஆர், வசூலிக்கப்படும். ஆனால் இதை பொதுமக்கள் நேரடியாக செலுத்த வேண்டிய கட்டணம் என்று நினைக்கக் கூடாது. இந்த கட்டணம் பொருட்கள் அல்லது சேவைகளுக்காக வணிகருக்கு செய்யப்படும் பணப்பரிவர்த்தனைக்கு பொருந்தும். தனிநபர் ஒருவர் தனது நண்பர், குடும்பத்தினர் அல்லது வேறு ஒருவருக்கு யுபிஐ மூலம் எவ்வளவு பணம் அனுப்பினாலும், அந்த பணப்பரிவர்த்தனைக்கு புதிய எம்டிஆர் இருக்காது. ரூ.2,000 வரையிலான பல வணிகர் யுபிஐ பரிவர்த்தனைகளும் தொடர்ந்து கட்டணமின்றி இருக்கும். சுமார் 96 சதவீத வணிகர் யுபிஐ பரிவர்த்தனைகள் இந்த புதிய கட்டணத்தால் பாதிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
0.4 சதவீத கட்டணம்
Image Credit : Gemini

0.4 சதவீத கட்டணம்

புதிய விதியில் 0.4 சதவீத கட்டணம் வணிகரிடம் இருந்து வசூலிக்கப்படும். உதாரணமாக, ரூ.10,000 மதிப்புள்ள பொருட்களை வாங்கி யுபிஐ மூலம் பணம் செலுத்தினால், அதற்கான எம்டிஆர் ரூ.40 ஆக இருக்கும். ரூ.2,000க்கு மேல் உள்ள குறிப்பிட்ட வணிகர் பரிவர்த்தனைகளுக்கே இந்த கட்டணம் பொருந்தும். மேலும் ரூ.75,000 மற்றும் அதற்கு மேல் உள்ள பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்ச எம்டிஆர் ரூ.300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறிய வணிகர்களுக்கும் சில விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. யுபிஐ மூலம் மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை பெறும் தகுதியுள்ள சிறு வணிகர்கள் பூஜ்ஜிய எம்டிஆர் அமைப்பில் தொடர்வார்கள். இதனால் தெருவோர சிறு வியாபாரிகள், சிறிய கடைகள் உள்ளிட்ட பலருக்கு புதிய கட்டணத்தின் தாக்கம் இருக்காது.

டிமார்ட்டில் கேரி பேக்குக்கு பணம் கொடுக்கிறீங்களா? இந்த தீர்ப்பை தெரிஞ்சுக்கோங்க

35
தனி கட்டண அமைப்பு
Image Credit : Asianet News

தனி கட்டண அமைப்பு

சில முக்கிய சேவைகளுக்கு தனி கட்டண அமைப்பு உள்ளது. ரயில், தொலைத்தொடர்பு, காப்பீடு மற்றும் எரிபொருள் போன்ற குறிப்பிட்ட துறைகளில் ரூ.2,000க்கு மேல் செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதத்திற்கு பதிலாக ரூ.5 என்ற நிலையான கட்டணம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எம்டிஆர்-ஐ வாடிக்கையாளர்களிடம் நேரடியாக மாற்றக் கூடாது என்று வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, கடையில் யுபிஐ மூலம் ரூ.10,000 செலுத்தியதற்காக வாடிக்கையாளரிடம் தனியாக ரூ.40 வசூலிப்பது இந்த கட்டண அமைப்பின் நோக்கம் அல்ல. எம்டிஆர் என்பது வணிகர் செலுத்த வேண்டிய கட்டணமாகவே அமைக்கப்பட்டுள்ளது.

45
புதிய கட்டண முறை
Image Credit : Gemini AI

புதிய கட்டண முறை

இந்த புதிய கட்டண முறைக்கு சில வணிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், யுபிஐ பயன்பாட்டிலிருந்து சிலர் மீண்டும் பணப் பரிவர்த்தனைக்கு மாறக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. இதனால் அக்டோபர் 15 முதல் ஏடிஎம்களில் போதுமான பணம் கிடைப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய எம்டிஆர் நடைமுறை தொடங்கும் காலத்தில் பணத்தின் தேவையில் தற்காலிக உயர்வு என்ற முன்னெச்சரிக்கையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

55
அக்டோபர் 15 முதல்
Image Credit : Asianet News

அக்டோபர் 15 முதல்

எனவே, அக்டோபர் 15 முதல் யுபிஐ முழுவதும் கட்டண சேவையாக மாறுகிறது என்று நினைப்பது தவறு. நண்பர் அல்லது குடும்பத்தினருக்கு பணம் அனுப்புவது போன்ற தனிநபர் பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாக இருக்கும். சிறிய தொகையிலான வணிகர் யுபிஐ பணப்பரிவர்த்தனைகளும் பெரும்பாலும் பாதிக்கப்படாது. ஆனால் குறிப்பிட்ட வணிகர்களுக்கு ரூ.2,000க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளில் 0.4 சதவீத எம்டிஆர் அமலுக்கு வருகிறது. இதன் செலவை வாடிக்கையாளர்களிடம் மாற்றாமல் இருப்பதை உறுதி செய்ய அரசு கண்காணிப்பையும் மேற்கொள்ள உள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற இடைமுகம்
UPI கொடுப்பனவு
UPI பரிவர்த்தனைகள்
இந்திய ரிசர்வ் வங்கி
வணிகம்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
-
Day 1
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜியோவின் பிரம்மாண்ட சந்தைப் அறிமுகம்: இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க வணிகக் குழுமமாக ரிலையன்ஸ் முதலிடம்
Recommended image2
How to Become Rich: பணக்காரராக ஆசையா? உங்களிடம் இந்த 5 குணங்கள் இருக்கிறதா?
Recommended image3
ரூ.1 லட்சத்தை அப்படியே ரூ.2 லட்சமாகும்: போஸ்ட் ஆபீஸ் டாப் 4 சேமிப்புத் திட்டங்கள்!
Related Stories
Recommended image1
Gold : தங்கத்தை அடமானம் வைக்குறதா? விக்குறதா? சில நேரம் விற்பதே ஏன் நல்லது தெரியுமா?
Recommended image2
FD Invest : பெரிய வங்கிகளை விட அதிக வட்டி தரும் குட்டி வங்கிகள்! எந்த வங்கியில் எவ்வளவு FD வட்டி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved