MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • FD Invest : பெரிய வங்கிகளை விட அதிக வட்டி தரும் குட்டி வங்கிகள்! எந்த வங்கியில் எவ்வளவு FD வட்டி?

FD Invest : பெரிய வங்கிகளை விட அதிக வட்டி தரும் குட்டி வங்கிகள்! எந்த வங்கியில் எவ்வளவு FD வட்டி?

FD Invest : SBI, HDFC போன்ற பெரிய வங்கிகளைக் காட்டிலும் சில சிறிய நிதி வங்கிகள் குறிப்பிட்ட காலத்துக்கு அதிக FD வட்டி வழங்குகின்றன. தற்போதைய வட்டி விகிதங்கள், கால அவகாசம், கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

3 Min read
Author : Arun Mozhi Varman
Published : Oct 04 2026, 01:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பெரிய வங்கிகளில் 6% முதல் 6.5% வரை.. சில குட்டி வங்கிகளில் 8%க்கு மேல்!
Image Credit : Asianet News

பெரிய வங்கிகளில் 6% முதல் 6.5% வரை.. சில குட்டி வங்கிகளில் 8%க்கு மேல்!

பாதுகாப்பான முதலீடு வேண்டும் என்று நினைப்பவர்கள் பலரும் முதலில் வங்கியின் FD-யைத்தான் தேர்வு செய்கிறார்கள். பொதுவாக SBI, HDFC Bank போன்ற பெரிய வங்கிகளின் பெயர்கள் நம் நினைவுக்கு வரும். ஆனால் சில சிறு நிதி வங்கிகள் குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு பெரிய வங்கிகளைவிட அதிக வட்டி வழங்குகின்றன.

தற்போதைய வட்டி விகிதங்களைப் பார்த்தால், சில சிறு நிதி வங்கிகளில் பொதுவான வாடிக்கையாளர்களுக்கே 8%க்கு மேல் FD வட்டி கிடைக்கிறது. உதாரணமாக, ஜனா சிறு நிதி வங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் முதல் 3 ஆண்டுகள் வரையிலான FD-க்கு 8% வழங்குகிறது. ஷிவாலிக் சிறு நிதி வங்கி 23 மாதங்கள் 1 நாள் முதல் 27 மாதங்கள் வரையிலான FD-க்கு 8% வழங்குகிறது. சூர்யோதய் சிறு நிதி வங்கியில் 5 ஆண்டு FD-க்கு 8.25% வட்டி உள்ளது. அப்படியென்றால் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி கிடைக்கிறது?

இதையும் படிங்க : Gold : தங்கத்தை அடமானம் வைக்குறதா? விக்குறதா? சில நேரம் விற்பதே ஏன் நல்லது தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
8%க்கு மேல் வட்டி தரும் குட்டி வங்கிகள் எவை?
Image Credit : freepik

8%க்கு மேல் வட்டி தரும் குட்டி வங்கிகள் எவை?

சூர்யோதய் சிறு நிதி வங்கி

தற்போதைய வட்டி அட்டவணையின்படி, பொதுவான வாடிக்கையாளர்களுக்கு 5 ஆண்டு FD-க்கு 8.25% வட்டி வழங்கப்படுகிறது. இதே காலத்துக்கு மூத்த குடிமக்களுக்கு 8.50% கிடைக்கிறது. 30 மாத FD-க்கு பொதுவான வாடிக்கையாளர்களுக்கு 8.10% உள்ளது.

ஜனா சிறு நிதி வங்கி

2 ஆண்டுகளுக்கு மேல் முதல் 3 ஆண்டுகள் வரையிலான FD-க்கு பொதுவான வாடிக்கையாளர்களுக்கு 8%, மூத்த குடிமக்களுக்கு 8.30% வட்டி வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு மேல் முதல் 5 ஆண்டுகள் வரையிலான காலத்துக்கு 7.77% உள்ளது.

ஷிவாலிக் சிறு நிதி வங்கி

23 மாதங்கள் 1 நாள் முதல் 27 மாதங்கள் வரையிலான FD-க்கு பொதுவான வாடிக்கையாளர்களுக்கு 8%, மூத்த குடிமக்களுக்கு 8.25% வட்டி வழங்கப்படுகிறது.

இங்கே முக்கியமான விஷயம் என்னவென்றால், 8% அல்லது 8.25% என்பது எல்லா கால அவகாசத்துக்கும் கிடைக்கும் வட்டி அல்ல. குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இந்த அதிகபட்ச வட்டி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : Vegetables Biriyani : 5 காய்கறிகள், 5 பிரியாணி! வேற லெவல் டேஸ்ட்! சிக்கன், மட்டனெல்லாம் வேஸ்ட்!

35
SBI, HDFC போன்ற பெரிய வங்கிகளில் எவ்வளவு FD வட்டி?
Image Credit : stockPhoto

SBI, HDFC போன்ற பெரிய வங்கிகளில் எவ்வளவு FD வட்டி?

சிறு நிதி வங்கிகளின் வட்டியைப் பார்க்கும்போது, பெரிய வங்கிகளின் வட்டியையும் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம்.

SBI

ரூ.3 கோடிக்கும் குறைவான சாதாரண FD-களில் 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்குக் குறைவான காலத்துக்கு 6.25%, 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்குக் குறைவான காலத்துக்கு 6.40%, 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்குக் குறைவான காலத்துக்கு 6.30% வட்டி வழங்கப்படுகிறது. 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD-க்கு 6.05% உள்ளது.

HDFC Bank

ரூ.3 கோடிக்கும் குறைவான FD-களில் 1 ஆண்டு முதல் 15 மாதங்களுக்குக் குறைவான காலத்துக்கு 6.25%, 18 முதல் 21 மாதங்களுக்குக் குறைவான காலத்துக்கு 6.45%, 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 4 ஆண்டுகள் 7 மாதங்களுக்குக் குறைவான காலத்துக்கு 6.50% வட்டி வழங்கப்படுகிறது.

அதாவது, குறிப்பிட்ட காலங்களை ஒப்பிடும்போது சில சிறு நிதி வங்கிகளின் 8%–8.25% வட்டி, பெரிய வங்கிகளின் சுமார் 6%–6.5% வட்டியை விட அதிகமாக இருக்கிறது. ஆனால் வட்டி விகிதத்தை மட்டும் வைத்து முடிவு செய்யக்கூடாது.

இதையும் படிங்க : Delivery Box : எல்லா பார்சல் பெட்டிகளும் ஏன் பிரவுன் கலர்ல இருக்கு? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணமா?

45
மூத்த குடிமக்களுக்கு இன்னும் அதிக வட்டி!
Image Credit : our own

மூத்த குடிமக்களுக்கு இன்னும் அதிக வட்டி!

சிறு நிதி வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கு பொதுவான வாடிக்கையாளர்களை விட கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. சூர்யோதய் சிறு நிதி வங்கியில் 5 ஆண்டு FD-க்கு பொதுவான வாடிக்கையாளர்களுக்கு 8.25% என்றால், மூத்த குடிமக்களுக்கு 8.50% கிடைக்கிறது. ஜனா சிறு நிதி வங்கியில் 2 ஆண்டுகளுக்கு மேல் முதல் 3 ஆண்டுகள் வரையிலான காலத்துக்கு 8.30%, ஷிவாலிக் சிறு நிதி வங்கியில் 23 மாதங்கள் 1 நாள் முதல் 27 மாதங்கள் வரையிலான காலத்துக்கு 8.25% வட்டி கிடைக்கிறது.

அதேபோல் பெரிய வங்கிகளிலும் மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி உள்ளது. உதாரணமாக, HDFC Bank-ல் 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 4 ஆண்டுகள் 7 மாதங்களுக்குக் குறைவான FD-க்கு பொதுவான வாடிக்கையாளர்களுக்கு 6.50% என்ற நிலையில், மூத்த குடிமக்களுக்கு 7.10% வழங்கப்படுகிறது. எனவே மூத்த குடிமக்கள் FD தேர்வு செய்யும்போது தனியாக வழங்கப்படும் வட்டி விகிதத்தையும் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க : Post Office : பிரதமர் மோடியே முதலீடு செய்த போஸ்ட் ஆபீஸ் திட்டம்! ரூ.1,000-ல் தொடங்கலாம்!

55
8% வட்டி பார்த்ததும் உடனே FD போடாதீங்க! இந்த விஷயங்களை பாருங்க!
Image Credit : stockphoto

8% வட்டி பார்த்ததும் உடனே FD போடாதீங்க! இந்த விஷயங்களை பாருங்க!

முதலில் கால அவகாசத்தை பாருங்கள்: அதிகபட்ச வட்டி எந்த காலத்துக்கு வழங்கப்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். 8.25% கிடைக்கிறது என்பதற்காக 1 ஆண்டு FD-க்கும் அதே வட்டி கிடைக்கும் என்று நினைக்கக்கூடாது. முன்கூட்டியே பணம் எடுத்தால் என்ன ஆகும்? ஒவ்வொரு வங்கிக்கும் முன்கூட்டியே FD-யை முடிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் அபராதங்கள் இருக்கலாம். உதாரணமாக, ஷிவாலிக் வங்கியின் தற்போதைய விதிகளில் முன்கூட்டிய முடிப்புக்கு வட்டி கணக்கீட்டில் 1% அபராதம் குறிப்பிடப்பட்டுள்ளது.

₹5 லட்சம் காப்பீடு: வங்கியின் FD, சேமிப்புக் கணக்கு உள்ளிட்ட தகுதியான வைப்புகளுக்கு டெபாசிட் இன்சூரன்ஸ் அண்ட் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (DICGC) மூலம் ஒரு வங்கியில், ஒரே உரிமை மற்றும் ஒரே திறனில் வைத்திருக்கும் அசல் + வட்டிக்கு சேர்த்து அதிகபட்சம் ₹5 லட்சம் வரை காப்பீடு உள்ளது. ஒரே வங்கியின் பல கிளைகளில் வைத்திருக்கும் தொகைகள் ஒன்றாகக் கணக்கிடப்படும். வெவ்வேறு வங்கிகளில் வைத்திருக்கும் வைப்புகளுக்கு காப்பீட்டு வரம்பு தனித்தனியாகப் பொருந்தும்.

அதனால் அதிக வட்டி = சிறந்த FD என்று மட்டும் முடிவு செய்யாமல், வட்டி விகிதம், கால அவகாசம், முன்கூட்டியே பணம் எடுக்கும் விதிமுறைகள், காப்பீட்டு வரம்பு ஆகியவற்றை பார்த்து முதலீடு செய்வதே முக்கியம்.

இதையும் படிங்க : Lakshmi Narayan Yogam : சுக்கிரன்-புதன் சேர்க்கை! அக்டோபரில் பணம், தொழிலில் முன்னேற்றம் பெறும் 5 ராசிகள்?

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வணிகம்
நிலையான வைப்பு வட்டி விகிதம்
 
2nd TEST • SA vs AUS
Live
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(72.0 ov) 99 & 203/4
Day 5 - Session 1
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
5000 Withdrawal Limit: இந்த வங்கியில் ரூ.5,000 மட்டுமே எடுக்க முடியும்! ரிசர்வ் வங்கி அதிரடி
Recommended image2
புது கார் வாங்க பிளான் பண்றீங்களா? ஈஎம்ஐ மட்டும் பாக்காதீங்க: தவிர்க்க வேண்டிய 5 முக்கிய தவறுகள்!
Recommended image3
DA Hike: இன்னும் முடிவாகாத அகவிலைப்படி உயர்வு! தீபாவளிக்கு நிலுவைத் தொகையுடன் சம்பளம் ஏறுமா?
Related Stories
Recommended image1
Post Office : பிரதமர் மோடியே முதலீடு செய்த போஸ்ட் ஆபீஸ் திட்டம்! ரூ.1,000-ல் தொடங்கலாம்!
Recommended image2
FD & RD : எந்த வங்கியில் எவ்வளவு வட்டி தருகிறார்கள்? முதலீடு செய்வதற்கு முன் இதை தெரிஞ்சுக்கோங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved