திருமண புகைப்படங்களுக்கு சூப்பரான Vivo V60 5G.. பவர்ஹவுசாக தெறிக்குது!
விவோ நிறுவனம் புதிய V60 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ZEISS தொழில்நுட்பத்துடன் கூடிய சிறப்பு கேமரா அம்சங்கள், அழகான வடிவமைப்பு மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் கொண்டது.

விவோ வி60 5ஜி அறிமுகம்
விவோ தனது புதிய தலைமுறை V சீரீஸ் ஸ்மார்ட்போனான விவோ வி60 5ஜி (Vivo V60 5G)-ஐ இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. திருமண புகைப்படங்கள், போர்ட்ரெய்ட் ஷாட்டுகள் மற்றும் ZEISS தொழில்நுட்பத்துடன் கூடிய சிறப்பு கேமரா அம்சங்கள், இது புகைப்பட ஆர்வலர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கலாம். கேமராவுடன் சேர்த்து அழகான வடிவமைப்பு, நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் பல AI வசதிகளும் இதில் இடம் பெற்றுள்ளன. ஆரம்ப விலை ரூ.36,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வடிவமைப்பு மற்றும் திரை
விவோ வி60 5ஜி மொபைல் ஆனது மெல்லிய டிசைனுடன் வருகிறது. புதிய கேமரா மாட்யூல் வடிவமைப்பு V சீரியஸுக்கு மேலும் நவீன தோற்றத்தை வழங்குகிறது. 6.77 அங்குல குவாட் கர்வ் டிஸ்ப்ளே, 120Hz ரிஃப்ரெஷ் ரேட் மற்றும் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வசதி உள்ளது. நீர், தூசி எதிர்ப்பு தரச்சான்றான IP68 & IP69 ரேட்டிங்கும் உள்ளது.
கேமரா வசதிகள்
பின்புறத்தில் 50MP ZEISS OIS பிரதான கேமரா (Sony IMX766 சென்சார்), 50MP ZEISS சூப்பர் டெலிபோட்டோ லென்ஸ் (Sony IMX882 சென்சார்) மற்றும் 8MP அல்ட்ரா வைடு கேமரா அமைப்பு உள்ளது. முன்புறம் 50MP ZEISS குழு செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 10x Telephoto Stage Portrait, Wedding vLog, ZEISS Multifocal Portrait போன்ற புதிய அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
செயல்திறன் மற்றும் மென்பொருள்
Snapdragon 7 Gen 4 பிராசஸர், அதிகபட்சம் 16GB LPDDR4X RAM மற்றும் 512GB UFS 2.2 ஸ்டோரேஜ் வசதியுடன் வருகிறது. Android 15 அடிப்படையிலான Funtouch OS 15 இயங்குதளத்துடன், 4 ஆண்டுகள் சாப்ட்வேர் அப்டேட் மற்றும் 6 ஆண்டுகள் பாதுகாப்பு அப்டேட் வழங்கப்படும். AI Four Season Portrait, AI Magic Move, AI Reflection Removal போன்ற AI அம்சங்களும் இதில் உள்ளன.
பேட்டரி மற்றும் விலை
6,500mAh பேட்டரி கொண்ட இதில் 90W FlashCharge ஆதரவு உள்ளது. இந்த விவோ சமர்ட்போன் மூன்று நிறங்களில் கிடைக்கும் என்றும், 8GB+128GB மாடலின் ஆரம்ப விலை ரூ.36,999. ஆகஸ்ட் 19 முதல் விற்பனை தொடங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.