MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Vivo V50: பட்ஜெட் விலையில் களமிறங்கும் விவோ ஸ்மார்ட்போன்; என்னென்ன சிறப்பம்சங்கள்?

Vivo V50: பட்ஜெட் விலையில் களமிறங்கும் விவோ ஸ்மார்ட்போன்; என்னென்ன சிறப்பம்சங்கள்?

விவோ நிறுவனம் விவோ V50 மாடல் ஸ்மார்ட்போனை பிப்ரவரி மாத இறுதிக்குள் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த போனின் விலை, சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
| Updated : Feb 02 2025, 05:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vivo V50: பட்ஜெட் விலையில் களமிறங்கும் விவோ ஸ்மார்ட்போன்; என்னென்ன சிறப்பம்சங்கள்?

Vivo V50: பட்ஜெட் விலையில் களமிறங்கும் விவோ ஸ்மார்ட்போன்; என்னென்ன சிறப்பம்சங்கள்?

விவோ நிறுவனம் இந்தியாவில் Vivo V50 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. விவோ நிறுவனம் இன்னும் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், விவோ V50  மாடல் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், விவோ V50  ஸ்மார்ட்போனின் விலை, அதன் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட தகவல்கள் கசிந்துள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பாக்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
விவோ V50 ஸ்மார்ட்போன்

விவோ V50 ஸ்மார்ட்போன்

விவோ V50 மாடல் போனின் விலை இந்தியாவில் ரூ.37,999 ஆக நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், ரூ.40,000 க்கும் குறைவாகவே இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த விலை விவோ V40 மாடலை விட சற்று அதிகரித்து இருக்கும் என தெரிகிறது. ஏனெனில்  விவோ V40 ரூ.34,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் விவோ V50 முந்தைய மாடலை விட ரூ.3,000 விலை உயர்வைக் காணலாம்.

புதிதாக களமிறங்கும் 6 ஸ்மார்ட்போன்கள்.. மொபைல் பிரியர்கள் செம வெயிட்டிங்!

34
விவோ V50 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

விவோ V50 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

விவோ V50 மாடலின் சிறப்பம்சங்களை பொறுத்தவரை வலுவான செயல்திறனை வழங்கும் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 சிப்செட்டால் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அன்றாட பயன்பாடு மற்றும் கேமிங்கிற்கு ஏற்றதாக அமைகிறது.

கேமராக்கள்: இரட்டை பின்புற கேமரா அமைப்பில் இரண்டு 50 மெகாபிக்சல் சென்சார்கள் இடம்பெறும். இது உயர்தர புகைப்படத்தை எடுக்க உதவுகிறது. முன்பக்கத்தில் விவோ V40 மாடலில் இருக்கும் 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இதிலும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரி: Vivo V50, V40 மாடலில் 5,500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் விவோ V50 மாடல் இதை விட பெரிய பேட்டரியாக 6,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.

44
விவோ V50 போனின் விலை

விவோ V50 போனின் விலை

சார்ஜிங் வேகம்: 90W பாஸ்ட் சார்ஜிங் உள்ளதால் பயனர்கள் பயனடைவார்கள். இது விவோ V40 மாடலின் 80W சார்ஜிங் வேகத்தை விட அதிகமாகும். இதனால் நீண்ட நேரம் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த முடியும். 

நீர் மற்றும் தூசி எதிர்ப்பு: IP68 மற்றும் IP69 மதிப்பீடுகளுடன் விவோ V50  மாடல் வரலாம். இது நீர் மற்றும் தூசிக்கு மிகவும் எதிர்ப்புத் தெரிவிக்கும். இது பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் பொதுவாகக் காணப்படும் அம்சமாகும்.

வடிவமைப்பு: விவோ V50 மாடல் ஸ்மார்ட்போன் V40 மாடலின் வடிவமைப்பைத் தக்கவைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் நீடித்து உழைக்கும் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும். இந்த போனின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Flipkart Offer: எல்ஜி, வோல்டாஸ் 'ஏசி'பிராண்ட்களுக்கு பாதிக்கு பாதி விலை குறைப்பு!!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தொழில்நுட்பம்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
இருளிலிருந்து உருவான பிரபஞ்சம்: 1,300 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன? ஹப்பிள் தொலைநோக்கி வெளியிட்ட உண்மை!
Recommended image2
40 மணி நேரம் பேட்டரி, 1வருட இலவச சப்ஸ்கிரிப்ஷன்: அறிமுகமானது 'நாய்ஸ் பட்ஸ் ஆர்1 கானா எடிஷன்'!
Recommended image3
பி.எஸ்.என்.எல் ரூ.1499 vs ரூ.1999: 300 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி தரும் திட்டங்களில் எது பெஸ்ட்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved