ப்ளிப்கார்ட்டில் எல்ஜி, வோல்டாஸ் உள்ளிட்ட ஏசி பிராண்ட்களுக்கு பாதிக்கு பாதி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த சூப்பர் ஆபர் குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

கோடை வெயில் ஆரம்பம் 

இந்தியாவில் ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் விற்பனையில் முன்னணியில் உள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பதற்காக போட்டி போட்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் உள்ளிட்ட அனைத்து மின்சாதன பொருட்களுக்கும் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், குளிர்காலம் முடிந்து கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிடட் நிலையில், பிளிப்கார்ட்டில் ஸ்ப்ளிட் ஏசிகளுக்கு மிகப்பெரிய விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த கோடையில் நீங்கள் ஒரு ஏர் கண்டிஷனரை வாங்கத் திட்டமிட்டிருந்தால், இப்போது தான் சரியான நேரம். ஏனெனில் பிளிப்கார்ட் சிறந்த பிராண்டுகளின் 1.5 டன் ஸ்ப்ளிட் ஏசிகளுக்கு அதிரடி தள்ளுபடி வழங்குகிறது. சாம்சங், ப்ளூ ஸ்டார், டைகின், வோல்டாஸ், எல்ஜி, கேரியர் மற்றும் ஓ-ஜெனரல் போன்ற பிரபலமான பிராண்டுகளின் பிரீமியம் ஸ்ப்ளிட் ஏசிகளும் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

டைகின் 1.5 டன் 5 ஸ்டார் ஸ்பிளிட் இன்வெர்ட்டர் ஏசி

டைகின் ஸ்பிளிட் இன்வெர்ட்டர் ஏசியின் அசல் விலை ரூ.67,200 ஆகும். இந்த மாடலுக்கு ப்ளிப்கார்ட்டில் 32% தள்ளுபடி வழங்கப்படுவதால் ரூ.45,490 என்ற விலையில் வாங்கிக் கொள்ள முடியும். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் மூலம் கூடுதலாக ரூ.5,100 தள்ளுபடி பெற முடியும். இந்த இன்வெர்ட்டர் ஏசி 2.5 ஃபில்டர் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் சுத்தமான காற்றையும் உறுதி செய்கிறது.

வோல்டாஸ் 1.5 டன் 3 ஸ்டார் ஸ்பிளிட் ஏசி 

வோல்டாஸ் ஸ்பிளிட் ஏசி மாடலுக்கு ப்ளிப்கார்ட்டில் 46% தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதனால் ரூ.62,900 என்ற விலை கொண்ட இந்த மாடலை ரூ.33,990க்கு வாங்கிக் கொள்ள முடியும். மேலும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் இதை வாங்கினால் கூடுதலாக 5% கேஷ்பேக் பெறலாம். 

ப்ளூ ஸ்டார் 1.5 டன் 3 ஸ்டார் ஸ்பிளிட் இன்வெர்ட்டர் ஏசி 

ப்ளூ ஸ்டார் ஸ்பிளிட் இன்வெர்ட்டர் ஏசியின் அசல் விலை ரூ.64,250 ஆகும். இந்த மாடலுக்கு 42% தள்ளுபடி அளிக்கப்படுவதால் ரூ.36,990க்கு உங்களால் வாங்கிக் கொள்ள முடியும். மேலும் எக்ஸ்சேஞ்ச் சலுகை மூலம் ரூ.5,100 தள்ளுபடி பெற முடியும். இந்த ஏசி வைஃபை இணைப்புடன் வருகிறது. இது நவீன வீடுகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். 

ஓ-ஜெனரல் 1.5 டன் 3 ஸ்டார் ஸ்பிளிட் இன்வெர்ட்டர் ஏசி 

ஓ-ஜெனரல் இன்வெர்ட்டர் ஏசி மாடலுக்கு 55% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது ரூ.1,11,180 என்ற விலைக்கு அறிமுகமான இந்த மாடலை இப்போது ரூ.49,990க்கு வாங்கிக் கொள்ள முடியும். மிகப்பெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஓ-ஜெனரல் ஏசி சக்திவாய்ந்த செயல்திறனுடன் அதிக குளிரை வழங்கும்.

எல்ஜி சூப்பர் கன்வெர்டிபிள் 5 இன் 1 கூலிங் 1.5 டன் ஸ்பிளிட் ஏசி 

எல்ஜி ஏசி மாடலின் அசல் விலை ரூ.89,990 ஆகும். இதற்கு 49% தள்ளுபடி வழங்கப்படுவதால் ரூ.45,790க்கு வாங்கிக் கொள்ளலாம். இந்த எல்ஜி மாடல் ஹாட் & கோல்ட் மோட் + ஆன்டி-வைரஸ் பாதுகாப்புடன் கூடிய எச்டி ஃபில்டர் அம்சத்தை கொண்டுள்ளது. இதன் ஸ்மார்ட் கூலிங் அம்சங்கள் கடும் கோடையிலும் குளிர்ந்த சூழ்நிலையை கொண்டு வருகிறது.