யப்பா உண்மையாவே மாஸ் தான்.. 50MP IMX882 கேமரா.. வளைந்த டிஸ்பிளே.. 80W சார்ஜிங்.. விவோவின் புது போன்!
விவோ தனது புதிய ஸ்மார்ட்போனான விவோ டி3 ப்ரோ 5ஜியை ஆகஸ்ட் 27 அன்று அறிமுகப்படுத்த உள்ளது. 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 4,500nits உச்ச பிரகாசத்துடன் கூடிய வளைந்த AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும். ஸ்னாப்டிராகன் 7 Gen 3 சிப்பைக் கொண்டிருக்கும்.
Vivo T3 Pro 5G
விவோ தனது புதிய டி-சீரிஸ் ஸ்மார்ட்போனான விவோ டி3 ப்ரோ 5ஜியை (Vivo T3 Pro 5G) ஆகஸ்ட் 27 அன்று அறிமுகப்படுத்த உள்ளது. இது அதன் முன்னோடியான விவோ டி3 5ஜியை இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்ட பிறகு வருகிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். விவோ டி3 ப்ரோ 5ஜி ப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரவுள்ளது. விவோ டி3 ப்ரோ 5ஜி ஆனது 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 4,500nits உச்ச பிரகாசத்துடன் கூடிய வளைந்த AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
Vivo
விவோ டி3 ப்ரோ 5ஜி பின்புறம் லெதர் ஃபினிஷ் மற்றும் மெட்டாலிக் ஃப்ரேமுடன் வருகிறது. விவோ நிறுவனம் இதனை 7.49 தடிமன் கொண்ட "பிரிவின் மெலிதான வளைந்த ஸ்மார்ட்போன்" என்று கூறுகிறது. Vivo T3 Pro ஆனது iQOO Z9s Pro போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விவோவின் இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வெவ்வேறு வண்ணங்களில் வருகிறது.
Vivo T3 Pro 5G Specs
அவை மணற்கல் ஆரஞ்சு மற்றும் எமரால்டு பச்சை ஆகும். விவோ டி3 ப்ரோ ஆனது ஸ்னாப்டிராகன் 7 Gen 3 சிப்பைக் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. 80W சார்ஜிங் ஆதரவுடன் 5500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமராவுடன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vivo T3 Pro 5G In India
விவோ டி3 ப்ரோ முன்பக்க கேமரா செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16 மெகாபிக்சல் லென்ஸைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் எந்த அளவுக்கு உண்மையுள்ளது என்பது தெரியவில்லை. இது 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை உள்ளக சேமிப்பகத்துடன், சேமிப்பகத்தை விரிவாக்கும் விருப்பத்துடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Vivo T3 Pro 5G Launch
மென்பொருளைப் பொறுத்தவரை, வரவிருக்கும் Vivo மொபைலில் FunTouch OS 14 இடம்பெறக்கூடும். இது Android 14 ஐ அடிப்படையாகக் கொண்டது. விவோ டி3 ப்ரோ 5ஜியின் ஆரம்ப விலை ரூ 26,000 இல் தொடங்கலாம் என்றும் டெக் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஸ்மார்ட்போன்பின் சரியான விலை ஆகஸ்ட் 27, 2024 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மட்டுமே உறுதி செய்யப்படும்.
3% அதிகரிப்பு எப்போ தெரியுமா? பறந்து வந்த 7வது சம்பள கமிஷன் அப்டேட்.. செக் பண்ணுங்க!