- Home
- டெக்னாலஜி
- எச்சரிக்கை! கூகுள் பே, போன் பே, பேடிஎம் , UPI யூஸ் பண்றீங்களா? ஏப்ரல் 1 முதல் புதிய நடைமுறை
எச்சரிக்கை! கூகுள் பே, போன் பே, பேடிஎம் , UPI யூஸ் பண்றீங்களா? ஏப்ரல் 1 முதல் புதிய நடைமுறை
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் புரட்சியை ஏற்படுத்திய UPI (Unified Payments Interface) சேவையில், ஏப்ரல் 1, 2025 முதல் முக்கிய மாற்றம் ஒன்று அமலுக்கு வருகிறது.

தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத மொபைல் எண்கள், வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருந்தால், அவை UPI சேவையிலிருந்து நீக்கப்படும். அதாவது, PhonePe, Paytm, Google Pay போன்ற செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது.
சைபர் குற்றங்கள் அதிகரிப்பு:
இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணம், அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் தான். நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத எண்கள், தொழில்நுட்ப கோளாறுகளை ஏற்படுத்தி, மோசடிகளுக்கு வழிவகுக்கலாம் என NPCI எச்சரித்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள், பயன்படுத்தப்படாத எண்களை மீண்டும் மற்றவர்களுக்கு வழங்கும் போது, மோசடி செய்பவர்கள் அவற்றை பயன்படுத்தி வங்கி கணக்குகளில் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது.
பயனர்கள் கவனத்திற்கு:
UPI சேவையை தடையின்றி பயன்படுத்த, உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் செயல்பாட்டில் உள்ளதா என்பதை உறுதி செய்வது அவசியம். உங்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு, உங்கள் எண்ணின் நிலையை சரிபார்க்கவும். நீண்ட காலமாக ரீசார்ஜ் செய்யாமல் அல்லது பயன்படுத்தாமல் இருந்தால், உடனடியாக அதை ரீசார்ஜ் செய்து செயல்பாட்டுக்கு கொண்டு வாருங்கள். அல்லது, உங்கள் வங்கி கணக்கில் புதிய மொபைல் எண்ணை இணைக்கவும்
வங்கி மற்றும் UPI செயலிகளுக்கு உத்தரவு:
செயல்படாத மொபைல் எண்களின் பதிவுகளை வாரந்தோறும் சரிபார்க்கும்படி வங்கிகள் மற்றும் UPI செயலிகளுக்கு NPCI உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், செயல்பாட்டில் உள்ள எண்கள் மட்டுமே வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டு, சைபர் குற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எச்சரிக்கை:
UPI செயலியை தொடர்ந்து பயன்படுத்த, உங்கள் மொபைல் எண்ணை உடனடியாக சரிபார்க்கவும். ஏப்ரல் 1, 2025 க்குள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தவறினால், உங்கள் UPI சேவை முடக்கப்படும்.
இதையும் படிங்க: டெபிட் கார்டு வேண்டாம்! ஆதார் OTP மூலம் UPI PIN மாற்றுவது எப்படி?
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.