MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • டெபிட் கார்டு வேண்டாம்! ஆதார் OTP மூலம் UPI PIN மாற்றுவது எப்படி?

டெபிட் கார்டு வேண்டாம்! ஆதார் OTP மூலம் UPI PIN மாற்றுவது எப்படி?

UPI சேவைகள் நாட்டில் வேகமாக விரிவடைகின்றன. ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் UPI பரிவர்த்தனைகளைச் செய்கிறார்கள். நொடிகளில் பணம் அனுப்பும் வாய்ப்பு இருப்பதால் பலர் UPI முறையை விரும்புகிறார்கள்.

2 Min read
Author : SG Balan
Published : Mar 19 2025, 12:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
UPI transactions

UPI transactions

ஒரு காலத்தில் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் அனுப்ப வேண்டும் என்றால், வங்கிக்குச் செல்ல வேண்டும். இப்போது எல்லாமே எளிமையாகிவிட்டது. UPI மூலம் சில நொடிகளில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

26
UPI PIN

UPI PIN

UPI பரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாக வைத்திருக்க பிரத்யேகமான PIN நம்பர் இருக்கும். இது உங்கள் UPI பேமெண்டுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் 4 முதல் 6 இலக்கங்கள் கொண்ட குறியீடாகும். இது பரிவர்த்த  னைக்கான அங்கீகாரத்தை வழங்கும் பாஸ்வேர்டு போல செயல்படுகிறது. இது டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.

36
UPI PIN Reset using Debit Card

UPI PIN Reset using Debit Card

ஆன்லைனில் சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பாஸ்வேர்டுகளை அவ்வப்போது மாற்ற வேண்டும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதேபோல UPI பின் நம்பரையும் அவ்வப்போது மாற்ற வேண்டும். பொதுவாக, புதிய UPI PIN ஐ உருவாக்க டெபிட் கார்டு விவரங்களைப் பயன்படுத்துகின்றனர்.

46
UPI PIN Setup with Aadhaar OTP

UPI PIN Setup with Aadhaar OTP

டெபிட் கார்டு இல்லாத நேரத்தில் UPI பின் நம்பரை எப்படி மாற்றுவது? அதற்கு சுலபமான மாற்று வழி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதார் கார்டு போதும். வங்கிக் கணக்கு மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். அப்போது, டெபிட் கார்டு இல்லாமலே, ஆதார் எண்ணை பயன்படுத்தி, UPI PIN ஐ மாற்றலாம். UPI மொபைல் ஆப் ஒன்றில் PIN ஐ மாற்றும் ஆப்ஷனுக்குச் சென்று, ஆதார் அட்டை மூலம் PIN மாற்றம் செய்யும் முறையைத் தேர்வு செய்யவும்.

56
Resetting UPI PIN using Aadhaar

Resetting UPI PIN using Aadhaar

உங்கள் ஆதார் எண்ணின் கடைசி 6 இலக்கங்களை அதற்குரிய இடத்தில் டைப் செய்து, ஆதார் OTP என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது, ஆதார் மற்றும் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP கிடைக்கும். அதை டைப் செய்ததும், புதிய UPI PIN ஐ உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். இரண்டு முறை புதிய பின் நம்பரை சரியாக டைப் செய்து உறுதிப்படுத்தவும். உங்கள் UPI PIN மாற்றப்பட்ட செய்தி எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

66
UPI Payment Security

UPI Payment Security

UPI PIN ஐ உருவாக்க ஆதார் அட்டையைப் பயன்படுத்துவது முற்றிலும் பாதுகாப்பானது. அதே சமயத்தில் உங்கள் UPI PIN நம்பரை யாரிடமும் வெளிப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வலுவான, தனித்துவமான PIN ஐ உருவாக்குவது உங்கள் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேம்படுத்தக்கூடும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற இடைமுகம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தனியார் நிறுவனங்களுக்கு சவால் விடும் இந்திய அஞ்சல் துறை..! 24 மணி நேரத்தில் டெலிவரி..
Recommended image2
Google Pay, PhonePe பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரூ.5,000 வரை.. புதிய வசதி அறிமுகம்.!!
Recommended image3
நகைப்பிரியர்களின் கவனத்துக்கு.. வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? முழு விவரம் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved