MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Recharge Packs: இனி ஒரே கிளிக்கில் தேவையான ரீசார்ஜ் பிளான்கள்! வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!

Recharge Packs: இனி ஒரே கிளிக்கில் தேவையான ரீசார்ஜ் பிளான்கள்! வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!

Recharge Packs: டிராய் புதிய உத்தரவுப்படி டெலிகாம் நிறுவனங்கள் ஆப் மற்றும் வெப்சைட்களில் 'TRAI-mandated packs' என்ற தனிப் பகுதியை முதல் டேப்பாக 30 நாட்களில் அமைக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் பிளான்களை ஒரே கிளிக்கில் தேர்ந்தெடுக்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 04 2026, 03:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இனி ஒரே கிளிக்கில் தேவையான ரீசார்ஜ் பிளான்கள்
Image Credit : Asianet News

இனி ஒரே கிளிக்கில் தேவையான ரீசார்ஜ் பிளான்கள்

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் (TRAI), டெலிகாம் நிறுவனங்களுக்கு ஒரு முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான ரீசார்ஜ் பிளான்கள் மற்றும் ஸ்பெஷல் வவுச்சர்களை தேடி கண்டுபிடிப்பதில் ரொம்பவே சிரமப்படுகிறார்கள் என புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து, அந்த பிளான்களை வெப்சைட்கள், மொபைல் ஆப்கள் மற்றும் ரீடெய்ல் கடைகளில் தெளிவாக தெரியும்படி வைக்க வேண்டும் என ட்ராய் அறிவுறுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
வாடிக்கையாளர்களின் கண்ணில் படும்படி...
Image Credit : Google

வாடிக்கையாளர்களின் கண்ணில் படும்படி...

கடந்த வியாழக்கிழமை வெளியான இந்த உத்தரவில், அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் தங்கள் வெப்சைட் மற்றும் ஆப்களில் "TRAI-mandated packs" என்ற பெயரில் தனியாக ஒரு பகுதியை உருவாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பகுதிக்குள் நுழையும்போது, இந்த டேப் தான் முதல் ஆப்ஷனாக இருக்க வேண்டும். அதேபோல, ரீடெய்ல் கடைகளிலும் இந்த பிளான்கள் வாடிக்கையாளர்களின் கண்ணில் படும்படி வைக்கப்பட வேண்டும்.

30 நாட்கள் கெடு

இந்த புதிய உத்தரவின்படி, டெலிகாம் நிறுவனங்கள் "TRAI-mandated packs" என்ற பெயரில் ஒரு தனி டேப் அல்லது பகுதியை உருவாக்க வேண்டும். இதில் ட்ராய் கட்டாயமாக்கியுள்ள அனைத்து வவுச்சர்களும் இருக்க வேண்டும். முக்கியமாக, இந்த பகுதி வேறு ஏதோ ஒரு மூலையில் இல்லாமல், ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செக்ஷனில் முதல் டேப்பாகவே இருக்க வேண்டும். இதற்கான மாற்றங்களை செய்ய டெலிகாம் நிறுவனங்களுக்கு 30 நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

34
ட்ராய் தலையிட காரணம் என்ன?
Image Credit : Asianet News

ட்ராய் தலையிட காரணம் என்ன?

டெலிகாம் நிறுவனங்களின் வெப்சைட் மற்றும் ஆப்களில், தங்களுக்கு தேவையான பிளான்களை தேடி எடுப்பது ரொம்ப கஷ்டமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இதைத் தொடர்ந்து ட்ராய் நேரடியாகவே களமிறங்கி ஆய்வு செய்தது. அப்போது, கட்டாயமாக இருக்க வேண்டிய வவுச்சர்கள் சம்பந்தமே இல்லாத பிரிவுகளில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதும், அதை கண்டுபிடிக்க பல பக்கங்களை கடந்து செல்ல வேண்டியிருப்பதும் உறுதியானது. இதனால்தான் இந்த அதிரடி நடவடிக்கை.

44
இந்த கட்டாய பிளான்கள் என்றால் என்ன?
Image Credit : stockPhoto

இந்த கட்டாய பிளான்கள் என்றால் என்ன?

தற்போதைய ட்ராய் விதிகளின்படி, ஒவ்வொரு டெலிகாம் நிறுவனமும் குறைந்தது ஒரு பிளான் வவுச்சர், ஒரு ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர் மற்றும் ஒரு காம்போ வவுச்சரை வழங்க வேண்டும். இவை ஒவ்வொன்றும் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்க வேண்டும். அதாவது, ஒவ்வொரு மாதமும் அதே தேதியில் ரீசார்ஜ் செய்யும் வசதி இருக்க வேண்டும். இதுதவிர, டேட்டா தேவையில்லாத வாடிக்கையாளர்களுக்காக, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் வசதி மட்டும் கொண்ட ஸ்பெஷல் வவுச்சர்களையும் தனியாக வழங்க வேண்டும். இந்த பிளான்களை மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில், ட்ராய் தொடர்ந்து டெலிகாம் நிறுவனங்களை வலியுறுத்தி வருகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தொழில்நுட்பம்
ஜியோ டேட்டா திட்டம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஐபோன் 18 ப்ரோ வட்டி இல்லாத EMI.! மறைந்திருக்கும் உண்மை என்ன?
Recommended image2
கடலுக்கு அடியில் ரூ.1,400 லட்சம் கோடி புதையல்... ஆனா தொட்டால் பேராபத்து; விஞ்ஞானிகள் எச்சரிப்பது ஏன்?
Recommended image3
ஒரு கிளாஸ் தண்ணீரிலிருந்து மின்சாரமா? 120 ஆண்டு ஆராய்ச்சிக்கு பின் கண்டறிந்த விஞ்ஞானி!
Related Stories
Recommended image1
BSNL 300 Days Plan: 10 மாதங்களுக்கு ரீசார்ஜ் கவலை இல்லை.. 300 நாட்கள் வேலிடிட்டி பிளான் விலை இவ்ளோதானா
Recommended image2
Recharge plans : நோ டேட்டா... ஒன்லி கால்ஸ்..! டிராய் கொண்டுவரும் புதிய ரீசார்ஜ் பிளான்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved