MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • BSNL 300 Days Plan: 10 மாதங்களுக்கு ரீசார்ஜ் கவலை இல்லை.. 300 நாட்கள் வேலிடிட்டி பிளான் விலை இவ்ளோதானா

BSNL 300 Days Plan: 10 மாதங்களுக்கு ரீசார்ஜ் கவலை இல்லை.. 300 நாட்கள் வேலிடிட்டி பிளான் விலை இவ்ளோதானா

BSNL 300 Days Plan: மொபைல் ரீசார்ஜ் கட்டணம் தொடர்ந்து கவனிக்க வேண்டிய செலவாக மாறிவிட்ட நிலையில், நீண்ட நாட்களுக்கு ஒரே முறை ரீசார்ஜ் செய்ய விரும்புபவர்களுக்கு பிஎஸ்என்எல்லின் திட்டம் சிறப்பாக அமைந்துள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Oct 02 2026, 11:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
300 நாள் ரீசார்ஜ் பிளான்
Image Credit : Asianet News

300 நாள் ரீசார்ஜ் பிளான்

மொபைல் ரீசார்ஜ் கட்டணம் மாதந்தோறும் அதிகரித்து வருவதாக உணரும் பயனர்கள், நீண்ட நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்கள் முக்கியமானதாக மாறியுள்ளன. குறிப்பாக வீட்டில் அல்லது அலுவலகத்தில் இணைய வசதி இருக்கும் நிலையில், மொபைல் எண்ணை தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்க மட்டும் ரீசார்ஜ் செய்ய பலருக்கு குறைந்த செலவில் நீண்ட கால திட்டம் உதவியாக இருக்கும். அந்த வகையில், அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.1,499 முன்கட்டண திட்டம் கவனம் பெறுகிறது. இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பு 300 செல்லுபடியாகும் காலம் ஆகும். அதாவது, ஒரே முறை பணம் செலுத்தி சுமார் 10 மாதங்களுக்கு மேல் எண்ணைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பிஎஸ்என்எல் 1499 திட்டம்
Image Credit : our own

பிஎஸ்என்எல் 1499 திட்டம்

இந்த ரூ.1,499 திட்டத்தில் நாடு முழுவதும் எந்த வலையமைப்புக்கும் அன்லிமிடெட் குரல் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும், மொத்தம் 32 ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கிறது. இது தினசரி குறிப்பிட்ட அளவு எந்த முறையில் அல்லாமல், திட்டத்தின் முழு செல்லுபடியாகும் காலத்திற்கான மொத்த தரவாக வழங்கப்படுகிறது. 32 ஜிபி அதிவேக டேட்டா முடிந்த பிறகு இணைய வசதி முற்றிலும் நிறுத்தப்படாது. தொடர்ந்து குறைந்த வேகத்தில், அதாவது 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா பயன்படுத்தும் வசதியும் உள்ளது. இதனால் அடிப்படை இணைய பயன்பாடுகளுக்கு இணைப்பு தொடரும். மேலும், தினமும் 100 இலவச குறுஞ்செய்திகளும் இந்த திட்டத்தில் இடம்பெறுகின்றன.

35
பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம்
Image Credit : our own

பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம்

இந்த திட்டத்தின் தன்மை தினசரி அதிக அளவு இணையத்தை பயன்படுத்துபவர்களை விட, நீண்ட கால செல்லுபடியாகும் காலத்தை விரும்புபவர்களுக்கு ஏற்றதாக உள்ளது. உதாரணமாக, வீட்டில் இணைய இணைப்பு வைத்திருப்பவர்கள் அல்லது இரண்டாவது சிம் எண்ணை செயல்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் திட்டங்களை கவனிக்கலாம். அதிக டேட்டா தேவைப்படும் பயனர்கள் கூடுதல் டேட்டா தொகுப்புகளை தனியாக தேர்வு செய்ய வேண்டியிருக்கலாம். எனவே, ரூ.1,499 திட்டத்தை தேர்வு செய்வதற்கு முன்பு தங்களுடைய மாதாந்திர டேட்டா ஆப் கணக்கில் எடுத்துக்கொள்வது அவசியம். பிஎஸ்என்எல் 300 நாட்கள், 330 நாட்கள் மற்றும் அதற்கு மேல் செல்லுபடியாகும் பல திட்டங்களையும் வழங்குகிறது.

45
பிஎஸ்என்எல் நீண்ட கால திட்டம்
Image Credit : our own

பிஎஸ்என்எல் நீண்ட கால திட்டம்

இதே நேரத்தில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஆண்டு திட்டங்களுடன் விலையை ஒப்பிடும்போது வித்தியாசம் தெளிவாகத் தெரிகிறது. ஜியோவின் ரூ.3,599 திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் தினசரி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது. ஏர்டெல்லும் ரூ.3,599 விலையில் 365 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை பட்டியலிட்டுள்ளது. எனவே, பிஎஸ்என்எல் ரூ.1,499 திட்டம் அதே அளவிலான தினசரி தரவை வழங்குகிறது என்று கூற முடியாது. ஆனால், குறைந்த செலவில் நீண்ட காலம் சிம் எண்ணை செயல்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்களுக்கு இது வேறுபட்ட பயன்பாட்டைக் கொண்டுள்ளது.

55
பிஎஸ்என்எல் சலுகை
Image Credit : our own

பிஎஸ்என்எல் சலுகை

மொத்தத்தில், ரூ.1,499 திட்டத்தின் முக்கிய கவனம் அதிக இணைய டேட்டா அல்ல, நீண்ட செல்லுபடியாகும் காலம் மற்றும் அடிப்படை தொலைத்தொடர்பு வசதிகள் என்பதுதான். 300 நாட்கள் செல்லுபடியாகும் காலம், அன்லிமிடெட் அழைப்புகள், 32 ஜிபி மொத்த டேட்டா மற்றும் தினமும் 100 குறுஞ்செய்திகள் ஆகியவை இதில் இடம்பெறுகின்றன. குறிப்பாக வீட்டில் Wi-Fi பயன்படுத்துபவர்கள், இரண்டாவது சிம் வைத்திருப்பவர்கள் அல்லது அடிக்கடி ரீசார்ஜ் செய்ய விரும்பாதவர்கள் இந்த திட்டத்தை பரிசீலிக்கலாம். அதே நேரத்தில், திட்டங்கள் மற்றும் சலுகைகள் காலத்துக்கு ஏற்ப மாறக்கூடியதால், ரீசார்ஜ் செய்வதற்கு முன் உங்கள் பகுதியில் பிஎஸ்என்எல் வழங்கும் தற்போதைய சலுகைகளை சரிபார்ப்பது நல்லது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)
பி.எஸ்.என்.எல் ரீசார்ஜ் திட்டம்
மறுஊட்டத் திட்டம்
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
WhatsApp Big Update: அக்டோபர் 1 முதல் வாட்ஸ்அப்-ல் 14 பைசா கட்டணம்.. யார் பணம் செலுத்தணும்?
Recommended image2
54 மணி நேர பேட்டரி, 3D ஆடியோ: களமிறங்கியது ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர்
Recommended image3
வெறும் 5.2 கிராம் எடையுள்ள அரிய இரட்டைத் தலை ஆமை: இயற்கையின் அபூர்வ அதிசயம்!
Related Stories
Recommended image1
WhatsApp Big Update: அக்டோபர் 1 முதல் வாட்ஸ்அப்-ல் 14 பைசா கட்டணம்.. யார் பணம் செலுத்தணும்?
Recommended image2
UPI Charges: யுபிஐ கட்டணம் தவிர்க்க இந்த ட்ரிக் பயன்படுத்தாதீங்க! ஒரே கடைக்கு மீண்டும் பணம் அனுப்பினால் அலர்ட் வரும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved