ரூ.16,0000 கூட இல்லை; பட்ஜெட் விலையில் கிடைக்கும் டாப் 5 டேப்லெட்டுகள்; செம சான்ஸ்!
இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை போன்று டேப்லெட்டுகளின் விற்பனையும் அமோகமாக உள்ளது. நாட்டில் குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த 5 டேப்லெட்டுகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரூ.16,0000 கூட இல்லை; பட்ஜெட் விலையில் கிடைக்கும் டாப் 5 டேப்லெட்டுகள்; செம சான்ஸ்!
இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை போன்றே டேப்லெட்களுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மவுசு அதிகமாக உள்ளது. OnePlus Pad Go, Realme Pad 2 Lite, Samsung Galaxy Tab A9+, Lenovo Tab M11, மற்றும் Acer Iconia Tab iM 10-22ஆகிய மாடல் டேப்லெட்கள் குறைந்த விலையில் எக்கச்சக்க அம்சங்களை கொண்டுள்ளது. டிஸ்ப்ளே தரம், செயலி வேகம், பேட்டரி ஆயுள் மற்றும் கேமரா திறன்கள் ஆகியவற்றில் இந்த டேப்லெட்கள் சிறந்து விளங்குகின்றன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒன்பிளஸ் பேட் கோ
OnePlus Pad Go
OnePlus Pad Goமாடல் டேப்லெட்டின் 11.3-இன்ச் டிஸ்ப்ளே, 2408x1720 பிக்சல்கள் தெளிவுத்திறன் கொண்டது, கூர்மையான மற்றும் வண்ணமயமான படங்களை உருவாக்குகிறது. 256GB உள்ளக சேமிப்பு, 8GB RAM மற்றும் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ க்99 சிப்செட் ஆகிய வசதிகள் உள்ளன. 8MP முன் மற்றும் பின்புற கேமராக்களுடன், OnePlus Pad Go வீடியோ அழைப்புகள் மற்றும் எளிய புகைப்படங்கள் இரண்டிற்கும் இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். 8000mAh உள்ளமைக்கப்பட்ட பேட்டரி நீண்ட நேரம் பயன்படுத்துவதை உறுதி செய்கிறது. இந்த டேப்லெட்டின் விலை ரூ.19,999 ஆகும்.
ரியல்மி பேட் 2 லைட்
Realme Pad 2 Lite
ரியல்மி பேட் 2 லைட் மாடல் டேப்லெட்டில் 2.2GHz ஹீலியோ G99 ஆக்டா-கோர் CPUசிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 1920x1200 பிக்சல் தெளிவுத்திறன் கொண்ட 10.9 இன்ச் டிஸ்ப்ளே, 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8GB RAM ஆகியவை உள்ளன. கேமராக்களை பொறுத்தவரை 5MP முன் கேமரா மற்றும் 8MP பின்புற கேமராவைக் கொண்டுள்ளது, 8300mAh உள்ளக பேட்டரி நீண்ட பயன்பாட்டு நேரத்தை வழங்குகிறது. இந்த மாடலின் விலை ரூ.15,499 மட்டுமே. குறைந்த விலையில் அதிக அம்சங்களை எதிபார்ப்பவர்கள் இந்த டேப்லெட்டை வாங்கலாம்.
சாம்சங் கேலக்ஸி டேப் A9+
Samsung Galaxy Tab A9+
Samsung Galaxy Tab A9+மாடலில் 11-இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இது 1920x1200 பிக்சல்கள் தெளிவுத்திறன் கொண்டது. ஸ்னாப்டிராகன் 695 ஆக்டா-கோர் CPUசிப்செட் நல்ல செயல்திறனை வழங்குகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியை கொண்டுள்ளது. இந்த டேப்லெட்டின் 5MP முன் மற்றும் 8MP பின்புற கேமராக்கள் சிறந்த வீடியோக்கள் எடுக்க உதவுகின்றன. 15Wபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 7040mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளதால் நீண்ட நேரம் சார்ஜ் செய்ய தேவையில்லை. இதன் விலை ரூ.20,999 ஆகும்.
லெனோவா டேப் M11
Lenovo Tab M11
நியாயமான விலையில் பல அம்சம் நிறைந்த டேப்லெட்டைத் தேடுபவர்களுக்கு Lenovo Tab M11 ஒரு சிறந்த தேர்வாகும். இந்த மாடல் 11 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இது 1920x1200 பிக்சல் தெளிவுத்திறன் வழங்குகிறது. சக்திவாய்ந்த 2GHz ஹீலியோ G88 ஆக்டா-கோர் CPUசிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளன. கேமராக்களை பொறுத்தவரை 13MP பின்புற மற்றும் 8MP முன் கேமராக்கள் உள்ளன. 7040mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் நீண்ட நேரம் இதனை இயக்க முடியும். இந்த டெப்லெட்டின் விலை ரூ.16,999 ஆகும்.
ஏசர் ஐகோனியா டேப் ஐஎம் 10-22
Acer Iconia Tab iM 10-22
விலை மற்றும் செயல்திறன் இடையே ஒரு கலவையைத் தேடுபவர்களுக்கு Acer Iconia Tab iM10-22 மாடல் டெப்லெட் ஒரு நல்ல சாய்ஸாக இருக்கும். இந்த மாடல் 2000x1200 பிக்சல் தெளிவுத்திறன் கொண்ட 10.3 இன்ச் டிஸ்ப்ளேயை கொண்டுள்ளது. சக்திவாய்ந்த 2.2GHz ஆக்டா-கோர் சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளதால் இதனை இயக்குவதற்கு எளிதாக இருக்கும். மேலும் 6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், 8MP முன் கேமரா மற்றும் 16MP பின்புற கேமரா என எக்கச்சக்க அம்சங்கள் நிறைந்துள்ளன. 7400mAh பேட்டரி நீண்ட நேரம் இதனை பயன்படுத்த உதவி செய்கிறது. இந்த டெப்லெட்டின் விலை ரூ.17,999 ஆகும்.