MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • பட்ஜெட் விலையில் 5G வேகம்.. ரூ.10,000-க்குள் பட்டையை கிளப்பும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்!

பட்ஜெட் விலையில் 5G வேகம்.. ரூ.10,000-க்குள் பட்டையை கிளப்பும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்!

Best 5G Mobile Under 10000: இந்தியாவில் ரூ.10.000க்குள் கிடைக்கும் டாப் 5 5G போன்கள் குறித்தும், அவற்றின் சிறப்பம்சஙகள் குறித்தும் இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : May 03 2026, 04:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ரூ.10,000க்குள் கிடைக்கும் 5G ஸ்மார்ட்போன்கள்
Image Credit : AI

ரூ.10,000க்குள் கிடைக்கும் 5G ஸ்மார்ட்போன்கள்

இன்றைய நவீன உலகம் ஸ்மார்ட்போன்கள் வசமாகி விட்டது. இளசுகள் முதல் பெருசுகள் வரை போன்கள் இல்லாமல் யாரும் இல்லை. இப்போது 5G காலம் என்பதால் அனைவரும் 4G போன்களைத் தவிர்த்துவிட்டு 5G போன்களை வாங்கவே ஆர்வம் காட்டுகின்றனர். முன்பெல்லாம் 5G போன்கள் 15,000 ரூபாய்க்கு மேல் விற்பனையான நிலையில், இப்போது 5G போன்கள் 10,000 ரூபாய்க்குள் கிடைக்கிறது. ரூ.10,000க்குள் கிடைக்கும் டாப் 5 5G போன்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

26
 லாவா ஸ்டார்ம் லைட் 5G (Lava Storm Lite 5G)
Image Credit : LAVA/X

லாவா ஸ்டார்ம் லைட் 5G (Lava Storm Lite 5G)

இந்திய நிறுவனமான லாவா குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை களமிறக்கி அசத்தி வருகிறது. லாவா ஸ்டார்ம் லைட் 5G போனின் விலை ரூ.7,999 மட்டுமே இந்த போனில் ‍50MP பிரதான கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் MediaTek Dimensity 6400 சிப்செட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. நீங்கள் மிகக் குறைந்த பட்ஜெட்டில் ஒரு 5G போனைத் தேடுகிறீர்கள் என்றால் Lava Storm Lite 5G சிறந்த தேர்வாகும்.

Related Articles

Related image1
ஸ்மார்ட்போன் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ரியல்மி! மெயின் கேமராவிலேயே செல்ஃபி எடுக்கலாம் - இது எப்படிச் சாத்தியம்?
Related image2
ஸ்மார்ட்போன் உலகில் புதிய புரட்சி! 3 நாள் பேட்டரி லைஃப் தரும் விவோ T5 Pro - முழு லீக் விவரங்கள் உள்ளே!
36
போக்கோ M6 5G (Poco M6 5G)
Image Credit : POCO/X

போக்கோ M6 5G (Poco M6 5G)

தரமான மாடல்களில் போக்கோ எப்போதும் முன்னிலையில் வரும். போக்கோ M6 5G மாடலின் 4GB/64GB வேரியண்ட் தற்போது ஆஃபர்களில் ₹8,999 முதல் கிடைக்கிறது. இதில் 6.74 இன்ச் பெரிய டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரீமியம் டிசைன் மற்றும் வேகமான 5G கனெக்டிவிட்டி மிகப்பெரிய பிளஸ் பாய்ண்ட் ஆகும்.

46
ரெட்மி 13C 5G (Redmi 13C 5G)
Image Credit : Google

ரெட்மி 13C 5G (Redmi 13C 5G)

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 13C 5G போன் இந்திய சந்தையில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த போனில் 90Hz டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி அம்சங்கள் உள்ளன. ரெட்மி நிறுவனத்தின் நம்பகமான மென்பொருள் மற்றும் பரவலான சர்வீஸ் சென்டர் வசதி இதன் பிளஸ் பாய்ண்டாக உள்ளது. இந்த போனின் விலை ரூ.9,499 ஆகும்.

56
சாம்சங் கேலக்ஸி M06 5G (Samsung Galaxy M06 5G)
Image Credit : fb

சாம்சங் கேலக்ஸி M06 5G (Samsung Galaxy M06 5G)

சாம்சங் கேலக்ஸி M06 5G போன் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. இந்த மாடலில் 6000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது நீண்ட நேரம் சார்ஜிங் தக்க வைக்கும். 4 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போனின் விலை ரூ.9,999 ஆகும்.

66
மோட்டோ G35 5G (Moto G35 5G)
Image Credit : Motorola India Twitter

மோட்டோ G35 5G (Moto G35 5G)

ஸ்டாக் ஆண்ட்ராய்டு (Stock Android) விரும்புபவர்களுக்காக மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ G35 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் சவுண்ட் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா சென்சார்கள் என ஏராளமான அம்சங்கள் உள்ளன. இதன் விலை ₹9,999 முதல் தொடங்குகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
திறன் பேசி
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒன்ப்ளஸ் முதல் ரெட்மி வரை.. எல்லா மொபைல் விலை அதிகமாயிடுச்சு.. எவ்வளவு?
Recommended image2
இனி ரூ.21-க்கு ரீசார்ஜ் செய்யலாம்.. ஜியோ பிளான்களில் அதிரடி மாற்றம்.. முழு விவரம் உள்ளே!
Recommended image3
70% வரை தள்ளுபடி.. பாதி விலையில் 65 இன்ச் 4K டிவி கிடைக்குது.. ஆர்டர் போடுங்க
Related Stories
Recommended image1
ஸ்மார்ட்போன் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ரியல்மி! மெயின் கேமராவிலேயே செல்ஃபி எடுக்கலாம் - இது எப்படிச் சாத்தியம்?
Recommended image2
ஸ்மார்ட்போன் உலகில் புதிய புரட்சி! 3 நாள் பேட்டரி லைஃப் தரும் விவோ T5 Pro - முழு லீக் விவரங்கள் உள்ளே!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved