- Home
- டெக்னாலஜி
- தொலைபேசி
- Airtel : சீப் அண்ட் பெஸ்ட் பிளானை சைலண்டாக ஸ்டாப் பண்ணிய ஏர்டெல்... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்...!
Airtel : சீப் அண்ட் பெஸ்ட் பிளானை சைலண்டாக ஸ்டாப் பண்ணிய ஏர்டெல்... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்...!
Airtel Discontinues Popular Plan : இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல், தனது பிரபலமான மற்றும் குறைந்த விலையிலான தனிநபர் போஸ்ட்பெய்ட் பிளானை நிறுத்திவிட்டது.

Airtel Discontinues Popular Plan
நீங்க ஏர்டெல் போஸ்ட்பெய்ட் (Airtel Postpaid) யூஸரா? அப்போ உங்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ் இருக்கு. இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல், பலரும் விரும்பிப் பயன்படுத்திய ரூ.549 தனிநபர் போஸ்ட்பெய்ட் பிளானை சத்தமில்லாமல் நிறுத்திவிட்டது. 2026-ல் வரவிருக்கும் கட்டண உயர்வின் ஒரு பகுதியாக இந்த முடிவை கம்பெனி எடுத்துள்ளது. இதனால், சாதாரண வாடிக்கையாளர்களின் மாதாந்திர செலவு இன்னும் அதிகமாகப் போகிறது. விலைகூடிய பிளானை தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டிருக்கு.
நிறுத்தப்பட்ட ரூ.549 பிளானில் என்ன இருந்தது?
தனிநபர் யூஸர்கள் மத்தியில் இந்த பிளான் ரொம்பவே ஃபேமஸாக இருந்தது. இதில் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி (STD) கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS), மாதத்திற்கு 40 GB டேட்டா மற்றும் பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த மாதத்திற்கு கொண்டு செல்லும் டேட்டா ரோல்ஓவர் வசதியும் இருந்தது. இதுமட்டுமில்லாமல், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Xstream Play) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) போன்றவற்றுக்கு இலவச சந்தாவும் கிடைத்தது. இப்போது இந்த பிளான் நிறுத்தப்பட்டதால், வாடிக்கையாளர்கள் வேறு வழியில்லாமல் அதிக விலை கொண்ட பிளான்களுக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இனி என்ன ஆப்ஷன்கள் இருக்கு?
ரூ.549 பிளான் இப்போது இல்லாததால், புதிய வாடிக்கையாளர்களுக்கு இரண்டு முக்கிய ஆப்ஷன்கள் மட்டுமே உள்ளன.
ரூ.449 பிளான்: இதுதான் இப்போது இருக்கும் ஆரம்பகட்ட (entry-level) தனிநபர் பிளான்.
ரூ.699 பிளான்: உங்களுக்கு ரூ.549 பிளானை விட அதிக பலன்கள் வேண்டுமென்றால், நேரடியாக ரூ.699 ஃபேமிலி பிளானுக்குத்தான் போக வேண்டும். அதாவது, நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்கள் இனி ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 150 ரூபாய் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏர்டெல்லின் இந்த முடிவுக்கு என்ன காரணம்?
டெலிகாம் நிபுணர்கள் சொல்றபடி, இந்த மாற்றத்திற்குப் பின்னால் ஒரு முக்கிய இலக்கு இருக்கிறது. அதுதான் ARPU (Average Revenue Per User), அதாவது ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் சராசரி வருமானத்தை அதிகரிப்பது. ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் நாடு முழுவதும் 5G உள்கட்டமைப்புக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. இந்த செலவை ஈடுகட்ட, குறைந்த விலை பிளான்களை நீக்கிவிட்டு, வாடிக்கையாளர்களை அதிக விலை கொண்ட பிளான்களுக்கு மாற வைக்கிறார்கள்.
ஃபேமிலி பிளான்களுக்கு முக்கியத்துவம்..
வாடிக்கையாளர்கள் தனிநபர் பிளான்களை விட, அதிக விலை கொண்ட ஃபேமிலி பிளான்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என கம்பெனிகள் அழுத்தம் கொடுக்கின்றன. நீங்க ஏற்கெனவே ரூ.549 பிளான் பயன்படுத்தினால், உங்களின் அடுத்த பில்லிங் சைக்கிளில் இருந்து புதிய பிளானுக்கு மாற வேண்டியிருக்கும். இல்லையென்றால், போஸ்ட்பெய்டில் இருந்து ப்ரீபெய்டுக்கு (Prepaid) மாறுவது மட்டுமே பணத்தை மிச்சப்படுத்த இருக்கும் ஒரே வழி. மொத்தத்தில், இந்த டெலிகாம் கட்டண உயர்வு சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது மட்டும் உண்மை. அந்த பிளானை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

