வாட்ஸ்அப் பயனர்கள் கவனிங்க.. மெட்டா AI சாட்களைப் படிக்குமா?
வாட்ஸ்அப்-இல் மெட்டா AI சாட்களைப் படிக்கிறதா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா இது குறித்து பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ்அப் பயனர்கள்
வாட்ஸ்அப்-இல் உள்ள மெட்டா AI பற்றிய எச்சரிக்கை சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா, "நீங்கள் எந்த வாட்ஸ்அப் குழுவில் இருந்தாலும் மெட்டா ஏஐ உங்கள் சாட்களைப் படிக்கலாம்" எச்சரித்துள்ளார். இதனால் பல பயனர்களுக்கு தனியுரிமை குறித்த கவலைகள் எழுந்துள்ளன. அவர் கூடுதலாக, மேம்பட்ட சாட் தனியுரிமையை எவ்வாறு இயக்குவது என்பதற்கான ஸ்கிரீன்ஷாட்டையும் பகிர்ந்துள்ளார்.
வாட்ஸ்அப்
ஆனால், வாட்ஸ்அப் குறித்த நம்பகமான வலைத்தளம் WABetaInfo, இந்த வாதத்திற்கு பதிலளித்து, "மெட்டா AI நீங்கள் அனுமதிக்கும் தகவல்களைப் பார்க்கவும், சாட்கள் அல்லது குழு உரையாடல்கள் எதுவும் தானாக அணுகப்படமாட்டாது" என்று விளக்கியுள்ளது. வாட்ஸ்அப் செய்திகளுக்கு முழுமையான End-to-End Encryption வழங்கப்பட்டிருப்பதால், அதை நீங்களும், நீங்கள் உரையாடும் நபரும் மட்டுமே பார்க்க முடியும்.
மெட்டா ஏஐ
மேலும், வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வமாகவும் "குழு சாட்களில் பயனர்கள் குறிப்பிட்ட செய்திகள் மட்டுமே மெட்டா AI அடையாளம் காணும். எந்த சாட்களும் ரகசியமாக ஸ்கேன் செய்யப்படாது" என்று கூறியுள்ளது. ஏப்ரல் மாத அறிமுகமான மேம்பட்ட சாட் தனியுரிமை அமைப்புகள், சாட் ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடுக்கின்றன. மீடியா தானாக பதிவிறக்கம் ஆகாமல் பாதுகாக்கின்றன மற்றும் மெட்டா AIக்கு அனுப்பப்படுவதை கட்டுப்படுத்துகின்றன.
வாட்ஸ்அப் சாட்
பயனர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது எளிது ஆகும். முதலில் பதற்றப்பட வேண்டாம். ஏனெனில் மெட்டா AI உங்கள் சாட்களை தானாக படிக்காது. இரண்டாவதாக, தேவையானால் மேம்பட்ட சாட் தனியுரிமை அம்சத்தை இயக்குங்கள். கடைசியாக, மெட்டா AI விருப்பமான சேவையே என்பதால், உங்களுக்கு தேவைப்பட்டால் மட்டும் அதை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்பவர்கள் தனியுரிமையை இழக்காமல் வாட்ஸ்அப்பை நிம்மதியாக பயன்படுத்தலாம்.