- Home
- டெக்னாலஜி
- AC Without Remote: ரிமோட் இல்லாம ஏசியை ஆன் செய்வது எப்படி? இந்த சீக்ரெட் டெக்னிக் பலருக்கும் தெரியாது!
AC Without Remote: ரிமோட் இல்லாம ஏசியை ஆன் செய்வது எப்படி? இந்த சீக்ரெட் டெக்னிக் பலருக்கும் தெரியாது!
வெயிலில் இருந்து தப்பிக்க நிறைய பேர் வீடுகளில் ஏர் கண்டிஷனர் பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஏசி வாங்க பட்ஜெட் இல்லாதவர்கள் ஃபேன், கூலர் வைத்து சமாளிக்கின்றனர். இப்போது மார்க்கெட்டில் பலவகை ஏசிகள் கிடைக்கின்றன.
17

Image Credit : Amazon.com
ஸ்பிளிட் ஏசிதான் அதிகம்
வெப்பத்தில் இருந்து தப்பிக்க மக்கள் வீடுகளில் ஏர் கண்டிஷனர் பொருத்துகிறார்கள். ஒரு காலத்தில் விண்டோ ஏசி பிரபலமாக இருந்தது. ஆனால் இப்போது அடுக்குமாடி குடியிருப்புகளில் ஸ்பிளிட் ஏசி மட்டுமே பொருத்த முடிகிறது. அலுவலகம், வீடு, பள்ளி என எல்லா இடங்களிலும் ஸ்பிளிட் ஏசிதான் அதிகம் தென்படுகிறது.
27
Image Credit : Amazon.com
ஏசியை எப்படி ஆன் செய்வது?
ஸ்பிளிட் ஏசியை இயக்க ரிமோட் அவசியம். ஆனால், ரிமோட் ரிப்பேர் ஆகிவிட்டாலோ, பேட்டரி திடீரென தீர்ந்துவிட்டாலோ, அல்லது ரிமோட்டையே தொலைத்துவிட்டாலோ ஏசியை எப்படி ஆன் செய்வது? அதற்கும் ஒரு வழி இருக்கிறது.
37
Image Credit : Freepik
ரிமோட் தொலைந்துவிட்டால்...
ஸ்பிளிட் ஏசியின் இன்டோர் யூனிட்டில் வெளியே தெரியும் வகையில் பட்டன்கள் எதுவும் இருக்காது. இதை ரிமோட் மூலமாக மட்டுமே இயக்க முடியும். அப்படியான சூழலில் ரிமோட் தொலைந்துவிட்டால், ஏசியின் குளிர்ச்சியை எப்படி அனுபவிப்பது? இதோ ஒரு வழி.
47
Image Credit : Getty
கையேட்டை முழுமையாகப் படிக்க வேண்டும்
ஏசியில் நமக்குத் தெரியாத பல அம்சங்கள் இருக்கும். அதனால், அவற்றின் பயன்பாடு நமக்கு புரியாது. இந்த அம்சங்களைப் புரிந்துகொள்ள, ஏசியுடன் வரும் கையேட்டை முழுமையாகப் படிக்க வேண்டும்.
57
Image Credit : Asianet News
பிசிக்கல் பட்டன்
ஏசியில் ஒரு பிசிக்கல் பட்டன் இருக்கிறது, ஆனால் அது நம் கண்ணுக்குத் தெரியாத இடத்தில் மறைக்கப்பட்டிருக்கும். அதனால், அவசரப்பட்டு புதிய ரிமோட் வாங்க வேண்டாம். இந்த பட்டனைப் பயன்படுத்துவது ரிமோட்டை விட சற்று சிக்கலானது என்றாலும், அவசர காலங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
67
Image Credit : Getty
'எமர்ஜென்சி ரன் பட்டன்'
இந்த மறைக்கப்பட்ட பட்டனை அழுத்த, நீங்கள் ஏசியின் இன்டோர் யூனிட் கவரைத் திறக்க வேண்டும். அதன் பிறகு, வலது பக்கத்தில் ஒரு பட்டனைக் காண்பீர்கள். இந்தப் பட்டனை அழுத்தினால் ஏசி ஆன் ஆகும். இதற்கு 'எமர்ஜென்சி ரன் பட்டன்' என்று பெயர். இதை வைத்து ஏசியை ஆன் மற்றும் ஆஃப் செய்யலாம். ஆனால், இதை அடிக்கடி பயன்படுத்தாமல், ஒரு புதிய ரிமோட்டை வாங்குவது நல்லது.
77
Image Credit : Getty
கவனமாக இருப்பது அவசியம்
இந்த முறை, அவசர காலத்தில் ரிமோட் இல்லாமல் ஏசியை இயக்குவதற்காக மட்டுமே. பொதுவாக ஏசி டெக்னீஷியன்கள் தான் இதை பயன்படுத்துவார்கள். எனவே, ஒரு டெக்னீஷியனின் ஆலோசனை இல்லாமல் இதை முயற்சிக்கும்போது கவனமாக இருப்பது அவசியம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.
Latest Videos

