வேற லெவல் ஆஃபர்! சாம்சங் கேலக்ஸி Z போல்ட் 6 இவ்வளவு கம்மி விலையா? முழு விபரம் உள்ளே!
Samsung Galaxy Z Fold சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்ட் 6 போனுக்கு ரூ.61,000 தள்ளுபடி! பிளிப்கார்ட் தளத்தில் இந்த அதிரடி ஆஃபரை மிஸ் பண்ணாதீங்க. முழு விபரங்கள் இதோ.

Samsung Galaxy Z Fold சாம்சங் பிரியர்களுக்கு ஒரு ஜாக்பாட் செய்தி
சாம்சங் நிறுவனத்தின் மிக உயரிய பிரீமியம் மாடலான 'கேலக்ஸி Z போல்ட் 6' (Galaxy Z Fold 6) வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். அவர்களுக்காகவே ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை வரலாற்றிலேயே முதல்முறையாக அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஃபிளாக்ஷிப் போன், தற்போது அதன் அறிமுக விலையை விட சுமார் 61,000 ரூபாய் குறைவான விலையில் கிடைக்கிறது.
பிளிப்கார்ட்டில் கொட்டும் சலுகைகள்
சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானபோது அதன் ஆரம்ப விலை ரூ.1,64,999 ஆக இருந்தது. ஆனால், தற்போது பிரபல இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் (Flipkart) இந்த போனுக்கு ரூ.61,066 என்ற பிரம்மாண்ட தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதனால், இந்த பிரீமியம் போனை இப்போது வெறும் ரூ.1,03,933 என்ற விலையில் வாங்க முடியும். இது சாம்சங் ரசிகர்களுக்குக் கிடைத்துள்ள ஒரு அறிய வாய்ப்பாகும்.
கூடுதல் சேமிப்புக்கு வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள்
நேரடித் தள்ளுபடி மட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் கூடுதல் சலுகைகளையும் பெறலாம். உங்களிடம் பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி (Flipkart Axis Bank) கிரெடிட் கார்டு இருந்தால், கூடுதலாக 5 சதவீதம் சேமிக்கலாம். மேலும், உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் (Exchange) செய்வதன் மூலம் ரூ.68,050 வரை தள்ளுபடி பெற வாய்ப்புள்ளது. உங்கள் பழைய போனின் மாடல் மற்றும் தரத்தைப் பொறுத்து இந்தத் தொகை மாறுபடும்.
திரை மற்றும் ப்ராசஸர் எப்படி?
விலை குறைந்துள்ளதால் இதன் தரத்தில் எந்த சமரசமும் இல்லை. கேலக்ஸி Z ஃபோல்ட் 6 சந்தையில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த போல்டபிள் போன்களில் ஒன்றாகும். இதில் 7.6 இன்ச் டைனமிக் அமோலெட் 2X மெயின் டிஸ்ப்ளே மற்றும் 6.3 இன்ச் கவர் டிஸ்ப்ளே உள்ளது. இவை இரண்டுமே 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வசதியைக் கொண்டுள்ளன. மேலும், இது அதிவேக செயல்பாட்டிற்காக குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட் உடன் வருகிறது. நினைவகத்தைப் பொறுத்தவரை 12GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் இதில் உள்ளது.
கேமரா மற்றும் பேட்டரி விபரங்கள்
புகைப்படங்களை எடுக்க, பின்புறத்தில் 50 மெகாபிக்சல் (OIS) முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 10 மெகாபிக்சல் டெலிபோட்டோ கேமரா என மூன்று கேமராக்கள் உள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 10 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் உழைக்கக்கூடிய 4400mAh பேட்டரி இதில் உள்ளது. இது 45W வேகமான சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியையும் ஆதரிக்கிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

