MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Samsung Offer: பாதிக்கு பாதி விலையில் சாம்சங் போன்! ஃபிளிப்கார்ட்டின் தெறிக்கும் தள்ளுபடி ஆஃபர்!

Samsung Offer: பாதிக்கு பாதி விலையில் சாம்சங் போன்! ஃபிளிப்கார்ட்டின் தெறிக்கும் தள்ளுபடி ஆஃபர்!

Samsung Offer: பிளிப்கார்ட்டில் சாம்சங் கேலக்ஸி S25 5G ஸ்மார்ட்போனை சிறப்பான தள்ளுபடி ஆஃபர் மூலம் பாதிக்கு பாதி விலையில் வாங்கலாம். இந்த ஆஃபர் தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 08 2026, 05:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பாதிக்கு பாதி தள்ளுபடி விலையில் சாம்சங் போன்
Image Credit : Getty

பாதிக்கு பாதி தள்ளுபடி விலையில் சாம்சங் போன்

சாம்சங் நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போனான Galaxy S25 5G மாடலுக்கு ஃபிளிப்கார்ட்டில் ஒரு சூப்பரான தள்ளுபடி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முதலில் ரூ.74,999-க்கு அறிமுகமான இந்த போனின் விலை, இப்போது பிளிப்கார்ட்டில் நேரடியாக ரூ.12,000 குறைக்கப்பட்டு, ரூ.62,999-க்கு கிடைக்கிறது. இந்த ஆஃபர் பற்றிய முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
நிஜமாவே எவ்வளவு செலவாகும்?
Image Credit : X/Raajsingh0709

நிஜமாவே எவ்வளவு செலவாகும்?

இந்த நேரடி தள்ளுபடி மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பேங்க் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களும் உள்ளன. தகுதியான பேங்க் கார்டுகளைப் பயன்படுத்தினால், ரூ.5,000 வரை கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.

இதுமட்டுமில்லாமல், உங்களுடைய பழைய மொபைலுக்கு ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் மதிப்பும், ரூ.5,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைத்தால், மொத்தமாக ரூ.25,000 வரை தள்ளுபடி பெறலாம். இந்த எல்லா ஆஃபர்களும் உங்களுக்குக் கிடைத்தால், நீங்கள் வெறும் ரூ.37,999 பணம் செலுத்தி இந்த போனை வாங்க முடியும்.

ஆனால், நீங்கள் கொடுக்கும் பழைய போனின் மதிப்பையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்த போனின் உண்மையான விலை ரூ.52,999 ஆக இருக்கும்.

Related Articles

Related image1
ஆசைப்பட்டது ஒன்று.. நடந்தது ஒன்று! சாம்சங் ட்ரை-போல்டு போன்களுக்கு வந்த சோதனை - விற்பனை திடீர் நிறுத்தம்!
Related image2
45W ஃபாஸ்ட் சார்ஜிங், 50MP OIS கேமரா..மிட்-ரேஞ்ச் போன்களுக்கு செக்.. வெளியாகும் சாம்சங் கேலக்சி எப்70 ப்ரோ
34
இந்த போனில் என்னவெல்லாம் ஸ்பெஷல்?
Image Credit : samsung.com

இந்த போனில் என்னவெல்லாம் ஸ்பெஷல்?

கேலக்ஸி S25 5G போனில், மிகவும் அட்டகாசமான 6.2-இன்ச் Full-HD+ Dynamic AMOLED 2X டிஸ்ப்ளே உள்ளது. இது 120Hz ரிஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் உடன் வருகிறது. சாம்சங்கிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த 'Snapdragon 8 Elite' ப்ராசஸர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 12GB RAM மற்றும் Android 15 அடிப்படையிலான One UI 7 இயங்குதளத்துடன் இந்த போன் மிகவும் வேகமாகச் செயல்படும்.

சாம்சங் போனில் கேமரா எப்படி இருக்கு?

கேமரா விஷயத்தில் இந்த போன் ஒரு படி மேலே இருக்கிறது. பின்பக்கம் 50MP மெயின் கேமரா, 12MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 3x ஜூம் வசதியுடன் கூடிய 10MP டெலிபோட்டோ கேமரா என மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. செல்ஃபிக்காக 12MP முன்பக்க கேமரா உள்ளது. இதில் 8K தரத்தில் வீடியோ செய்ய முடியும். மேலும், 4,000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.

44
Galaxy AI, 7 ஆண்டுகள் அப்டேட் மற்றும் தயாரிப்புத் தரம்
Image Credit : X/Raajsingh0709

Galaxy AI, 7 ஆண்டுகள் அப்டேட் மற்றும் தயாரிப்புத் தரம்

இந்த போனில் 'Galaxy AI' (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுடபம் உள்ளது. இதன் மூலம் நேரடி மொழிபெயர்ப்பு (Live Translate), புகைப்படங்களைத் திருத்தும் AI எடிட்டிங் கருவிகள் மற்றும் கூகுளின் 'Circle to Search' போன்ற அதிநவீன வசதிகளைப் பயன்படுத்த முடியும். மேலும், சாம்சங் நிறுவனம் இந்த போனுக்கு 7 வருட ஆண்ட்ராய்டு OS அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்களை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. இத்துடன், தூசு மற்றும் நீரிலிருந்து பாதுகாக்கும் IP68 ரேட்டிங், முன்புறம் மற்றும் பின்புறத்தில் பலமான Corning Gorilla Glass Victus 2 பாதுகாப்பு, மற்றும் வெறும் 162 கிராம் எடையுடன் மிகவும் மெலிதான (Compact & Premium) டிசைனில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்

இந்த போனுக்கு நீங்கள் செலுத்தப்போகும் இறுதி விலை, உங்களிடம் உள்ள பேங்க் கார்டு, நீங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்யும் பழைய போனின் நிலை மற்றும் உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடலாம். அதனால், ஆர்டர் செய்வதற்கு முன்பு பிளிப்கார்ட்டில் இறுதி விலையை ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தொழில்நுட்பம்
சாம்சங்
திறன் பேசி
Latest Videos
Recommended Stories
Recommended image1
Jio OTT Plans: ஜியோ யூசர்களுக்கு குட் நியூஸ்.. ரூ.550-க்கு 15+ ஓடிடி ஆப்ஸ், அன்லிமிடெட் 5G!
Recommended image2
Vivo S2: விலை மிடில் கிளாஸ்.. ஃபீச்சர்ஸ் டாப் கிளாஸ்... விவோவின் அட்டகாசமான போன் ரெடி!
Recommended image3
Airtel Recharge: ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஷாக்! ரூ.299 ரீசார்ஜ் பிளான் திடீர் நீக்கம்
Related Stories
Recommended image1
ஆசைப்பட்டது ஒன்று.. நடந்தது ஒன்று! சாம்சங் ட்ரை-போல்டு போன்களுக்கு வந்த சோதனை - விற்பனை திடீர் நிறுத்தம்!
Recommended image2
45W ஃபாஸ்ட் சார்ஜிங், 50MP OIS கேமரா..மிட்-ரேஞ்ச் போன்களுக்கு செக்.. வெளியாகும் சாம்சங் கேலக்சி எப்70 ப்ரோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved