Samsung Galaxy S24-க்கு ரூ.33,000 பெரிய தள்ளுபடி! அமேசானில் கம்மி விலை
பிரீமியம் ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி S24 5G, அமேசானில் மிகப்பெரிய தள்ளுபடியில் கிடைக்கிறது. விலை குறைப்பு, கேஷ்பேக் சலுகைகளுடன், Snapdragon 8 Gen 3 செயலி மற்றும் 50MP கேமரா கொண்ட இந்த போனை மிகக்குறைந்த விலையில் வாங்கலாம்.

சாம்சங் கேலக்சி எஸ்24
பிரீமியம் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் ஆனால் அதிக பணம் செலவழிக்க வேண்டும் என்றால், சாம்சங் கேலக்சி எஸ்24 (Samsung Galaxy S24) 5G தற்போது கிடைக்கும் சிறந்த ஆப்ஷன்களில் ஒன்றாகும். ஏனெனில் அமேசானில் இந்த போனுக்கு மிகப்பெரிய தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ரூ.33,000-க்கும் அதிகமான நேரடி விலை குறைப்பு, கூடுதலாக எக்சேஞ்ச் போனஸ் மற்றும் கேஷ்பேக் சலுகையும் சேர்ந்து, இந்த போனை குறைந்த விலையில் வாங்கலாம் வாய்ப்பு கிடைக்கிறது.
வாங்குவதற்கு முன், அதன் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம். சாம்சங் Galaxy S24 5G, 6.2-இன்ச் Dynamic AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆகியவற்றை ஆதரிப்பதால், வெளிச்சமான சூழலிலும் சரியான பார்வையை வழங்குகிறது. சக்திவாய்ந்த Snapdragon 8 Gen 3 செயலி மற்றும் 8GB RAM இணைந்திருப்பதால் மொத்த செயல்திறன் மிகுந்தது. 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் கிடைக்கும்.
சாம்சங் கேலக்சி எஸ்24 தள்ளுபடி
இது அதிகப்படியான புகைப்படங்கள், வீடியோக்கள், ஆப்கள் வைத்திருக்க விரும்புபவர்களுக்கு உதவும். கேமரா பகுதியில் 50MP பிரதான லென்ஸ், 12MP அல்ட்ரா-வைட் மற்றும் 10MP டெலிபோட்டோ என முப்பெரும் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 12MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டு, 4,000mAh பேட்டரி மற்றும் 25W விரைவு சார்ஜிங்கும் உள்ளது.
விலை விவரங்களை பார்க்கையில் போனின் ஆரம்ப விலை ரூ.74,999. ஆனால் தற்போது அமேசானில் இது ரூ.41,795-க்கு விற்கப்படுகிறது. இது சுமார் 44% தள்ளுபடி, அதாவது ரூ.33,000-க்கும் அதிகமான விலை குறைப்பு ஆகும். அதுமட்டுமல்லாமல், Amazon Pay ICICI வங்கி கார்டில் கூடுதலாக ரூ.1,253 கேஷ்பேக் கிடைக்கிறது. இதன் பிறகு, Galaxy S24 5G-யை வெறும் ரூ.40,542 என்ற குறைந்த விலையில் வாங்க முடியும். குறைந்த பட்ஜெட்டில் ஒரு பிரீமியம் செயல்திறன் கொண்ட போனை எதிர்பார்த்திருந்தால், இந்த சலுகை தவற விடக்கூடாதது ஆகும்.