- Home
- டெக்னாலஜி
- ஒரு எலக்ட்ரிக் பஸ்ஸுக்கு தினமும் ரூ.15000.. மிளகாய் அரைக்கும் திமுக அரசு..! போக்குவரத்து துறையில் அநீதி..!
ஒரு எலக்ட்ரிக் பஸ்ஸுக்கு தினமும் ரூ.15000.. மிளகாய் அரைக்கும் திமுக அரசு..! போக்குவரத்து துறையில் அநீதி..!
கலெக்ஷன் ஆகிறதோ? இல்லையோ? தினமும் 15 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அந்த கம்பெணிக்கு கொடுத்தே ஆக வேண்டும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சமீப காலமாக அசோக் லேலாண்ட் நிறுவனத்திடம் இருந்து நூற்றுக்கணக்கான தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்கி வருகின்றன.2023-2025 காலகட்டத்தில் 552 ultra-low entry பேருந்துகள், 320 BS VI low-floor பேருந்துகள் போன்ற ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை, மதுரை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் இவை இயக்கப்படுகின்றன. மின்சார தாழ்தள பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் மாசு குறைப்புக்கு உதவுகின்றன. ஆனால், சில பேருந்துகள் அடிக்கடி பழுதடைவது, காற்றோட்டம் குறைவு போன்ற சில புகார்கள் உண்டு.
இந்நிலையில், தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்து தமிழ்நாடு போக்குவரத்து துறையையே குழிதோண்டிப் புதைத்து விட்டதாக நீட் நாராயணன் என்பவர் பகீர் குற்றச்சாட்டை கிளப்பியுள்ளார். இதுகுறித்து அவர், ‘‘திருவான்மியூர் டிப்போவில் போய் பார்த்தீர்கள் என்றால் சாதா பஸ் திருவான்மியூர் டெப்போவுக்குள் நுழையும் முன்பே சாதா பஸ்ஸின் லைட்டை ஆப் செய்து விடுவார்கள். லைட்டை ஆப் செய்துவிட்டு அவுட்டோரில் போய் பேருந்தை நிறுத்தி விடுவார்கள். என்ன காரணம் என்று கேட்டீர்கள் என்றால் சாதா பஸ்ஸில் லைட் போட்டிருந்தால் எல்லா டிக்கெட்டும் அதில் ஏறி விடுமாம். அப்படி ஏறிவிட்டால் டீலக்ஸ் பஸ்ஸில் மக்கள் ஏற மாட்டார்கள். அந்த டீலக்ஸ் பஸுக்கு எல்லா டிக்கெட்டும் போனதற்கு பிறகு சாதா பஸை எடுப்பார்கள். சாரதா பஸ் போர்டு இல்லாமல் இருந்தால் அது டெப்போவுக்குக்கு போய் விடுவதாக மக்கள் நினைப்பார்கள். மக்கள் சாதா பஸை விட்டு டீலக்ஸ் பஸ்ஸில் ஏறுவார்கள். அதன் பிறகு லோக்கல் பஸ் வரும். இப்படிப்பட்ட அசிங்கம் எல்லாம் இங்கு நடந்து கொண்டிருக்கிறது.
இப்போது எலக்ட்ரிக் பஸ் புதிதாக விட்டு இருக்கிறார்கள். அதை தயாரித்தது அசோக் லேலண்ட் கம்பெனி. முதலில் அதை வாங்கி போட்டது மும்பை. அந்த மும்பையில் இப்போது எங்களுக்கு எலக்ட்ரிக் பஸ் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். மற்ற மாநிலங்களும் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். என்ன காரணம் என்று கேட்டால் அதில் சிட்டிங் கெபாசிட்டி ரொம்ப கம்மி. இரண்டாவது ஸ்டாண்டிங் கெப்பாசிட்டி ரொம்ப கம்மி. ஏற்ற, இறக்க தாழ்தள பேருந்து. மழை நேரத்தில் தண்ணீர் தேங்குகிற இடத்தில் வண்டியை நிறுத்தினால் வண்டி சீஸ் ஆகிவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. அடுத்து சென்சார் பஸ் என்பதால் லோக்கல் மெக்கானிக் அல்லது சாதாரண மெக்கானிக் அந்த வண்டியை சரி செய்ய முடியாது. கம்பெனியின் மெக்கானிக்தான் வர வேண்டும். இந்த நான்கு காரணங்களுக்காக எந்த மாநிலமும் வாங்க முன்வரவில்லை.
ஒரு வண்டியின் விலை ரூ.86 லட்சம். அந்தப் பேருந்தின் பேட்டரியை பார்த்தால் பஸ்ஸில் பாதி வரும். இதில் என்னவாயிற்று என்றால் தொழிலாளர்களுக்கும் கொடுக்க முடியவில்லை. எங்கேயும் வாங்கி போடவில்லை என்றால் பிரச்சனையாகிவிடும். தமிழக அரசு இந்த பஸ்ஸை வாங்கியதற்கு கமிஷன் வாங்கினார்களா? வாங்கவில்லையா? என்பதை சொல்ல முடியாது. ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக பேருந்தை வாங்கி போட்டு விட்டார்கள். அசோக் லேலாண்டின் கொலாப்ரேஷன் தான் ஜெர்மனியில் இருக்கக்கூடிய ஓஹெச்எம். அந்த பேருந்துகளின் பக்கவாட்டில் பார்த்திருப்பீர்கள், அவர்களது லோகோ இருக்கும். அந்த கம்பெனியுடன் இவர்கள் ஒப்பந்தம் போட்டு ஒரு நாளைக்கு ஒரு வண்டிக்கு 15 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு கொடுக்க வேண்டும்.
கலெக்ஷன் ஆகிறதோ? இல்லையோ? தினமும் 15 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அந்த கம்பெணிக்கு கொடுத்தே ஆக வேண்டும். நிரந்தர டிரைவர்களை வைத்து இயக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு சம்பளம் அதிகமாக கொடுத்தாக வேண்டும். சென்ற ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 1000 டிரைவர்கள் ரிட்டையர்டு ஆகிவிட்டார்கள். ஆனால் யாரையும் புதிதாக பணிக்கு யாரையும் எடுக்கவில்லை. இப்போது எல்லோரையும் சிஎல் ஆட்களாக போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிஎல் ஆட்களுக்கு ஒரு நாளைக்கு காலையில் ஏறி, இரவில் இறங்கினால் சம்பளம் 1600 ரூபாய். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், நிரந்தர டிரைவர்களுக்கு படிக்காசாக நூத்துக்கு இரண்டு ரூபாய் 60 பைசா கொடுக்க வேண்டும். அது சிஎல் ஆட்களுக்கு கிடையாது. பாவம் அவர்களும் அதே வேலையை தானே பார்க்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு படிக்க ஆசை கேன்சல் செய்து விட்டார்கள்.
இப்போது அவர்களுக்கு மாதச் சம்பளம் என்று சொல்லி அதிலும் ஆயிரம் ரூபாய் பிடித்துக் கொள்கிறார்கள். இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த பேருந்துகளை ஒப்பந்தத்திற்கு எடுத்து இருப்பது யார் என்றால் மருமகன் சபரீசன் சப்போர்ட் ஆட்கள். அவர் அந்தந்த டிப்போவில் இருக்கிற அவர்களது கட்சிக்காரர்களை வைத்து இந்த பேருந்துகளை ஓட்டிக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் பள்ளத்தில் போய்விட்டது. அந்த எலக்ட்ரிக் பஸ்களுக்கு நிறைய இடங்களில் சார்ஜிங் பாயிண்ட் கிடையாது. சென்னையில் அந்த பகுதிகளுக்கு சார்ஜர் போடுவதைத் தான் மெயினாக டிரைவர்கள் பார்க்கிறார்கள். 80% வந்து விட்டால் உடனே அந்த பஸ்ஸை எடுத்து சார்ஜர் போட வேண்டும். இந்த சார்ஜிங் பாயிண்ட் சென்னையில் இரண்டு இடத்தில் தான் வைத்திருக்கிறார்கள்.
ஒன்று பெரும்பாக்கம், இன்னொன்று எம்கேபி நகர். ரெண்டுக்கும் நடுவில் போரூர் டிப்போ, பூந்தமல்லி டிப்போ இருக்கிறது. இவர்களெல்லாம் எவ்வளவு தூரம் அந்த பஸை எடுத்துக் கொண்டு போவார்கள்? இதற்கு ஒரு நாள் போய்விடும். இப்படி எந்த வசதியும் இல்லாமல் எந்த மைண்ட் செட்டும் இல்லாமல் அந்த பேருந்துகளை வாங்கி போட்டு விட்டார்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஓஹெச்எம் கம்பெனியில் கொலாப்ரேஷன் செய்து வாங்கி போட்டார்கள். இந்த எலக்ட்ரிக் பேருந்துகளுக்கு மத்திய அரசு 44% மானியம் தருவதாக சொன்னார்கள். ஆனால், தமிழக அரசு எங்களுக்கு தேவை இல்லை என்று சொல்லிவிட்டது. அந்த நிதியை வாங்கி போட்டிருந்தால் இன்று தமிழக போக்குவரத்து துறையில் நிதிச் சுமை பாதியாகக் குறைந்து இருக்கும். அதை ஏன் திமுக அரசு செய்யவில்லை? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.
