ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்; ரீசார்ஜ் செய்தால் உடனே ரூ.50 கேஷ்பேக்; சூப்பர் சான்ஸ்!
ரிலையன்ஸ் ஜியோ ரூ.50 கேஷ்பேக் வழங்கும் ரீசார்ஜ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் தொடர்பான முழு விவரங்களை விரிவாக காணலாம்.
Reliance Jio Recharge Plan
ஜியோவின் கேஷ்பேக் பிளான்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் செய்யும்போது கேஷ்பேக் வழங்கும் ஒரு சூப்பரான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்படி ஒரு கேஷ்பேக் திட்டம் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறதா? அதாவது ரூ.1,028 விலை கொண்ட கேஷ்பேக்குடன் இந்த திட்டம் டேட்டா, கால்ஸ், எஸ்எம்எஸ் என அனைத்து சலுகையும் வழங்குகிறது. இனி இந்த திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரூ.1,028 விலை கொண்ட இந்த ப்ரீபெய்ட் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இது மட்டுமின்றி உள்ளூர் மற்றும் எஸ்டிடி அன்லிமிடெட் கால்ஸ் செய்ய முடியும். மேலும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களாகும். தினமும் 2ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 168 ஜிபி டேட்டா உங்களுக்கு கிடைக்கும்.
Jio Best Plan
ஸ்விக்கி ஒன் லைட் சந்தா
மேலும் ஜியோ டிவி, ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ சினிமாவிற்கான சந்தா உங்களுக்கு கிடைக்கும். இது தவிர இந்த திட்டத்தின்படி ஸ்விக்கி ஒன் லைட்டுக்கான மூன்று மாத சந்தாவை நீங்கள் பெற முடியும். மேலும் இந்த பிளானில் மிக முக்கிய அம்சமாக நீங்கள் ரூ.1,028 உடன் ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு உடனடியாக ரூ.50 கேஷ் பேக் பெற முடியும். ரிலையன்ஸ் ஜியோ கேஷ்பேக்கை வழங்கும் ஒரே சூப்பர் திட்டம் இதுவாகும்.
டிராய் போட்ட போடு; இனி 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் திட்டங்கள்; இறங்கி வரும் ஜியோ, ஏர்டெல்!
Airtel Recharge Plan
ஏர்டெல் பிளான்
இப்போது ஜியோவின் இந்த திட்டத்தையும், இதே விலையுடன் ஒத்துப்போகும் ஏர்டெல்லின் ரூ.1,029 பிளான்களின் ஒப்பீடு குறித்து பார்க்கலாம். ஏர்டெல் ரூ.1,029 திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்தத் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கும்.
JIO vs Airtel
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா
மேலும் இந்த பிளானில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு மூன்று மாத மொபைல் சந்தாவை நீங்கள் பெற முடியும். இது மட்டுமின்றி அன்லிமிடெட் 5G டேட்டாவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இது தவிர அப்பல்லோ 24/7 உறுப்பினர் சந்தா, இலவச ஹலோடியூன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை இந்த பிளானில் பெற முடியும்.
இந்த இரண்டு திட்டங்களையும் ஒப்பிட்டு பார்த்தால் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.1,028 திட்டம் அதிவேக டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ்,எஸ்எம்எஸ் சலுகைகள் மற்றும் தனித்துவமான கேஷ்பேக் சலுகை ஆகியவற்றில் தனித்து நிற்கிறது. கேஷ்பேக் பெற விரும்புபவர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்யலாம்.
ஜியோ பயனர்கள் காட்டில் அன்லிமிடட் டேட்டா மழை: ரூ.49க்கு அட்டகாசமான டேட்டா பிளான்