- Home
- டெக்னாலஜி
- தண்ணீர் பட்டாலும் வேலை செய்யும்! கெத்து காட்டும் ரெட்மி நோட் 15.. விலையை கேட்டா உடனே வாங்க தோணும்!
தண்ணீர் பட்டாலும் வேலை செய்யும்! கெத்து காட்டும் ரெட்மி நோட் 15.. விலையை கேட்டா உடனே வாங்க தோணும்!
Redmi Note 15 ரெட்மி நோட் 15 5ஜி மற்றும் ரெட்மி பேட் 2 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்! 108MP கேமரா, விலை, ஆஃபர் மற்றும் விற்பனை தேதி குறித்த முழு விவரங்கள் இதோ.

Redmi Note 15 இந்திய சந்தையில் ரெட்மியின் புதிய வரவு
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ரெட்மி நோட் 15 (Redmi Note 15) தொடர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீன தொழில்நுட்ப ஜாம்பவானான சியோமி (Xiaomi), தனது முந்தைய மாடல்களை விடப் பல மடங்கு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போனை களமிறக்கியுள்ளது. இத்துடன், சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்ட 'ரெட்மி பேட் 2 ப்ரோ' (Redmi Pad 2 Pro) டேப்லெட்டையும் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
விலை மற்றும் சலுகை விவரங்கள்
வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இரண்டு சாதனங்களுக்கும் அறிமுகச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
• Redmi Note 15 5G:
o 8GB + 128GB மாடல்: ரூ. 22,999
o 8GB + 256GB மாடல்: ரூ. 24,999
o ஆஃபர்: வங்கிச் சலுகையாக உடனடி தள்ளுபடியாக ரூ. 3,000 கிடைக்கும்.
• Redmi Pad 2 Pro:
o 8GB + 128GB (WiFi): ரூ. 24,999
o 8GB + 128GB (5G): ரூ. 27,999
o 8GB + 256GB (5G): ரூ. 29,999
o ஆஃபர்: முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2,000 உடனடி தள்ளுபடி உண்டு.
இந்த இரண்டு சாதனங்களின் விற்பனை அமேசான் மற்றும் ரெட்மி இணையதளத்தில் ஜனவரி 12 ஆம் தேதி தொடங்குகிறது.
ரெட்மி நோட் 15: டிஸ்பிளே மற்றும் கேமரா
ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போன் 6.77-இன்ச் AMOLED திரையுடன் வருகிறது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (Peak Brightness) கொண்டுள்ளதால், வெயிலிலும் திரை தெளிவாகத் தெரியும். கேமராவைப் பொறுத்தவரை, இதில் 108MP முதன்மை கேமரா (OIS) மற்றும் 8MP இரண்டாவது கேமரா உள்ளது. செல்ஃபி எடுக்க 20MP முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சமே 'Hydro Touch 2.0' தொழில்நுட்பம்தான்; கைகள் ஈரமாக இருந்தாலும் போனைச் சிரமமின்றிப் பயன்படுத்த முடியும். மேலும் இது IP66 தரச் சான்றிதழ் பெற்றுள்ளது.
செயல்திறன் மற்றும் பேட்டரி
இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 6 Gen 3 ப்ராசஸர் மூலம் இயங்குகிறது. ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான HyperOS 3 மென்பொருளில், செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. நீண்ட நேரம் உழைக்கக்கூடிய 5500mAh பேட்டரி மற்றும் அதை வேகமாக சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.
ரெட்மி பேட் 2 ப்ரோ: டேப்லெட் பிரியர்களுக்கு விருந்து
பெரிய திரையை விரும்பும் பயனர்களுக்காக ரெட்மி பேட் 2 ப்ரோ அறிமுகமாகியுள்ளது.
• திரை: 12.1-இன்ச் 2.8K டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட்.
• ப்ராசஸர்: சக்திவாய்ந்த Qualcomm Snapdragon 7s Gen 4 சிப்செட்.
• பேட்டரி: மலைக்க வைக்கும் 12000mAh பேட்டரி திறன்.
•இணைப்பு:
இது 5G மற்றும் eSIM தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ வசதியுடன் வருவதால் வீடியோ மற்றும் கேமிங் அனுபவம் சிறப்பாக இருக்கும். இதற்கென பிரத்யேக கீபோர்ட் மற்றும் ஸ்மார்ட் பென் ஆகியவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

