ரியல்மி தார் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ரியல்மி GT நியோ 3 தார் லவ் அண்ட் தண்டர் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
ரியல்மி நிறுவனம் GT நியோ 3 ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ரியல்மி GT நியோ 3 150 வாட் தார்: லவ் மற்றும் தண்டர் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
இதையும் படியுங்கள்: ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 50MP கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்...!
புதிய லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலுடன் தார்: லவ் அண்ட் தண்டர் தீம் கார்டுகள், வால்பேப்பர், ஸ்டிக்கர், மெடல் மற்றும் சிம் கார்டு டிரே பின் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்: புது ஐபோன் 14 சீரிசில் பாரபட்சம்... இணையத்தில் லீக் ஆன அதிர்ச்சி தகவல்..!
இவை தவிர ஒரிஜினல் ரியல்மி GT நியோ 3 150 வாட் ஸ்மார்ட்போனின் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவிவ்லை. அந்த வகையில் இந்த மாடலில் 6.7 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 8100 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படியுங்கள்: மிகக் குறைந்த விலையில் சாம்சங் 5ஜி போன்... எப்போ வெளியாகுது தெரியுமா?
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சமாக 150 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இது ஸ்மார்ட்போனினை 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விடும்.
ரியல்மி GT நியோ 3 150 தார்: லவ் அண்ட் தண்டர் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் 12ஜஜிபி ரேம், 256ஜிபி நைட்ரோ புளூ நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 42 ஆயிரத்து 999 ஆகும். ரியல்மி GT நியோ 3 ஒரிஜினல் மாடலின் விலையும் இதே தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.