புது ஐபோன் 14 சீரிசில் பாரபட்சம்... இணையத்தில் லீக் ஆன அதிர்ச்சி தகவல்..!
ஆப்பிள் நிறுவனம் இதே பிராசஸர்களை புதிய ஐபோன் சீரிசின் ரெகுலர் மாடல்களில் வழங்க இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. புது ஐபோன் சீரிஸ் வெளியீடு நெருங்கி வரும் சூழலில், இதன் விற்பனை குறித்து பிரபல ஆப்பிள் வல்லுனர் மின் சி கியூ தனது கணிப்புகளை தெரிவித்து இருக்கிறார். அதன்படி இந்த ஆண்டு ஆப்பிள் தனது ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களை புதிய ஏ16 பயோனிக் சிப்செட் உடன் அரிமுகம் செய்யும் என அவர் தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படியுங்கள்: நெட்ப்ளிக்ஸ் சந்தா முற்றிலும் இலவசம்.... ஜியோ வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..!
இத்துடன் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 மேக்ஸ் மாடல்களில் ஏ15 பயோனிக் பிராசஸர் வழங்கப்படும் என மின் சி கியூ தெரிவித்து இருக்கிறார். தற்போது விற்பனை செய்யப்படும் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களில் ஏ15 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. . ஆப்பிள் நிறுவனம் இதே பிராசஸர்களை புதிய ஐபோன் சீரிசின் ரெகுலர் மாடல்களில் வழங்க இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: மிகக் குறைந்த விலையில் சாம்சங் 5ஜி போன்... எப்போ வெளியாகுது தெரியுமா?
ப்ரோ மாடல்களுக்கு முக்கியத்துவம்:
புதிய ஐபோன் சீரிசின் ப்ரோ மாடல்களில் சற்றே அதிவேகமான மற்றும் மேம்பட்ட ஏ16 பயோனிக் பிராசஸர் வழங்கப்படலாம். இந்த ஆண்டு ரெகுலர் மாடல்களை விட ப்ரோ மாடல்கள் விற்பனையில் கூடுதல் கவனம் செலுத்த ஆப்பிள் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஃபிளாக்ஷிப் மற்றும் ஃபிளாக்ஷிப் இல்லாத சிப்செட்களின் இடைவெளியை 60 சதவீதமாக மாற்றும் என அவர் தெரிவித்து உள்ளார்.
இதையும் படியுங்கள்: ரூ. 109 விலையில் புது ரிசார்ஜ் பேக் அறிவித்த ஏர்டெல்..!
இந்த இலக்கை அடைய ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ப்ரோ அல்லாத மாடல்களுக்கு ஏற்ற வகையில் விளம்பர யுக்திகளை கையாள இருக்கிறது. அதன்படி அம்சங்கள் மட்டும் இன்றி விளம்பரங்களிலும், ப்ரோ மாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட இருக்கிறது. ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருந்த இதர தகவல்களிலும் இதே போன்ற முறையை ஆப்பிள் கையாள இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.
பன்ச் ஹோல் டிஸ்ப்ளே:
ஐபோன் 14 சீரிசில் நாட்ச் டிஸ்ப்ளேவுக்கு மாற்றாக பன்ச் ஹோல் டிஸ்ப்ளே வழங்கப்பட இருக்கிறது. ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் வித்தியாசமான கட்-அவுட் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது. புது ஐபோன் 14 ப்ரோ கேமரா மாட்யுல் முந்தைய மாடலில் வழங்கப்பட்டதை விட அளவில் பெரியதாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய மாடலில் ஆப்பிள் நிறுவனம் 48MP கேமரா வழங்கலாம் என கூறப்படுகிறது.
இது ஐபோன் 13 ப்ரோ மாடலில் உள்ளதை விட 57 சதவீதம் வரை பெரிய சென்சார் ஆகும். பிரைமரி கேமரா சென்சாருடன், அல்ட்ரா வைடு கேமரா மற்றும் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படும் என தெரிகிறது. இத்து"ன் LiDAR சென்சார் ப்ரோ மாடல்களில் மட்டும் வழங்கப்படலாம்.