- Home
- டெக்னாலஜி
- மொபைல் சந்தையை ஆட்டங்காண வைத்த ரியல்மி! 200MP கேமரா, 7000mAh பேட்டரியுடன் மிரட்டல் அறிமுகம்!
மொபைல் சந்தையை ஆட்டங்காண வைத்த ரியல்மி! 200MP கேமரா, 7000mAh பேட்டரியுடன் மிரட்டல் அறிமுகம்!
Realme 16 Pro 200MP கேமரா, 7000mAh பேட்டரியுடன் ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் மற்றும் விற்பனை தேதி விவரங்கள் இதோ.

Realme 16 Pro இந்தியாவில் களமிறங்கிய ரியல்மி படை
சீன தொழில்நுட்ப நிறுவனமான ரியல்மி (Realme), புத்தாண்டின் தனது முதல் பிரம்மாண்ட அறிமுகமாக 'ரியல்மி 16 ப்ரோ' (Realme 16 Pro) மற்றும் 'ரியல்மி 16 ப்ரோ பிளஸ்' (Realme 16 Pro+) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றுடன் பட்ஜெட் விலையில் 'ரியல்மி பேட் 3' (Realme Pad 3) டேப்லெட் மற்றும் 'ரியல்மி பட்ஸ் 8' (Realme Buds 8) இயர்பட்ஸும் அறிமுகமாகியுள்ளன. குறிப்பாக 200MP கேமரா மற்றும் 7000mAh பேட்டரி போன்ற பிரம்மாண்ட அம்சங்கள் டெக் பிரியர்களைக் கவர்ந்துள்ளன.
விலை மற்றும் சலுகை விவரங்கள்
வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அறிமுகச் சலுகைகளுடன் இந்த சாதனங்கள் விற்பனைக்கு வருகின்றன.
• Realme 16 Pro: இதன் ஆரம்ப விலை (8GB+128GB) ரூ. 31,999. வங்கிச் சலுகையாக ரூ. 3,000 உடனடி தள்ளுபடி உண்டு.
• Realme 16 Pro+: இதன் ஆரம்ப விலை (8GB+128GB) ரூ. 39,999. இதற்கு ரூ. 4,000 வங்கித் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
• Realme Pad 3: இதன் WiFi மாடல் ரூ. 26,999-க்கும், 5G மாடல் ரூ. 29,999-க்கும் கிடைக்கிறது.
• Realme Buds 8: இதன் விலை ரூ. 3,599 (ரூ. 200 உடனடி தள்ளுபடி உண்டு).
கேமரா மற்றும் டிஸ்பிளே: கண்களுக்கு விருந்து
இரண்டு ஸ்மார்ட்போன்களும் 6.78-இன்ச் 1.5K AMOLED திரையுடன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளன. புகைப்படப் பிரியர்களுக்காக, இரண்டு போன்களிலும் 200MP முதன்மை கேமரா பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, 'ரியல்மி 16 ப்ரோ பிளஸ்' மாடலில் OIS தொழில்நுட்பம் மற்றும் பிரத்யேக 50MP போர்ட்ரைட் டெலிபோட்டோ லென்ஸ் உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்காக 50MP முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.
செயல்திறன் மற்றும் பேட்டரி: நிற்காத வேகம்
Realme 16 Pro+ மாடல் சக்திவாய்ந்த Qualcomm Snapdragon 7 Gen 4 ப்ராசஸரிலும், சாதாரண Pro மாடல் MediaTek Dimensity 7300 Max சிப்செட்டிலும் இயங்குகின்றன. ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான Realme UI 7 மென்பொருளில், கூகுள் ஜெமினி ஏஐ (Google Gemini AI) அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. நீண்ட நேரம் உழைக்கக்கூடிய 7000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இதில் உள்ளது. மேலும், தண்ணீர் மற்றும் தூசியிலிருந்து பாதுகாக்க IP69K வரை தரச் சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரியல்மி பேட் 3 மற்றும் விற்பனை தேதி
புதிய ரியல்மி பேட் 3 டேப்லெட் 11.6-இன்ச் 2.8K திரையையும், மிகப்பெரிய 12,200mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 7300 மேக்ஸ் சிப்செட் மூலம் இது இயங்குகிறது.
விற்பனை எப்போது?
ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஜனவரி 9 மதியம் 12 மணிக்கும், டேப்லெட் விற்பனை ஜனவரி 16 அன்றும் பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ரியல்மி இணையதளத்தில் தொடங்குகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

