MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • நிஜமான படமா, ஏ.ஐ கிராபிக்ஸா? வாட்ஸ்அப் சேனல்களில் புதிய ஏ.ஐ லேபிள் முறை அமல்!

நிஜமான படமா, ஏ.ஐ கிராபிக்ஸா? வாட்ஸ்அப் சேனல்களில் புதிய ஏ.ஐ லேபிள் முறை அமல்!

வாட்ஸ்அப்-ல் பகிரப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்டவையா? எடிட் செய்யப்பட்டவையா? என்பதைப் பயனர்கள் எளிதாகக் கண்டறியும் வகையில், ஏ.ஐ. கன்டென்ட் லேபிள் என்ற புதிய வசதியை வாட்ஸ்அப் சோதனை முறையில் அறிமுகப்படுத்தி வருகிறது.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 25 2026, 06:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
வாட்ஸ்அப்பில் இனி போலிக்கு இடமில்லை!
Image Credit : Chatgpt

வாட்ஸ்அப்பில் இனி போலிக்கு இடமில்லை!

இணையத்தில் நாம் பார்க்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் உண்மையா? ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியா என்று பிரித்தறிய முடியாமல் திணறும் காலம் இது. அந்த அளவிற்கு ஏ.ஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில், உலகின் முன்னணி தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ்அப் ஒரு அதிரடியான புதிய அம்சத்தைக் களம் இறக்குகிறது.

வாட்ஸ்அப் சேனல்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் அல்லது வீடியோ ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்டதா? மாற்றியமைக்கப்பட்டதா? என்பதை பயனர்கள் நொடியில் கண்டறிய 'ஏ.ஐ. கன்டென்ட் லேபிள்' (AI Content Label) என்ற புதிய வசதியை வாட்ஸ்அப் படிப்படியாக அறிமுகப்படுத்தி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
எப்படிச் செயல்படும் இந்த புதிய அம்சம்?
Image Credit : Chatgpt

எப்படிச் செயல்படும் இந்த புதிய அம்சம்?

நிர்வாகிகளுக்கான கட்டுப்பாடு:

வாட்ஸ்அப் சேனல் நிர்வாகிகள் தங்களது சேனல்களில் ஏதேனும் புகைப்படம் அல்லது வீடியோவைப் பதிவிடும்போது, அது ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்டிருந்தாலோ அல்லது எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டிருந்தாலோ, அதற்கான 'ஏ.ஐ கன்டென்ட் லேபிளை' அவர்களே சுயவிருப்பத்துடன் இணைக்க முடியும்.

நீக்கவே முடியாது:

இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒருமுறை அந்தப் பதிவுக்கு 'ஏ.ஐ லேபிள்' சேர்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுவிட்டால், அதன்பிறகு அந்த லேபிளை யாராலும் நீக்க முடியாது. இதனால் போலியான பதிவுகள் மூலம் மக்களைத் தவறாக வழிநடத்துவது தடுக்கப்படும்.

சட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப மாற்றம்:

உலகில் உள்ள சில நாடுகளில் ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை வெளிப்படையாக அடையாளப்படுத்துவது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப சேனல் நிர்வாகிகளுக்கு இதுகுறித்த முறையான அறிவிப்புகளையும் விழிப்புணர்வையும் வாட்ஸ்அப் வழங்கி வருகிறது.

33
யாருக்கெல்லாம் இப்போது கிடைக்கும்?
Image Credit : Chatgpt

யாருக்கெல்லாம் இப்போது கிடைக்கும்?

இந்த புதிய வசதி தற்போது ஆரம்பக்கட்ட சோதனை முறையில் உள்ளது. முதற்கட்டமாக, ஆண்ட்ராய்டு பீட்டா (Beta) சோதனைப் பதிப்பில் குறிப்பிட்ட சில பயனர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஐபோன் (iOS) பீட்டா பயனர்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அனைத்து பொதுப் பயனர்களின் பயன்பாட்டிற்கும் இந்த அம்சம் எப்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்பது குறித்த தேதியை வாட்ஸ்அப் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. எனினும், சோதனை ஓட்டங்கள் முடிவடைந்ததும் படிப்படியாக உலகெங்கிலும் உள்ள அனைத்துப் பயனர்களுக்கும் இது பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி வாட்ஸ்அப் சேனல்களில் வரும் ஏ.ஐ வித்தைகளைச் சாமர்த்தியமாகக் கண்டறிந்துவிடலாம்!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Recharge plans : நோ டேட்டா... ஒன்லி கால்ஸ்..! டிராய் கொண்டுவரும் புதிய ரீசார்ஜ் பிளான்கள்!
Recommended image2
500 ஆண்டுகளுக்கு பின் வெடித்த ரஷ்ய எரிமலை: விண்வெளியில் இருந்து துல்லியமாக படம்பிடித்த ‘நிசார்’ செயற்கைக்கோள்!
Recommended image3
காய்ச்சல், இதயத் துடிப்பு, SpO2: விரலிலேயே கண்காணிக்கும் புதிய போட் ஸ்மார்ட் ரிங் அறிமுகம்!
Related Stories
Recommended image1
Mivi One 5G: வெறும் 12 ஆயிரத்துக்கு ஒரு சூப்பர் 5G போன்.. பீச்சர்ஸ்ல குறையே இல்லை!
Recommended image2
காய்ச்சல், இதயத் துடிப்பு, SpO2: விரலிலேயே கண்காணிக்கும் புதிய போட் ஸ்மார்ட் ரிங் அறிமுகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved