MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • காய்ச்சல், இதயத் துடிப்பு, SpO2: விரலிலேயே கண்காணிக்கும் புதிய போட் ஸ்மார்ட் ரிங் அறிமுகம்!

காய்ச்சல், இதயத் துடிப்பு, SpO2: விரலிலேயே கண்காணிக்கும் புதிய போட் ஸ்மார்ட் ரிங் அறிமுகம்!

ஸ்மார்ட் வாட்ச்களுக்கு மாற்றாக இளைஞர்களிடையே பிரபலமாகி வரும் ஸ்மார்ட்ரிங் வரிசையில், boAt நிறுவனம் தனது புதிய ‘ஆக்டிவ் பிளஸ்’ ஸ்மார்ட் மோதிரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அமேசான் தளத்தில் அதிரடிச் சலுகையாக தற்போது வெறும் ரூ.2,220-க்குக் கிடைக்கிறது.

1 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 25 2026, 07:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விரலில் மின்னும் போட் ஸ்மார்ட்ரிங்!
Image Credit : Boat

விரலில் மின்னும் போட் ஸ்மார்ட்ரிங்!

கைகளில் ஸ்மார்ட் வாட்ச் கட்டிக்கொண்டு வலம் வந்த காலம் மாறி, இப்போது விரலில் 'ஸ்மார்ட் ரிங்' அணியும் புதிய ட்ரெண்ட் இளசுகளிடையே வேகமாகப் பரவி வருகிறது. அந்த வரிசையில், முன்னணி ஆடியோ மற்றும் கேட்ஜெட் நிறுவனமான boAt, இளைஞர்களைக் குறிவைத்துத் தனது புதிய 'ஆக்டிவ் பிளஸ்' (Active Plus) ஸ்மார்ட்ரிங்கை களமிறக்கியுள்ளது. இதன் அசல் விலை ரூ.9,999 என்றாலும், அமேசான் தளத்தில் அதிரடி சலுகையாக தற்போது வெறும் ரூ.2,220-க்கு கிடைக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ரூ.10,000 மோதிரம் வெறும் ரூ.2,220-க்கு!
Image Credit : Boat

ரூ.10,000 மோதிரம் வெறும் ரூ.2,220-க்கு!

முழுமையான உடல்நலக் கண்காணிப்பு:

மிக நுண்ணிய சென்சார்கள் மூலம் உங்கள் இதயத் துடிப்பு, மூச்சுத் திறன், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு (SpO2) மற்றும் தூக்கத்தின் தரம் ஆகியவற்றை இது துல்லியமாகக் கணக்கிடுகிறது.

முன்கூட்டியே எச்சரிக்கும் உடல் வெப்பநிலை:

உடலின் வெப்பநிலையைத் தொடர்ந்து கண்காணித்து, காய்ச்சல் போன்ற அறிகுறிகளை முன்கூட்டியே எச்சரிக்கிறது. மேலும், உடற்பயிற்சிக்கு முந்தைய மற்றும் பிந்தைய வெப்பநிலை மாறுபாடுகளையும் பதிவு செய்து காட்டுகிறது.

34
ஸ்மார்ட் வாட்ச் வேண்டாம், இனி இது போதும்!
Image Credit : Boat

ஸ்மார்ட் வாட்ச் வேண்டாம், இனி இது போதும்!

ஸ்டைலான பிரீமியம் வடிவமைப்பு:

துருப்பிடிக்காத, கீறல்கள் விழாத உயர்தர ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு இது நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.

தூசி, வியர்வைக்கு ‘நோ’:

விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் போது ஏற்படும் வியர்வை மற்றும் தூசியால் இது எந்தவிதப் பாதிப்பும் அடையாது.

மிரட்டலான பேட்டரி & வயர்லெஸ் சார்ஜிங்:

வயர் தொந்தரவு இல்லாமல் மேக்னடிக் சார்ஜிங் (Magnetic Charging) மூலம் எளிதாக சார்ஜ் செய்துகொள்ளலாம். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 30 நாள்கள் வரை பேட்டரி நீடிக்கும் என்பது இதன் மிகப்பெரிய பிளஸ்.

44
ஆரோக்கியத்தை விரலிலேயே கண்காணிக்கும்!
Image Credit : Boat

ஆரோக்கியத்தை விரலிலேயே கண்காணிக்கும்!

போட் கிரெஸ்ட் (boAt Crest) ஆப்: மோதிரம் பதிவு செய்யும் அனைத்து உடல்நலத் தரவுகளையும் 'boAt Crest' செயலியுடன் இணைத்து எளிதாகப் பதிவிறக்கம் செய்து கண்காணிக்கலாம். வழக்கமான வாட்ச்களுக்குப் பதிலாக, விரலிலேயே அடங்கும் நவீன தொழில்நுட்பத்தை விரும்பும் இளைஞர்களுக்கு இந்த boAt ஆக்டிவ் பிளஸ் ஒரு சிறந்த சாய்ஸ்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mivi One 5G: வெறும் 12 ஆயிரத்துக்கு ஒரு சூப்பர் 5G போன்.. பீச்சர்ஸ்ல குறையே இல்லை!
Recommended image2
பெட்ரோல், டீசலுக்கு எண்டு கார்டு? விவசாயப் பயிர்களிலிருந்து நேரடியாக எரிபொருள் தயாரிக்கும் அசத்தல் டெக்னாலஜி!
Recommended image3
மனிதர்களுக்கு பல மாதங்கள்... கிளாட் ஏ.ஐ-க்கு வெறும் 21 மணி நேரம்: மரபணு அறிவியலில் ஆந்த்ரோபிக் நிகழ்த்திய மிரட்டல் சாதனை!
Related Stories
Recommended image1
Mivi One 5G: வெறும் 12 ஆயிரத்துக்கு ஒரு சூப்பர் 5G போன்.. பீச்சர்ஸ்ல குறையே இல்லை!
Recommended image2
பெட்ரோல், டீசலுக்கு எண்டு கார்டு? விவசாயப் பயிர்களிலிருந்து நேரடியாக எரிபொருள் தயாரிக்கும் அசத்தல் டெக்னாலஜி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved