MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • வானில் இருந்து இறங்கிய பிரம்மாண்ட சிவப்புத் தூண்கள்... உலகையே வியப்பில் ஆழ்த்திய அரிய இயற்கை நிகழ்வு!

வானில் இருந்து இறங்கிய பிரம்மாண்ட சிவப்புத் தூண்கள்... உலகையே வியப்பில் ஆழ்த்திய அரிய இயற்கை நிகழ்வு!

ஸ்பெயின் கடற்கரைக்கு அருகே உள்ள வான்பரப்பில், வானிலிருந்து சிவப்பு நிற ஒளித் தூண்கள் பூமியை நோக்கி இறங்குவது போன்ற அபூர்வ காட்சி தென்பட்டு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 13 2026, 11:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விண்வெளியில் இருந்து இறங்கிய சிவப்புத் தூண்கள்
Image Credit : x

விண்வெளியில் இருந்து இறங்கிய சிவப்புத் தூண்கள்

ஸ்பெயின் கடற்கரைக்கு அருகே உள்ள வான்பரப்பில், வானத்திலிருந்து பிரம்மாண்டமான சிவப்பு நிற ஒளித் தூண்கள் பூமியை நோக்கி இறங்குவது போன்ற அபூர்வ காட்சி அண்மையில் தென்பட்டு உலகம் முழுவதும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏதோ அறிவியல் புனைகதைத் திரைப்படங்களில் வருவது போன்ற இந்த அற்புதக் காட்சி, இயற்கையின் மிக அரிய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. முதல் பார்வையில் விசித்திரமான சிவப்பு மின்னல் தூண்கள் போலத் தோன்றும் இந்த நிகழ்வு, அறிவியலில் “ரெட் ஸ்பிரைட்” (Red Sprite) என்று அழைக்கப்படும் அரிய வளிமண்டல மின்னியல் நிகழ்வாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கேமராவில் சிக்கிய அதிசயக் காட்சி!
Image Credit : x

கேமராவில் சிக்கிய அதிசயக் காட்சி!

இந்த அரிய காட்சியை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஃப்ளோரியன் ரியூ (Florian Riou) தனது கேமராவில் துல்லியமாகப் படம்பிடித்துள்ளார். பிரான்ஸுக்குச் சொந்தமான கோர்சிகா (Corsica) தீவில் உள்ள கால்வி (Calvi) பகுதியிலிருந்து அவர் வானைக் கவனித்துக் கொண்டிருந்தபோது, தொலைவில் ஸ்பெயின் கடற்கரைக்கு அருகே உருவான மிகச் சக்திவாய்ந்த இடியுடன் கூடிய புயல் மேகங்களுக்கு மேலே இந்த சிவப்பு ஒளித் தூண்கள் வானில் பளீரிட்டுள்ளன.

34
‘ரெட் ஸ்பிரைட்’ என்றால் என்ன?
Image Credit : x

‘ரெட் ஸ்பிரைட்’ என்றால் என்ன?

பொதுவாக நாம் பார்க்கும் வழக்கமான மின்னல்கள் மேகங்களிலிருந்து கீழ்நோக்கி பூமியை நோக்கிப் பாயும். ஆனால் ‘ரெட் ஸ்பிரைட்’ முற்றிலும் மாறுபட்டது. இது இடியுடன் கூடிய புயல் மேகங்களுக்கு மேலே, பூமியின் மேல் வளிமண்டலத்தில் உருவாகிறது. பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 50 முதல் 90 கிலோமீட்டர் உயரத்தில் இந்த விசித்திரமான ஒளி நிகழ்வு அரங்கேறுகிறது. புயல் மேகங்களில் மிகச் சக்திவாய்ந்த நேர்மறை மின்னல் (Positive Lightning) தாக்கம் ஏற்படும் போது, அது வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் வலிமையான மின்புலத்தை (Electric Field) உருவாக்குகிறது.

அந்த மின்புலம் அங்குள்ள நைட்ரஜன் மூலக்கூறுகளைத் தூண்டுவதால், அவை பிரகாசமான சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற ஒளியை உமிழ்கின்றன. இதனால் வானில் பிரம்மாண்ட தூண்கள் போன்றோ அல்லது கடலில் நீந்தும் விசித்திர ஜெல்லிமீன் (Jellyfish) போன்ற வடிவங்களிலோ இந்த ஒளிக்காட்சிகள் தோன்றுகின்றன.

44
கண்ணிமைக்கும் நேரத்தில் மறையும் மாயம்!
Image Credit : x

கண்ணிமைக்கும் நேரத்தில் மறையும் மாயம்!

ரெட் ஸ்பிரைட் நிகழ்வு மிக மிகக் குறுகிய காலமே நீடிக்கும். பொதுவாக இது சில மில்லி விநாடிகள் மட்டுமே மின்னி மறைந்துவிடும் என்பதால், வெறும் கண்களால் மனிதர்கள் இதைக் காண்பது மிகவும் கடினம். நவீன அதிவேக கேமராக்கள் (High-speed cameras) மூலமாகவே இவற்றைப் படம் பிடிக்க முடிகிறது.

உலகின் பல பகுதிகளில் தீவிர இடியுடன் கூடிய புயல்கள் உருவாகும் போது ரெட் ஸ்பிரைட் நிகழ்வு உருவாவதற்கான வாய்ப்புகள் உண்டு. இருப்பினும், அதைப் பார்ப்பதும் கேமராவில் பதிவு செய்வதும் பெரும் சவாலாகும். தெளிவான வானம், செயற்கை வெளிச்சம் இல்லாத குறைந்த ஒளி மாசு (Low light pollution), பல கிலோமீட்டர் தொலைவில் நிலவும் சக்திவாய்ந்த புயல் மேகங்கள், சரியான பார்வைக் கோணம் ஆகிய அனைத்தும் கச்சிதமாகக் கூடிவரும் தருணத்தில் மட்டுமே இந்த சிவப்பு நிற இயற்கையின் அதிசயத்தைக் காண முடியும்.

மனிதக் கண்களுக்கு அவ்வளவு எளிதில் புலப்படாத இந்த ரெட் ஸ்பிரைட் நிகழ்வு, நமது பூமியின் வளிமண்டலத்தில் இன்னும் விடை தெரியாத எத்தனையோ ஆச்சரியமான அறிவியல் மர்மங்கள் பொதிந்து கிடக்கின்றன என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
அறிவியல்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
10,000mAh vs 20,000mAh: மொபைலுக்கு எந்த பவர் பேங்க் சரியான தேர்வு? வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 5 சீக்ரெட்ஸ்!
Recommended image2
உலகின் முதல் டிரிபிள் 200MP கேமரா, 8000mAh பேட்டரி: அக்.21-ல் சர்வதேச அளவில் களமிறங்கும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்10 சீரிஸ்!
Recommended image3
கண்ணுக்கு தெரியாத 'ஸ்மார்ட் டாட்டூ'... ஒளியின் அலைநீளத்திற்கு ஏற்ப நிறம் மாறும் டாட்டூ மை கண்டுபிடிப்பு!
Related Stories
Recommended image1
கண்ணுக்கு தெரியாத 'ஸ்மார்ட் டாட்டூ'... ஒளியின் அலைநீளத்திற்கு ஏற்ப நிறம் மாறும் டாட்டூ மை கண்டுபிடிப்பு!
Recommended image2
மண் இல்லாமலே செழித்து வளரும் கீரை, தக்காளி... நவீன 'ஹைட்ரோபோனிக்ஸ்' வீட்டுத் தோட்டம் அமைப்பது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved