அசத்தலான அம்சங்கள்.. பட்ஜெட் விலையில் மாஸ் காட்டும் ஓப்போ ரெனோ 14 5G
ஓப்போ ரெனோ 14 5G மாடல் அசத்தலான வடிவமைப்பு, 6.59 இன்ச் AMOLED ஸ்கிரீன், 50MP கேமரா மற்றும் 6000mAh பேட்டரியுடன் அறிமுகம். IP66, IP68, IP69 நீர் எதிர்ப்புத் திறன் மற்றும் 80W SUPERVOOC சார்ஜிங் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

ஓப்போ ரெனோ 14 5ஜி
ஓப்போ நிறுவனம் ரெனோ 14 5ஜி (Oppo Reno 14 5G) மாடல்-ஐ அசத்தலான வடிவமைப்பில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 6.59 இன்ச் கொண்ட பிளாட் AMOLED ஸ்கிரீன் 1.6mm பார்டர்களுடன் முழுத்திரை அனுபவத்தை அளிக்கிறது. 120Hz ஸ்மார்ட் அடாப்டிவ் ஸ்கிரீன் 1.5K ரெசல்யூஷன் கொண்டது. இந்த ஃபோன் மிகவும் மெல்லியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வெறும் 7.42mm தடிமன் மற்றும் 187 கிராம் எடை மட்டுமே கொண்டதால் மிகவும் இலகுவாக உள்ளது.
வண்ண வகைகள்
முத்து வெள்ளை - மென்மையான அமைப்பு, கைரேகைகள் பதியாது. காட்டுப் பச்சை - ஒளிரும் வளைய வடிவமைப்புடன் மாறும் ஒளி விளைவை அளிக்கிறது. இந்த ஃபோனின் உடலுக்கு ஏரோஸ்பேஸ் கிரேடு அலுமினியம் பிரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சாதாரண பிளாஸ்டிக்கை விட 200% வலிமையானது.
ஓப்போ ரெனோ14 வடிவமைப்பு
இந்த ஃபோனின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i கவர் பயன்படுத்தப்படுவதால் கீறல்களுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. கூடுதலாக ஸ்பாஞ்ச் பயோனிக் கோட்டிங் தொழில்நுட்பம் அதிர்ச்சி பாதுகாப்பை வழங்குகிறது. இந்த ஃபோனில் IP66, IP68, IP69 நீர் எதிர்ப்புத் திறன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஃபோன் முழுவதுமாக நீரில் மூழ்கினாலும் பாதிக்கப்படாது.
கேமராவின் சிறப்புகள்
இந்த ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த கேமரா வழங்கப்பட்டுள்ளது. Reno14 5G-ல் 50MP ஹைபர்டோன் டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. இதில் பிரதான கேமராவாக Sony IMX882 சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 50MP, 3.5x ஆப்டிகல் ஜூம் டெலிஃபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அல்ட்ரா வைட் 8 மெகாபிக்சல் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 50 மெகாபிக்சல்கள் கொண்ட முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ரெனோ 14 அம்சங்கள்
ஓப்போ Reno 14 5G கேமரா 3.5x டெலிஃபோட்டோ ஜூம் போர்ட்ரெய்ட்கள், பயணப் புகைப்படங்களை அற்புதமாகக் கைப்பற்றுகிறது. 120x டிஜிட்டல் ஜூம் AI உதவியுடன் தொலைதூர விவரங்களையும் தெளிவாகக் காட்டுகிறது. 4K HDR வீடியோ பதிவு (60fps) - பிரதான, டெலிஃபோட்டோ, முன் கேமராவில் வழங்கப்பட்டுள்ளது. டிரிபிள் AI ஃபிளாஷ் சிஸ்டம் குறைந்த வெளிச்சத்திலும் இயற்கையான டோனுடன் பிரகாசமான புகைப்படங்களை எடுக்க உதவுகிறது. நீருக்கடியில் புகைப்படம் எடுக்கும் முறை உள்ளது.
பெரிய பேட்டரி, வேகமான சார்ஜிங்
பேட்டரியைப் பொறுத்தவரை, இந்த ஃபோனில் 6000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் தொடர்ந்து வேலை செய்யும் என்று நிறுவனம் கூறுகிறது. 80W SUPERVOOC சார்ஜிங்கை ஆதரிக்கும் இந்த ஃபோன் 48 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிறது. 10 நிமிட சார்ஜிங்கில் 12.8 மணிநேர அழைப்புகள் அல்லது 6.5 மணிநேர யூடியூப் ஸ்ட்ரீமிங் செய்யலாம். 5 ஆண்டுகள் வரை பேட்டரி செயல்திறன் குறையாது என்று நிறுவனம் கூறுகிறது.
விலை என்ன?
Reno14 5G-ல் 4nm MediaTek Dimensity 8350 சிப் வழங்கப்பட்டுள்ளது. Cortex-A715 கோர் டிசைன் 30% குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தி சிறந்த செயல்திறனை அளிக்கிறது. Mali-G615 GPU கேமிங் மற்றும் வீடியோக்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்கிறது. AI பணிகளுக்கு என பிரத்யேக NPU 780 AI பிராசஸர் இருப்பதால் AI அம்சங்கள் வேகமாக வேலை செய்கின்றன.
விலை எவ்வளவு?
விலையைப் பொறுத்தவரை, 8 ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்பு வகை ரூ.37,999, 12 ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்பு ரூ.39,999, 12 ஜிபி ரேம், 512 ஜிபி சேமிப்பு வகை ரூ.42,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட், அமேசான் போன்ற இணையதளங்கள் மற்றும் ஓப்போ ஸ்டோரிலும் கிடைக்கிறது.