Asianet News TamilAsianet News Tamil

OPPO K12x 5G: கம்மி பட்ஜெட்டில் ஒர்த்தான ஓப்போ ஸ்மார்ட்போன்! சூப்பரான ப்ரீமியம் AI அம்சங்கள்!

OPPO K12x 5G: ஓப்போ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் OPPO K12x 5G ஸ்பிளாஷ் டார்ச் (Splash Touch), (ஏஐ லிங்க்பூஸ்ட்) AI LinkBoost மற்றும் அல்ட்ரா-பிரைட் டிஸ்ப்ளே எனக் கவர்ச்சிகரமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் 5,100mAh பேட்டரி நான்கு வருடம் உழைக்கும் உத்தரவாதம் கொண்டது. விலையும் ரூ.15,000 க்கும் குறைவு.

OPPO K12x 5G Daily-Use Premium smartphones Loaded With AI Features Starting From INR 12999 sgb
Author
First Published Aug 6, 2024, 10:30 AM IST | Last Updated Aug 6, 2024, 2:05 PM IST

ஸ்மார்ட்போன் வாங்குபவர்கள், செயல்திறன் மற்றும் நீடித்த உழைப்பை வழங்கும் ஸ்மார்ட்போன்களையே விரும்புகிறார்கள். அதுவும் குறைந்த பட்ஜெட்டுக்குள், நீண்ட கால செயல்திறன், நீண்ட ஆயுட்காலம் மற்றும் அசத்தலான வடிவமைப்பு கொண்ட தினசரி பயன்பாட்டிற்கான ஸ்மாட்போனை வாங்குவது எளிதானது அல்ல.

இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றான OPPO, சமீபத்தில் புதிய OPPO K12x 5G ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. சூப்பர் டஃப் உறுதி, பேட்டரி ஆயுட்காலம், நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் பிரீமியம் தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவற்றின் கலவையாக உருவாகியுள்ள OPPO K12x 5G மொபைல் ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவான பட்ஜெட்டுக்குள் கிடைக்கிறது. இது இந்த மெல்லிய ஸ்மார்ட்போன், ஆர்மர் பாடியுடன் 360° உறுதியான டாமேஜ் ப்ரூஃப் தரச் சான்றிதழ் பெற்றுள்ளது. 5,100mAh பேட்டரி நான்கு வருடம் உழைக்கும் உத்தரவாதம் கொண்டது. இத்துடன் ஸ்பிளாஷ் டார்ச் (Splash Touch), (ஏஐ லிங்க்பூஸ்ட்) AI LinkBoost மற்றும் 120Hz அல்ட்ரா-பிரைட் டிஸ்ப்ளே எனக் கவர்ச்சிகரமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் விலையும் ரூ.15,000 க்கும் குறைவு.

இந்த மொபைலுக்கு அப்கிரேட் செய்துகொள்ளத் தூண்டும் சில முக்கிய அம்சங்கள் என்ன? என்று இப்போது பார்க்கலாம்.

OPPO K12x 5G Daily-Use Premium smartphones Loaded With AI Features Starting From INR 12999 sgb

மெல்லிய, ஸ்டைலான வடிவமைப்பு:

OPPO K12x 5G மொபைல் OPPO நிறுவனத்தின் தனித்துவமான ஸ்டைலைக் கொண்டிருக்கிறது. 7.68 மிமீ அளவுக்கு மெல்லிய ஸ்மார்ட்போன் இது. இதன் எடையும் வெறும் 186 கிராம் மட்டுமே. இந்த விலைப் பிரிவில் சிறந்த லைட்வெயிட் மொபைலாக உள்ளது. அசத்தலான மேட் ஃபினிஷ் இதன் தோற்றத்தை மேம்படுத்துகிறது. இந்த வடிவமைப்பு சிரமம் இல்லாமல், வசதியாகக் கையில் பிடிக்கும் வசதியை உறுதி செய்கிறது. காஸ்மிக் ஃப்ளாஷ்லைட்டுடன் ஒரு அழகான வட்ட வடிவ கேமரா அமைப்பு உள்ளது.

இந்த மொபைல் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. மிட்நைட் வயலட் வேரியண்ட் அடர் ஊதா நிற டோன்களுடன் மின்னும் நட்சத்திர ஒளியைப் போல OPPO க்ளோ டிசைனைக் கொண்டது. இது கீறல்கள் விழாத அளவுக்கு பாதுகாப்பை வழங்குகிறது. ப்ரீஸ் ப்ளூ நிற வேரியண்ட் காந்த துகள்கள் போன்ற வடிவமைப்பைக் கொண்டது.

OPPO K12x 5G Daily-Use Premium smartphones Loaded With AI Features Starting From INR 12999 sgb

நீடித்து உழைப்பதற்கான அம்சங்கள்:

OPPO ஸ்மார்ட்போன்களின் நீடித்த ஆயுள் காலம் கொண்டவை. OPPO K12x 5G மொபைலும் அதற்கு விதிவிலக்கல்ல. அந்த வகையில் இது ஒரு ஆல்ரவுண்ட் சாம்பியனாகும், இது உருவாக்க தரம் மற்றும் பேட்டரி இரண்டிலும் வலுவான முடிவுகளை வழங்குகிறது. 7.68 மிமீ தடிமன் கொண்ட மெல்லிய ஸ்மார்ட்போன் கீழே விழுந்தாலும் சேதம் அடையாமல் இருக்க 360° டேமேஜ்-ப்ரூஃப் ஆர்மர் பாடி பாதுகாப்பு கொடுக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் OPPO நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட உயர் வலிமை கொண்ட அலாய் சட்டத்தால் ஆனது. இருமுறை வலுவூட்டப்பட்ட பாண்டா கிளாஸால் செய்யப்பட்ட டபுள்-டெம்பரிங் கிளாஸ் இருக்கிறது. ஸ்பாஞ்ச் பயோனிக் குஷனிங்கும் உள்ளது. கூடுதலாக, அனைத்து முக்கிய பாகங்களும் அதிர்வுகளைத் தாங்கும் தன்மையுடன் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன.

OPPO நடத்திய சோதனைகளில், கீழே விழுந்தாலும், அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டாலும் சேதம் அடையாத உறுதியை கொண்டதாக இருக்கிறது. இதன் மூலம் அன்றாட பயன்பாட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போனாக தகுதி பெறுகிறது. இந்த மொபைலுக்கு மிலிட்டரி ஸ்டாண்டர்ட் MIL-STD-810H சான்றும் அளிக்கப்பட்டுள்ளது.  OPPO K12x 5G உடன் கிடைக்கும் பிரத்யேகமான ஆன்டி-ட்ராப் ஷீல்ட் கேஸ் கார்னர் குஷனிங் மற்றும் அதிக அதிர்வுகளை தாங்கும் வலுவைக் கொடுக்கும். OPPO நடத்திய ரோலிங் டிரம் சோதனைகளில், இந்த பிரத்யேகயான கேஸ் 200% கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.

முதன்முறையாக, OPPO K12x 5G மொபைலில் IP54 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் அம்சம் உள்ளது. மேலும் இந்த மொபைலில் Splash Touch அம்சமும் அறிமுகமாகியுள்ளது.

இந்த விலையில் இத்தகைய மேம்பட்ட அம்சங்கள் இருப்பது போனஸ் தான். மேம்பட்ட டச் சிப் அல்காரிதம் ஈரமான கைகளைக் கொண்டும் மொபைலை பயன்படுத்துவதை எளிமையாக்குகிறது.

OPPO K12x 5G Daily-Use Premium smartphones Loaded With AI Features Starting From INR 12999 sgb

அதிவேக சார்ஜிங், நீடித்து உழைக்கும் பேட்டரி:

OPPO K12x 5G இல் உள்ள பேட்டரி நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும் நீடித்த ஆயுட்காலம் கொண்ட 5,100mAh பேட்டரி ஆகும். நான்கு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் இந்த பேட்டரியில் 45W SUPERVOOCTM ஃபிளாஷ் சார்ஜ் அம்சமும் உள்ளது. 20% சார்ஜ் செய்ய 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். 100% சார்ஜ் செய்ய 74 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்து 335 மணிநேர வாய்ஸ் கால் பேசலாம். வீடியோ ரசிகர்கள் 15.77 மணிநேரம் வீடியோவை பார்த்து மகிழலாம். இதேபோல ஆடியோ பிளேபேக் 9.31 மணிநேரம் வரை நீடிக்கும். சுமார் 1,600 முறை சார்ஜ் செய்த பிறகும் இந்த பேட்டரி 80% திறனை தக்கவைக்கிறது.

பேட்டரி மேம்பட்ட பாசிடிவ் எலெக்ட்ரோடில் டவுள் லேயர் பூச்சும், நெகட்டிவ் எலெக்ட்ரோடில் ட்ரிபிள் லேயர் பூச்சும் உள்ளன. இவஐ பேட்டரி ஆயுளை அதிகரிக்கின்றன. அதே நேரத்தில் புதிய எலக்ட்ரோலைட் மற்றும் புதிய பேட்டரி டயாபிராம் சார்ஜிங்கின் நிலைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துகின்றன. OPPO வின் ஸ்மார்ட் சார்ஜிங் (Smart Charging) தொழில்நுட்பம் இந்த ஸ்மார்ட்ஃபோனை சார்ஜ் செய்யும்போது மொபைலின் வெப்பநிலை அடிப்படையில் சார்ஜிங் செயல்முறையை மாற்றியமைக்கிறது. இது மொபைலில் வேகம் மற்றும் நீண்ட ஆயுளை மேம்படுத்துகிறது.

OPPO K12x 5G Daily-Use Premium smartphones Loaded With AI Features Starting From INR 12999 sgb

எந்த இடத்திலும் தெளிவான காட்சிகள்:

OPPO K12x 5G விஷுவல் கிளாரிட்டியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.67 இன்ச் அல்ட்ரா பிரைட் டிஸ்ப்ளே உள்ளது. ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ 89.9%. வழக்கமான பிரகாசம் 850 நிட்ஸ். அதிகபட்ச பிரகாசம் 1000 நிட்ஸ். இதில் உள்ள அல்ட்ரா வால்யூம் அம்சம் மூலம் வால்யூம் பட்டனை அழுத்தி ஒலி அளவை 300% அதிகரிக்கலாம்.

OPPO K12x 5G Daily-Use Premium smartphones Loaded With AI Features Starting From INR 12999 sgb

குறைந்த மின் நுகர்வுடன் சிறந்த செயல்திறன்:

OPPO K12x 5G ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 6300 5G பிராசஸருடன் வருகிறது. இது குறைந்த மின் நுகர்வுடன் தடையற்ற செயல்திறனை வழங்குகிறது. 6GB RAM + 128GB மெமரி அல்லது 8GB RAM + 256GB மெமரி கொண்ட வேரியண்ட்களில் கிடைக்கிறது. OPPO இன் RAM விரிவாக்க அம்சம் 8GB வரை இலவச ரோம் மெமரியை தற்காலிக ரேமாக மாற்றும். இதில் 1TB வரை மெமரி கார்டு போட்டுக்கொள்ளும் வசதியும் உள்ளது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ColorOS 14 இல் இயங்குகிறது.

OPPO K12x 5G மொபைலில் உள்ள கம்ப்யூட்டிங் வளங்கள் மற்றும் மெமரி ஸ்மார்ட்போனின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான தீர்வையும் கொண்டுள்ளது.

OPPO K12x 5G Daily-Use Premium smartphones Loaded With AI Features Starting From INR 12999 sgb

முன்னணியில் AI LinkBoost அம்சம்:

OPPO K12x 5G மொபைல் AI LinkBoost தொழில்நுட்பத்துடன் தடையில்லா தொடர்புக்கு உறுதியளிக்கிறது. AI LinkBoost என்பது நெட்வொர்க் தரவு பரிமாற்ற இயந்திரமாகும், இது மோசமான சிக்னல், நெரிசலான நெட்வொர்க்குகள் அல்லது பயணத்தின்போது கூட டவர் கிடைப்பதை உறுதி செய்கிறது. ஷாப்பிங் மால்கள் போன்ற நெரிசலான இடங்களில் OPPO K12x 5G மொபைலின் Wi-Fi மற்றும் மொபைல் டேட்டா வேகத்தை 20% வரை அதிகரிக்க உதவுகிறது. DSDA எனப்படும் ‘டூயல் கார்டு டூயல்-ஸ்டாண்ட்பை மூலம், இரண்டு சிம் கார்டுகளிலும் ஒரே நேரத்தில் போன் கால்களை செய்யலாம், இணையத்தையும் பயன்படுத்தலாம்.

பலவீனமான நெட்வொர்க் உள்ள இடங்களில் விரைவான செயல்பாட்டுக்கு AI LinkBoost உதவுகிறது. அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரப் பகுதிகளில் துல்லியமான லொகேஷன் அப்டேட்களைப் பெற உதவுகிறது. இந்த மொபைல் OPPO ஆய்வகத்தில் 50 மாத ஃப்ளூன்சி சோதனையை கடந்து வந்துள்ளது. நீண்ட கால பயன்பாட்டிற்கு பிறகும் சீரான செயல்திறனுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

OPPO K12x 5G Daily-Use Premium smartphones Loaded With AI Features Starting From INR 12999 sgb

AI சக்தியுடன் புகைப்படங்கள்:

இந்த போனில் 32MP AI டூயல் கேமரா, 2MP போர்ட்ரெய்ட் கேமரா மற்றும் 8MP செல்ஃபி கேமரா ஆகியவை AI இன் ஆற்றலைப் பயன்படுத்தி சிறந்த போர்ட்ரெய்ட் படங்களைக் எடுக்க உதவுகின்றன. 32MP அல்ட்ரா-க்ளியர் மெயின் கேமரா பிரகாசமான சூரிய ஒளியில்கூட தெளிவான புகைப்படங்களை எடுக்கிறது. இது OPPO நிறுவனத்தின் HDR 3.0 அல்காரிதம் மூலம் செயல்படுகிறது. இது எந்த இடத்திலும் எப்போது வேண்டுமானாலும் அழகான படங்களைக் கிளிக் செய்ய  உதவுகிறது.

போர்ட்ரெய்ட் மோட் மெயின் கேமரா மற்றும் 2எம்பி போர்ட்ரெய்ட் கேமராவின் ஆற்றலை ஒருங்கிணைத்து, படத்தின் தரத்தைக் அதிகரிக்கிறது. எந்தப் பின்னணியிலும் உங்கள் படத்தை ஹைலைட் செய்கிறது.

AI போர்ட்ரெய்ட் ரீடச்சிங் அம்சம் AI உதவியுடன் புகைப்படங்களை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் செல்ஃபிகள், போர்ட்ரெய்ட்கள் மற்றும் வீடியோக்களை துல்லியமாக சரிசெய்ய முடியும். டூயல்-வியூ வீடியோ, இந்தச் மொபைலின் தனித்துவமான அம்சமாகும். இதன் மூலம் ஒரே நேரத்தில் முன் மற்றும் பின்புற கேமராக்களில் இருந்து வீடியோக்களை பதிவு செய்யலாம்.

OPPO K12x 5G Daily-Use Premium smartphones Loaded With AI Features Starting From INR 12999 sgb

தீர்ப்பு:

OPPO K12x 5G பல சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இதன் நேர்த்தியான, மெலிதான மற்றும் அழகியல் ரீதியான, 360° டேமேஜ் ப்ரூஃப் வடிவமைப்பு எளிதில் கவனத்தை ஈர்க்கிறது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் உத்தரவாதமான பேட்டரியுடன் நீடித்து உழைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது 15,000 ரூபாய்க்குள் கிடைக்கும் மிகவும் உறுதியாக ஸ்மார்ட்போன் ஆகும். ஸ்பிளாஸ் டச் மற்றும் IP54 வாட்டர் அண்ட் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ், AI லிங்க்பூஸ்ட் மற்றும் டூயல் வியூ வீடியோ போன்ற பிரீமியம் அம்சங்களையும் இணைத்திருக்கும் OPPO பாராட்டுக்குரியது. குறைந்த பட்ஜெட்டில் அதிக ஆற்றல் கொண்ட மொபைலைத் தேடுபவர்களுக்கு OPPO K12x 5G சரியான தேர்வாக இருக்கும்.

OPPO K12x 5G Daily-Use Premium smartphones Loaded With AI Features Starting From INR 12999 sgb

OPPO K12x 5G மொபைலின் விலை ரூ.12,999 (6GB+128GB) மற்றும் ரூ.15,999 (8GB+256GB) விலையில் கிடைக்கும். பிளிப்கார்ட் (Flipkart), ஓப்போ இ-ஸ்டோர் மற்றும் மொபைல் ஷோரும்களில் இந்த மொபைல் விற்பனைக்கு உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios