மாஸ் காட்டிட்டாங்க.. 200MP கேமரா.. எல்லாமே AI.. ஓப்போ ரெனோ 15 அம்சங்கள் அள்ளுது!
ஓப்போ நிறுவனம் தனது புதிய ரெனோ 15 சீரிஸ் 5G ஸ்மார்ட்போன்களை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இந்த சீரிஸில் ரெனோ 15, ரெனோ 15 Pro, மற்றும் முதல் முறையாக ரெனோ 15 Pro Mini என மூன்று மாடல்கள் இடம்பெறுகின்றன.

Oppo Reno 15 சீரிஸ்
ஸ்மார்ட்போன் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஓப்போ நிறுவனம், தனது புதிய ரெனோ 15 Series 5G ஸ்மார்ட்போன்களை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. 2025-ல் வெளியான ரெனோ 14 சீரிஸின் அடுத்த கட்டமாக இந்த புதிய மாடல்கள் வருகின்றன. இந்த முறையில் ஓப்போ ரெனோ 15, ரெனோ 15 Pro, மற்றும் முதல் முறையாக ரெனோ 15 Pro Mini என மூன்று மாடல்கள் அறிமுகமாக உள்ளன. டிசைன் மற்றும் AI ஆதாரமான கேமரா அம்சங்களை மையமாக வைத்து இந்த சீரியஸ் உருவாக்கப்பட்டுள்ளதாக ஓப்போ தெரிவித்துள்ளது.
ஓப்போ ரெனோ 15 விலை
ஓப்போ ரெனோ 15 Series 5G இன்று மதியம் 12 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. இந்த வெளியீட்டு நிகழ்ச்சி YouTube வழியாக லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. வெளியீட்டிற்குப் பிறகு, இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் Flipkart, Amazon மற்றும் ஓப்போ India ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு வரும். விலை விபரங்களைப் பார்க்கும்போது, ரெனோ 15 ரூ.50,000-க்கு குறைவாகவும், ரெனோ 15 Pro Mini ரூ.40,000-க்கு குறைவாகவும் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓப்போ 5G மொபைல்
இந்த புதிய ரெனோ 15 சீரிஸில் கேமரா வடிவமைப்பில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. iPhone Pro மாடல்களை நினைவூட்டும் வகையில் கேமரா ஐலண்ட் வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. மூன்று மாடல்களிலும் ஈரோஸ்பேஸ்-கிரேடு அலுமினியம் ஃப்ரேம் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. ரெனோ 15 Pro-வில் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, ரெனோ 15 Pro Mini-யில் 6.32 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, மற்றும் ஸ்டாண்டர்ட் ரெனோ 15-ல் 6.59 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படும். டிஸ்ப்ளே பாதுகாப்பிற்காக Corning Gorilla Glass Victus 2 மற்றும் Gorilla Glass 7i போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
200MP கேமரா போன்
ரெனோ 15 Pro மற்றும் Pro Mini மாடல்களில் MediaTek Dimensity 8450 சிப்செட் பயன்படுத்தப்படலாம். ஸ்டாண்டர்ட் ரெனோ 15 மாடலில் Snapdragon 7 Gen 4 சிப்செட் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேமரா அம்சங்களில், ப்ரோ மற்றும் ப்ரோ மினி மாடல்களில் 200MP பிரைமரி கேமரா, 50MP 3.5x டெலிபோட்டோ கேமரா மற்றும் 50MP அல்ட்ரா-வைட் கேமரா வழங்கப்படலாம். ரெனோ 15 மாடலில் 50MP பிரைமரி, 50MP டெலிபோட்டோ மற்றும் 8MP அல்ட்ரா-வைட் கேமரா இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில், ரெனோ 15 Series 5G டிசைன், கேமரா மற்றும் செயல்திறன் ஆகிய மூன்றிலும் கவனம் செலுத்திய ஒரு முழுமையான அப்டேடாக அமைய உள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

