Paytm மூலம் இனி இப்படி கூட செய்யலாம்.. வந்துவிட்டது புதிய அம்சம்!
ஏசி மற்றும் ஏசி அல்லாத WBTCL பேருந்துகளில் ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி Paytm செயலியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நீங்கள் அடிக்கடி பேருந்தில் பயணம் செய்தால், இனி உங்கள் பையில் இருந்து பணத்தை எடுக்க வேண்டியதில்லை, ஏனெனில் இனி டிக்கெட்டுக்கு பணம் செலுத்த Paytm பயன்படுத்தலாம். இந்தியாவின் முன்னணி பேமெண்ட் தளமான Paytm பிராண்டும், மேற்கு வங்க போக்குவரத்து கழகமும்(WBTCL) கைகோர்த்துள்ளன. ஏசி மற்றும் ஏசி அல்லாத WBTCL பேருந்துகளில் (40 வழித்தடங்களில்) Paytm மூலம் ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
இந்த செயலி மூலம், கொல்கத்தா, திகா, பராசத், ஹல்டியா, புருலியா, துர்காபூர், ஹப்ரா, அசன்சோல், போல்பூர், மாயாபூர் மற்றும் மால்டா உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கான WBTCL பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். Paytm பயனர்கள் தங்கள் செயலியைப் பயன்படுத்தி எளிமையாக பணம் செலுத்தலாம்.
எனவே, இனி கொல்கத்தா, திகா, பராசத் மற்றும் பல நகரங்களில் ஏசி மற்றும் ஏசி அல்லாத பேருந்துகளுக்கான முன்பதிவுகளை பயனர்கள் பேடிஎம் மூலமாகவே செய்துகொள்ள முடியும்.
மேலும், WBTCL உள்ளிட்ட 11 அரசுக்கு சொந்தமான போக்குவரத்து நிறுவனங்களுடன் Paytm கூட்டு சேர்ந்துள்ளது. கொல்கத்தாவைத் தவிர, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் பல மாநிலங்களில் இந்தச் சேவை கிடைப்பதாக தெரிகிறது.
உங்கள் பேருந்து டிக்கெட்டை முன்பதிவு செய்ய Paytmஐப் பயன்படுத்தினால், மிகக் குறைந்த விலையில் டிக்கெட் கிடைக்கும் என்பது உறுதி. Paytm UPI, Paytm Wallet, நெட்பேங்கிங், டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் போன்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி உங்கள் டிக்கெட்டுக்கு பணம் செலுத்தலாம். "BESTPRICE" என்ற ப்ரோமோ கோடைப் பயன்படுத்தி உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்தால், ரூ.100 வரை பிளாட் 20 சதவீத கேஷ்பேக்கைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுவிட்டருக்கு போட்டியாக வந்துள்ள Bluesky.. முன்னாள் ஊழியர்களின் பதிலடி!
மேலும் தேவைப்பட்டால் உங்கள் டிக்கெட்டையும் இலவசமாக ரத்து செய்யலாம். இதற்காக கட்டணம் வசூலிக்கப்படுமா என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. அத்துடன் பயணக் காப்பீட்டையும் வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் கவலையின்றி பயணம் செய்யலாம். விரைவில் தமிழகத்திலும் இந்த அம்சம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.