Asianet News TamilAsianet News Tamil

டுவிட்டருக்கு போட்டியாக வந்துள்ள Bluesky.. முன்னாள் ஊழியர்களின் பதிலடி!

முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி ட்விட்டருக்குப் போட்டியாக ப்ளூஸ்கையை அறிமுகப்படுத்தினார். இது  தற்போது ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது 

Former Twitter CEO Jack Dorsey launches Bluesky app available in App Store, check details here
Author
First Published Mar 1, 2023, 10:18 PM IST

கடந்தாண்டு நவம்பர் மாதம் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து ஜாக் டோர்சி விலகினார்.  இருப்பினும், மீண்டும் டுவிட்டரில் இணைவார் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜாக் டோர்சி இப்போது ட்விட்டருக்கு போட்டியான ஒரு தளத்தை தொடங்கியுள்ளார். இதன் பெயர் BlueSky ஆகும். 

ட்விட்டர் நிறுவனத்தின் நீல நிற லோகோ, கலர் டோன் ஆகியவற்றைப் போலவே டோர்சியின் ப்ளூஸ்கி தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளூ ஸ்கை இப்போது பீட்டா பதிப்பில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது. இது தொடர்பாக TechCrunch தளத்தில் சில விவரங்கள் வெளியாகின. அதன்படி,  ப்ளூ ஸ்கை செயலி ஆப் ஸ்டோரில் குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் பீட்டாவாகக் கிடைக்கிறது. விரைவில் பொது பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ப்ளூ ஸ்கை தளமான வழக்கமான டுவிட்டரைப் போலவே, அதே சமயம் இன்னும் எளிமையான தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.  பார்ப்பதற்கு எளிமையான முறையில், எளிமையான ஆப்ஷன்களுடன் வருகிறது. டுவிட்டரில் Whats Happening என்று முகப்பு பக்கத்தில் கேட்பது போல், இதிலும் What’s Up என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது.  

டுவிட்டர் பணியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ப்ளூஸ்கி செயலி பிப்ரவரி 17 அன்று வெளியிடப்பட்டு, சோதனை கட்டத்தில் 2000 க்கும் மேற்பட்ட சாதனங்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன.  ட்விட்டரைப் போலவே, ப்ளூ ஸ்கை பயனர்களும் மற்றவர்களை பிளாக் செய்யலாம், ஷேர் செய்யலாம், பின்தொடரலாம், முடக்கலாம். அதுமட்டுமில்லாமல், இதற்கு மேல் நபர்களைச் சேர்க்கும் விருப்பம் இல்லை என்ற ஆப்ஷனும் உள்ளது. அதைத் தவிர, பயனர்கள் "யாரைப் பின்தொடர வேண்டும்" பரிந்துரைகளைப் பெறுவார்கள். 

முழுக்க முழுக்க டுவிட்டருக்கு போட்டியாக ப்ளூ ஸ்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ஊழியர்களும் முன்னாள் டுவிட்டர் பணியாளர்கள் என்று கூறப்படுகிறது. ஒரே வாரத்தில் 2 ஆயிரம் பதிவிறக்கங்கள் ஆகியுள்ளதால், விரைவில் டுவிட்டருக்கு மாற்றாக வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios