லைஃப் டைம் செட்டில்மென்ட்.. இதை விட சிறந்த மோட்டோரோலா மொபைலை காட்டுங்க பார்க்கலாம்..
மோட்டோரோலா தனது புதிய எட்ஜ் 70 ஸ்மார்ட்போனை Snapdragon 7 Gen 4 சிப்செட் உடன் வெளியிட்டுள்ளது. இந்த போனில் 50MP டூயல் ரியர் கேமரா, 50MP செல்ஃபி கேமரா, 2031 வரை பாதுகாப்பு அப்டேட்கள் போன்ற பிரீமியம் அம்சங்கள் உள்ளன.

மோட்டோரோலா எட்ஜ் 70
மோட்டோரோலா தனது புதிய Edge 70 ஸ்மார்ட்போனை உலகளாவிய சந்தைகளில் வெளியிட்டுள்ளது. இந்த போன், சமீபத்திய Snapdragon 7 Gen 4 சிப் செட் மூலம் இயங்குவதால் மொபைல் எங்கும் மெதுவாக இயங்காது.
மோட்டோரோலா எட்ஜ் 70 விவரங்கள்
இதில் 6.67 இன்ச் pOLED Super HD திரை, 1220x2712 பிக்சல் ரெசல்யூஷன், 120Hz ரிஃப்ரெஷ் ரேட் மற்றும் 4,500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆகிய அம்சங்கள் உள்ளன. இது 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் வருகிறது. Android 16 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனுக்கு, மோட்டோரோலா ஜூன் 2031 வரை பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.
மோட்டோரோலா எட்ஜ் 70 விலை
மோட்டோரோலா எட்ஜ் 70 விலை இங்கிலாந்தில் GBP 700 (சுமார் ரூ.80,000) விலையில் அறிமுகமாகியுள்ளது. இதே போன், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு சந்தைகளில் சுமார் €799 (ரூ.81,000) விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Pantone France Green, Pantone Lily Pad மற்றும் Gadget Grey ஆகிய மூன்று அழகான நிறங்களில் இது கிடைக்கும்.
எட்ஜ் 70 கேமரா அம்சங்கள்
வடிவமைப்பில், இது ஏர்கிராஃப்ட் தரமான அலுமினிய கட்டமைப்புடன், MIL-STD-810H சான்றிதழை பெற்றுள்ளது. மேலும், தூசி மற்றும் நீர் எதிர்ப்புக்காக IP68 + IP69 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா (OIS) மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ராவைட் கேமரா ஆகிய இரண்டு ரியர் கேமராக்கள் உள்ளன.
பிரீமியம் ஸ்மார்ட்போன்
செல்ஃபிகளுக்காகவும் 50 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இணைப்புகளில் 5G, WiFi 6E, Bluetooth, NFC, GPS, A-GPS, Glonass, Galileo, மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும். பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் Face Unlock வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
மோட்டோரோலா எட்ஜ் 70 பேட்டரி
மேலும், மோட்டோரோலாவின் ThinkShield பாதுகாப்பு தொழில்நுட்பம் இதிலும் உள்ளது. இதற்காக 4,800 mAh silicon-carbon battery பொருத்தப்பட்டுள்ளது, இது 68W wired மற்றும் 15W wireless charging வசதியையும் ஆதரிக்கிறது. செயல்திறன், ஸ்டைல் மற்றும் பாதுகாப்பு மூன்றையும் இணைத்த ஒரு “பிரீமியம் அனுபவம்” தரும் போன் எனலாம்.