10 நிமிடத்தில் ஃபுல் சார்ஜ் சார்ஜ்! முதல் நாளே விற்று தீர்ந்த Motorola Edge 40 Pro - எப்படி இருக்கு?
மோட்டோரோலாவின் சமீபத்திய ஸ்மார்ட்போனான மோட்டோ எட்ஜ் 40 ப்ரோ விற்பனைக்கு வந்த முதல் நாளே விற்று தீர்ந்துள்ளது. Motorola Edge 40 Proவின் விலை, சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை காணலாம்.
ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி ரோம், 6.55 இன்ச் டிஸ்ப்ளே, 50 எம்பி கேமரா மற்றும் பலவற்றை கொண்டுள்ளது. மோட்டோரோலாவின் சமீபத்திய ஸ்மார்ட்போனான மோட்டோ எட்ஜ் 40 ப்ரோ (Motorola Edge 40 Pro), இந்தியாவில் முதல் நாள் விற்பனையில் பிளிப்கார்ட்டில் விற்றுத் தீர்ந்துவிட்டது. அதுவும் ₹5000 தள்ளுபடியுடன், இந்த ஃபோன் இப்போது ₹29,999 விலையில் கிடைக்கிறது. இது ₹34,999 இலிருந்து குறைந்து 14% தள்ளுபடியுடன் கிடைக்கிறது.
அப்படி என்ன மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோவில் இருக்கிறது என்பதை பார்க்கலாம். 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ரோம் கொண்ட இந்த மொபைல், 16.64 செமீ (6.55 இன்ச்) முழு எச்டி+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது. பிரமிக்க வைக்கும் கேமரா அமைப்பு உங்களை நிச்சயம் அசர வைக்கும் என்றே சொல்லலாம். 50 எம்பி பிரதான கேமரா, 13 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா, 32 எம்.பி செல்ஃபி கேமராவுடன் வரும் இது 4400 mAh பேட்டரி வசதியையும் கொண்டுள்ளது.
மேலும் 68 W டர்போபவர் சார்ஜர் மூலம், நீண்ட நேரம் சார்ஜ் செய்யும் தொந்தரவை நீக்கி, பத்து நிமிடங்களில் முழு சார்ஜ் செய்து மகிழலாம். டைமென்சிட்டி 8020 பிரசாஸர், 14 5G பேண்டுகள் மற்றும் 6 WiFi நெட்வொர்க்குகள் மூலம், நீங்கள் எங்கு சென்றாலும் தடையின்றி இணைப்பை அனுபவிக்க முடியும்.
மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ 30 நிமிடம் வரை நீருக்கடியில் டங்க் எதிர்ப்பைக் கொண்ட மெலிதான IP68 மதிப்பீட்டை வழங்குகிறது. மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் தனியுரிமை திங்க்ஷீல்ட் மற்றும் மோட்டோ செக்யூர் பாதுகாப்பு அம்சங்களுடன் உத்தரவாதத்துடன் வருகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் சமீபத்திய ஆண்ட்ராய்டு 13 உடன் வருகிறது.
இதையும் படிங்க..44 நிமிடத்தில் சார்ஜ்.! 5 வருடத்துக்கு அப்டேட்.! ஐபோனுக்கே டஃப் கொடுக்கும் Oppo F23 5G எப்படி இருக்கு?