இணையத்தில் கசிந்த 183 மில்லியன் GMail பாஸ்வேர்டுகள்.. உடனே பாஸ்வேர்டு மாத்துங்க..
GMail Data Leake: 183 மில்லியன் மின்னஞ்சல் பாஸ்வேர்டுகள் இணையத்தில் கசிந்துள்ளதாக வெளியான செய்தி, அதன் பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தங்கள் கணக்குகளைப் பாதுகாக்க புதிய பாஸ்வேர்டுகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்.

183 மில்லியன் ஈமெயில் கணக்குகளுக்கு அதிர்ச்சி
ஆன்லைனில் 183 மில்லியன் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பாஸ்வேர்டுகள் இணையத்தில் கசிந்துள்ளன. இதில் பெரும்பாலானவை ஜிமெயில் கணக்குகள். இது மால்வேர் மூலம் பயனர்களின் கணினிகளில் இருந்து திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் சர்வர்களுடன் தொடர்பு உள்ளதா?
சைபர் பாதுகாப்பு நிபுணர் டிராய் ஹன்ட் இதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த டேட்டா பல்வேறு மால்வேர் தொற்றுகளிலிருந்து சேகரிக்கப்பட்டு, அக்டோபர் 21 அன்று HIBP-ல் சேர்க்கப்பட்டது.
டார்க் நெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டதா?
கூகுள் அமைப்புகள் பாதுகாப்பாக இருந்தாலும், இந்த டேட்டா கசிவு கவலை அளிக்கிறது. திருடப்பட்ட தரவுகள் டார்க் நெட்டில் விற்கப்படலாம். இது பல தளங்களில் ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்தானது.
உங்கள் ஜிமெயில் கணக்கு விவரங்கள் கசிந்ததா? இப்படி சரிபார்க்கவும்
Have I Been Pwned இணையதளத்தில் உங்கள் மின்னஞ்சல் கசிவில் உள்ளதா என சரிபார்க்கவும். அப்படி இருந்தால், உடனடியாக பாஸ்வேர்டை மாற்றி, 2FA-வை இயக்கவும். சரிபார்க்காமலேயே பாஸ்வேர்டை மாற்றுவது பாதுகாப்பானது.
கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக உணர்ந்தால் என்ன செய்வது?
கூகுளின் பாதுகாப்பு சரிபார்ப்பு கருவியைப் பயன்படுத்தி சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்டறியவும். தெரியாத சாதனங்கள் மற்றும் மூன்றாம் தரப்பு ஆப்களை அகற்றவும். SMS-ஐ விட பாஸ்கீ பாதுகாப்பானது.