MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • ரூ.40,000க்குள் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்! அப்பப்பா! இத்தனை சிறப்பம்சங்களா?

ரூ.40,000க்குள் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்! அப்பப்பா! இத்தனை சிறப்பம்சங்களா?

இந்தியாவில் ரூ.40,000க்குள் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள் என்னென்ன? அவற்றின் சிறப்புகள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். 

3 Min read
Rayar r
Published : Jan 20 2025, 09:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Top 5 Smartphones

Top 5 Smartphones

 டாப் 5 ஸ்மார்ட்போன்கள்

இப்போது ரூ.40,000க்குள் வாங்கக்கூடிய ஏராளமான ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதால் சிறந்த மாடல்களை தேர்வு செய்வது சவாலாக இருக்கும். அந்த வகையில் OnePlus, Realme, iQOO, Vivo மற்றும் Motorola போன்ற பல பிரபலமான பிராண்டுகளை டாப் 5 ஸ்மார்ட்போன்களாக உள்ளன. இந்த போன்களின் சிறப்பமசங்கள் என்னென்ன? விலை என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

26
OnePlus 13R

OnePlus 13R

ஒன்பிளஸ் 13 ஆர் (OnePlus 13R) 

ஒன்பிளஸ் 13 ஆர் மாடல் ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே 120Hz ProXDR AMOLED திரை LTPO 4.1 தொழில்நுட்பம் மற்றும் 4,500 நிட்ஸ் பிரைட்னஸ் பிரகாசத்துடன் உள்ளது. Corning Gorilla Glass 7i, OnePlusஇன் புதிய "செயல்திறன் முதன்மை"யின் மொபைலின் முன்புறம் மற்றும் பின்புறத்தைப் பாதுகாக்கிறது. ஒன்பிளஸ் 12R-ல் காணப்படும் வளைந்த டிஸ்பிளே இருந்த நிலையில், இதில் தட்டையான டிஸ்பிளே உள்ளது. 

இந்த போனின் கேமராக்களை பொறுத்தவரை 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 50MP Sony LYT-700 முக்கிய கேமரா மற்றும் 50MP 2x Samsung JN5 டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை உள்ளன. முன்பக்கத்தில் 16MP Sony IMX480 செல்ஃபி கேமரா பெற்றுள்ளது. முன் சென்சார் 1080p-ஐ வினாடிக்கு 30 பிரேம்களில் மட்டுமே பதிவு செய்ய முடியும், ஆனால் பின்புற கேமராக்கள் அதிகபட்சமாக 4K 60 பிரேம்கள் வரை படங்களைப் பதிவு செய்ய முடியும்.

 

36
IQOO Neo 9 Pro

IQOO Neo 9 Pro

iQOO நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro)

iQOO நியோ 9 ப்ரோ மாடலில் 120 Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 3,000 nits அதிகபட்ச பிரகாசம் கொண்ட 6.78 இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இந்த போன்களில் உள்ள சில கேம்கள் 144 Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளன. 

Samsung Galaxy S24 Ultra, OnePlus 11 மற்றும் புதிதாக வெளியிடப்பட்ட OnePlus 12R போன்ற மாடல்களில் கொடுக்கப்பட்டுள்ள Qualcomm Snapdragon 8+ சிப்செட்டே iQOO நியோ 9 ப்ரோ மாடலிலும் கொடுக்கப்பட்டுள்ளதால் போனை இயக்குவதற்கு எளிதாக இருக்கும். இந்த போனில் 256GB UFS 4.0 ஸ்டோரேஜ் மற்றும் 12GB வரை ரேம் பெற்றுள்ளது.

சிம் சிக்னல் இழந்தாலும் இனி தடையின்றி கால் செய்யலாம்; சூப்பர் வசதி அறிமுகம்!

 

46
Realme GT 6

Realme GT 6

ரியல்மி ஜிடி 6 (Realme GT 6)

ரியல்மி ஜிடி 6 மாடலில் 6.78 இன்ச் LTPO AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இது Corning Gorilla Glass Victus 2 பாதுகாப்பு மற்றும் 6,000 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது. மேலும் சக்திவாய்ந்த Qualcomm Snapdragon 8s Gen சிப்செட் கொடுக்கப்பட்டதால் போனை இயக்குவதற்கு எளிதாக இருக்கும். இந்த போன் 512GB 4.0 ஸ்டோரேஜ் மற்றும் 12GB LPDDR5X  ரேம் கொண்டுள்ளது. 

50MP Sony LYT 808 கேமரா, 50MP Sony JN5 டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8MP Sony IMX355 அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் ஆகியவை டிரிபிள் கேமரா அம்சங்களை கொண்டுள்ளது. 4K வீடியோ பதிவு செய்யும் 32MP Sony IMX615 செல்பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. 


 

56
Vivo T3 Ultra

Vivo T3 Ultra

விவோ டி3 அல்ட்ரா (Vivo T3 Ultra)

இந்த ஸ்மார்ட்போன் 1.5K (2800 x 1260) தெளிவுத்திறன் கொண்ட 6.78 இன்ச் 3D வளைந்த AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 120 Hz புதுப்பிப்பு வீதத்தை வழங்குகிறது. மேலும் Android 14 ஐ அடிப்படையாகக் கொண்ட Funtouch OS 14 இயங்குதளம் மூலம் இயங்குகிறது. 

இது தவிர MediaTek Dimensity 9200+ CPU சிப்செட், 128 ஜிபி வரை ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் வசதிகள் உள்ளன.  இந்த போனில் 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜ் செய்யக்கூடிய 5500mAh பேட்டரி உள்ளது.

66
(Motorola Edge 50 Pro

(Motorola Edge 50 Pro

மோட்டோரோலோ எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro)

மோட்டோரோலோ எட்ஜ் 50 ப்ரோ மாடல் Snapdragon 7 Gen 3 சிப்செட், 2.63 GHz சிங்கிள் கோர், 2.4 GHz ட்ரை-கோர் மற்றும் 1.8 GHz குவாட்-கோர் அமைப்புடன் கூடிய ஆக்டா-கோர் CPU லேஅவுட்டைக் கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை 50 MP + 13 MP + 10 MP டிரிபிள் கேமரா வரிசை புகைப்பட ஆர்வலர்களை ஈர்க்கும், அதே சமயம் 50 MP முன் கேமரா சிறந்த செல்ஃபி எடுக்க உதவுகிறது. மேலும் Turbo Power சார்ஜிங் வசதியை கொண்ட 4500 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 

நடுத்த மக்களும் இனி ஐபோன் வாங்கலாம்; போட்டி போட்டு விலையை குறைத்த அமேசான், ப்ளிப்கார்ட்!

 

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved