- Home
- டெக்னாலஜி
- ரெட்மி நோட் 14 ப்ரோ+ வாங்கினால்.. ரூ.5,000 மதிப்புள்ள ரெட்மி பட்ஸ் இலவசம்.. சூப்பர் டீல்!
ரெட்மி நோட் 14 ப்ரோ+ வாங்கினால்.. ரூ.5,000 மதிப்புள்ள ரெட்மி பட்ஸ் இலவசம்.. சூப்பர் டீல்!
ரூ.30,000 பட்ஜெட்டில் ரெட்மி நோட் 14 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ஒரு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனை வாங்குவது எப்படி, இலவசமாக ரெட்மி பட்ஸை வாங்குவது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.

ரெட்மி நோட் 14 ப்ரோ+ ஆஃபர்
ரூ.30,000க்குள் ஒரு நல்ல 5G ஸ்மார்ட்போன் தேடுபவர்கள் கவனிக்க வேண்டிய சலுகையாக ரெட்மி நோட் 14 ப்ரோ+ 5ஜி உள்ளது. இந்த மொபைலை வாங்குபவர்களுக்கு ரூ.5,000 மதிப்புள்ள ரெட்மி பட்ஸ் 5 (Redmi Buds 5) முழுமையாக இலவசமாக வழங்கப்படுகின்றன. இது குறுகிய கால சலுகை என்று கருதப்படுவதால், ஆர்வமுள்ளவர்கள் தாமதிக்காமல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம்.
ரெட்மி நோட் 14 ப்ரோ+ விலை
இந்த ஆஃபர் Mi.com தளத்தில் மட்டுமே கிடைக்கிறது. 8/128 ஜிபி, 8/256 ஜிபி மற்றும் 12/512 ஜிபி வகைகள் முறையே ரூ.26,999, ரூ.28,999 மற்றும் ரூ.31,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல், Motorola Edge 60 Pro, vivo T4 Pro 5G, realme P4 Pro 5G, OnePlus Nord CE5 5G போன்ற ஸ்மார்ட்போன்களுடன் நேரடி போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொபைல் சலுகை
ரெட்மி நோட் 14 ப்ரோ+ 5G மொபைல் 6.67-இஞ்ச் 3D கர்வ்டு AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் ஆகிய வசதிகளுடன் வருகிறது. Snapdragon 7s Gen 3 சிப்செட், 6200mAh பேட்டரி மற்றும் 90W வேக சார்ஜிங் ஆதரவு இதன் முக்கிய அம்சங்கள் ஆகும். பின்புறத்தில் 50MP முதன்மை கேமரா, 50MP டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளன.
ரெட்மி பட்ஸ் 5
ரெட்மி பட்ஸ் 5 ஆடியோ தரத்தில் இலவசமாக வழங்கப்படும். 12.4mm ட்ரைவர்ஸ், AI குரல் மேம்பாடு, டூயல் கனெக்டிவிட்டி, மைக்ரோஃபோன்கள், ANC போன்ற அம்சங்கள் உள்ளன. 480mAh கேஸ் பேட்டரி மற்றும் ஒவ்வொரு இயர்பட்ஸ்-க்கும் 54mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. முழு சார்ஜிற்கு சுமார் 1 மணி 45 நிமிடம் எடுக்கிறது. மேலும் 10 நிமிட ஃபாஸ்ட் சார்ஜில் 4 மணி நேரம் வரை செயல்படும். இதனால் இந்த ஆஃபர் விலை ரேஞ்சில் சிறந்த டீலாகும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

