- Home
- டெக்னாலஜி
- 22 மணி நேர பேட்டரி பேக்கப்: 16GB RAM, 512GB SSD உடன் பட்ஜெட் விலையில் லெனோவோ புதிய லேப்டாப் அறிமுகம்!
22 மணி நேர பேட்டரி பேக்கப்: 16GB RAM, 512GB SSD உடன் பட்ஜெட் விலையில் லெனோவோ புதிய லேப்டாப் அறிமுகம்!
20 மணி நேரத்திற்கும் மேலான பேட்டரி பேக்கப், 400-நிட்ஸ் 15.3-இன்ச் டிஸ்பிளே மற்றும் Snapdragon C ப்ராசஸருடன் Lenovo V15 G7 Q7X பட்ஜெட் லேப்டாப் வெளியாகியுள்ளது. விலை & அம்சங்களை பற்றி பார்ப்போம்.

பட்ஜெட் விலையில் லெனோவோவின் புதிய லேப்டாப்
பிரபல தொழில்நுட்ப நிறுவனமான லெனோவோ (Lenovo), 20 மணி நேரத்திற்கும் அதிகமான பேட்டரி ஆயுள் மற்றும் 400-நிட்ஸ் (400-nit) பிரகாசம் கொண்ட 15.3-இன்ச் டிஸ்பிளேவுடன் தனது புதிய பட்ஜெட் லேப்டாப்பான Lenovo V15 G7 Q7X மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் கசிந்த தகவல்களில் இடம்பெற்றிருந்த இந்த லேப்டாப், குவால்காமின் Snapdragon C இயங்குதளத்தில் செயல்படும் ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட லேப்டாப்களில் ஒன்றாகும்.
டிசைன் & சந்தை விற்பனை விவரம்
2 மாதங்களுக்கு முன் லெனோவோவின் சப்போர்ட் ஆவணங்கள் மற்றும் PSREF இணையதளத்தில் இந்த லேப்டாப் குறித்த விவரங்கள் வெளியாகியிருந்தன. இதே Qualcomm Snapdragon C C11-0100 சிப்செட்டுடன் கூடிய IdeaPad Slim 3 14Q7X11 மற்றும் IdeaPad Slim 3 15Q7X11 ஆகிய மாடல்களை லெனோவோ பல நாடுகளில் விற்பனை செய்து வருகிறது.
ஆனால், புதிதாக வெளியாகியுள்ள Lenovo V15 G7 Q7X மாடல் தற்போது ஜப்பானில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. ஐரோப்பா, தென் கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளில் 'விரைவில் வருகிறது' (Coming Soon) எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் வெளியிடப்படும் என முன்பு PSREF தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அந்நாடுகளில் இன்னும் விற்பனைக்குப் பட்டியலிடப்படவில்லை. இந்த லேப்டாப் Onyx Grey என்ற ஒரே நிறத்தில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. பிளாஸ்டிக் மேல் மற்றும் கீழ் பேனல்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இதன் எடை 1.59 கிலோ ஆகும்.
சிறப்பம்சங்கள் (Specifications)
அனைத்து வேரியண்ட்களிலும் ஒரே மாதிரியான ஹார்டுவேர்ஸ் மற்றும் திரை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 15.3-இன்ச் 1200p IPS டிஸ்பிளே, 400-நிட்ஸ் பிரகாசம் (Brightness), 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 45% NTSC கலர் கவரேஜ் கொண்டது. ப்ராசஸர் Qualcomm Snapdragon C C11-0100 ARM சிப்செட், அதிவேக இணையத்திற்காக Wi-Fi 6E மற்றும் சமீபத்திய Bluetooth 6.0 ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. லேப்டாப்பின் மிக முக்கியப் பலமே இதன் பேட்டரி திறன்தான். இதில் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 50Wh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 150-நிட்ஸ் பிரகாசத்தில் 1080p வீடியோக்களை இயக்கும்போது 22 மணி நேரம் வரை பேட்டரி நிற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், JEITA-BAT 3.0 வீடியோ பிளேபேக் சோதனையில் (200-நிட்ஸ் பிரகாசத்தில்) 20 மணி நேரத்திற்கும் மேலான பேட்டரி ஆயுளை இது வழங்கியுள்ளது.
விலை விவரம்
ஜப்பானில் வெளியாகியுள்ள இன்டெல் (Intel) ப்ராசஸர் கொண்ட 'V15 G7 IWC' மாடலை விட Snapdragon மாடல் சற்று விலை அதிகமாகும். ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான IdeaPad Slim 5x ($899) போன்ற பிற Snapdragon லேப்டாப்களை விட இதன் விலை குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 16GB RAM, 512GB SSD மற்றும் Windows 11 Home கொண்ட அடிப்படை மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ.71,000 ஆகும். Windows 11 Pro மற்றும் Office Home & Business 2024 லைசென்ஸ் கொண்ட டாப் மாடலின் விலை சுமார் ரூ.1.09 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.













