MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • JioHome Offer: ஜியோஹோம் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை! அமேசான் பிரைம் லைட் ஒரு வருடம் இலவசம்

JioHome Offer: ஜியோஹோம் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை! அமேசான் பிரைம் லைட் ஒரு வருடம் இலவசம்

JioHome Offer: ஜியோ நிறுவனம் அடிக்கடி சலுகைகளை அறிவித்து வரும் நிலையில், தனது 10வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜியோஹோம் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Sep 19 2026, 08:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஜியோ அமேசான் பிரைம் சலுகை
Image Credit : Asianet News

ஜியோ அமேசான் பிரைம் சலுகை

ஜியோ தனது 10வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜியோஹோம் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள 3-இல்-1 ஜியோஹோம் திட்டங்களை பயன்படுத்துபவர்களுக்கு, அமேசான் பிரைம் லைட் ஒரு வருடம் கூடுதல் கட்டணம் இல்லாமல் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தொலைக்காட்சி, இணைய வசதி மற்றும் பொழுதுபோக்கு செயலிகள் ஒரே திட்டத்தில் கிடைக்கின்றன. 30 எம்.பி.எஸ். மற்றும் 100 எம்.பி.எஸ். வேகத்திலான தகுதியுள்ள திட்டங்களைப் பயன்படுத்தும் புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்கள் இந்த ஒரு வருட சலுகையைப் பெற முடியும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
Image Credit : stockPhoto

என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

இந்த சலுகையின் மூலம் அமேசான் பிரைம் லைட் உறுப்பினர் வசதி கிடைக்கும். இதன் மூலம் திரைப்படங்கள், தொடர்கள் உள்ளிட்ட காணொளி சேவைகளை பயன்படுத்தலாம். மேலும், அமேசானில் சில பொருட்களை வாங்கும்போது விரைவான மற்றும் இலவச பொருள் விநியோகம் போன்ற உறுப்பினர் பலன்களும் கிடைக்கும். ஆனால் இது முழுமையான அமேசான் பிரைம் உறுப்பினர் திட்டம் அல்ல. பிரைம் லைட் திட்டத்திற்கு பொருந்தும் விதிமுறைகளின்படி மட்டுமே இந்த வசதிகள் வழங்கப்படும்.

Hero VIDA V2 Pro: 165 கி.மீ பயணம், கழற்றி சார்ஜ் செய்யலாம்! விடா வி2 ப்ரோ ஸ்கூட்டரின் விலை இவ்வவளவு தானா

34
எப்படி பெறுவது?
Image Credit : Asianet News

எப்படி பெறுவது?

தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் தங்களுடைய மை ஜியோ செயலியை திறந்து முகப்பு பக்கத்தில் இந்த சலுகைக்கான அறிவிப்பு வந்துள்ளதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். அந்த அறிவிப்பைத் தேர்வு செய்து செயல்படுத்தினால், ஒரு வருட உறுப்பினர் காலம் அன்றிலிருந்து தொடங்கும். இந்த சலுகை அனைவருக்கும் ஒரே நாளில் வராது. செப்டம்பர் 19 முதல் இரண்டு வாரங்களுக்கு படிப்படியாக தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.

44
சில திட்டங்களுக்கு 2 ஆண்டு சலுகை தொடரும்
Image Credit : Google

சில திட்டங்களுக்கு 2 ஆண்டு சலுகை தொடரும்

ஏற்கனவே ரூ.888, ரூ.1,199 மற்றும் 150 எம்.பி.எஸ். அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களை பயன்படுத்துபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது 2 ஆண்டு அமேசான் பிரைம் லைட் சலுகையில் எந்த மாற்றமும் இல்லை. அந்த திட்டங்களுக்கு பழைய சலுகை தொடரும். உங்கள் திட்டத்திற்கு இந்த சலுகை பொருந்துகிறது, உறுப்பினர் காலம் எப்போது தொடங்கும், தொடர்ந்து திட்டத்தை பயன்படுத்த வேண்டுமா போன்ற விவரங்கள் மை ஜியோ செயலியில் சரிபார்த்த பிறகே இந்த சலுகையை பயன்படுத்துவது நல்லது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜியோ
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jio 5G Booster Pack: ஜியோ கஸ்டமர்களுக்கு செம கிஃப்ட்.. வெறும் ரூ.51-க்கு 5G டேட்டா!
Recommended image2
ஒரே இடத்தில் 1,000 மெட்ரிக் டன் தங்கம், ரூ.7 லட்சம் கோடி மதிப்பு... உலக சந்தையை அதிரவைத்த சீனாவின் தங்க மலை!
Recommended image3
பின் போட்டதும் நடப்பது என்ன? 100 மில்லி விநாடிகளில் 4 கைகள் மாறும் பணம்: யு.பி.ஐ-யின் கண்ணுக்கு தெரியாத அசுர வேகம்!
Related Stories
Recommended image1
Jio 5G Booster Pack: ஜியோ கஸ்டமர்களுக்கு செம கிஃப்ட்.. வெறும் ரூ.51-க்கு 5G டேட்டா!
Recommended image2
UPI for 30 Days: 30 நாள் யுபிஐ பயன்படுத்தாமல் இருந்தால் என்ன ஆகும்? உண்மையில் எவ்வளவு பணம் மிச்சமாகும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved