இதான்டா ரீசார்ஜ் பிளான்.. தினமும் ரூ.3 கூட இல்லை! ஜியோ வாடிக்கையாளர்கள் குஷி!
ரிலையன்ஸ் ஜியோ புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் அன்லிமிட்டெட் கால், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் பல ஓடிடி சேவைகளுக்கான அணுகல் கிடைக்கும்.

ஜியோ மலிவு ரீசார்ஜ் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ எப்போதும் தனது வாடிக்கையாளர்களுக்காக மலிவான மற்றும் நீண்ட கால நன்மைகள் கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது, ஜியோ 900 ரூபாய்க்கு குறைவான விலையில் ஒரு வருடத்திற்கு அருகாமையில் செல்லுபடியாகும் புதிய திட்டம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிட்டெட் கால், டேட்டா, எஸ்எம்எஸ் என பயனர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன.
ஜியோ ரூ.895 பிளான்
இந்த திட்டத்தின் விலை ரூ.895 மட்டுமே. ஆனால், இது 11 மாதங்கள் (336 நாட்கள்) வரை செல்லுபடியாகும். இதன் தினசரி செலவு வெறும் ரூ.2.66 என கணக்கிடப்படுகிறது. அதாவது, தினமும் காப்பி விலை கூட செலவாகாமல், நீங்கள் அன்லிமிட்டெட் கால், டேட்டா, எஸ்எம்எஸ் வசதிகளைப் பெறலாம்.
ஜியோ அன்லிமிட்டெட் கால் டேட்டா
ஜியோ மட்டுமல்ல, பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் திட்டங்களில் ஃப்ரீ OTT சப்ஸ்கிரிப்ஷன் வசதியையும் வழங்குகின்றன. ஜியோவிலும், Netflix, Amazon Prime Video, JioCinema, JioTV போன்ற ஓடிடி சேவைகளுக்கான அணுகல் கிடைக்கும்.
ஜியோ நீண்ட கால பிளான்
மேலும், ஜியோவின் ரூ.198 திட்டம் மிகக் குறைந்த விலையில் அதிக நன்மைகளைத் தருகிறது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், அன்லிமிட்டெட் கால், ஜியோ டிவி, ஜியோ ஏஐ க்ளூட் மற்றும் அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. ஆனால், இதன் செல்லுபடியாகும் காலம் வெறும் 14 நாட்களே. எனவே, குறைந்த காலத்துக்கான ஹெவி டேட்டா யூசர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.
மலிவு விலை டேட்டா பிளான்
ஜியோவுடன், ஏர்டெல் மற்றும் விஐ நிறுவனங்களும் ரூ.200-க்கு குறைவான பல திட்டங்களை வழங்குகின்றன. இந்த திட்டங்களில் எல்லாம் அன்லிமிட்டெட் கால், டேட்டா, எஸ்எம்எஸ் உள்ளிட்ட முக்கிய நன்மைகள் உள்ளன. மாதந்தோறும் அதிக செலவு செய்யாமல், குறைந்த விலையில் முழுமையான சேவைகளை விரும்புவோருக்கு இதுபோன்ற திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.