இந்த வார டெக் செய்திகளில் Vivo V60, Oppo K13 Turbo Pro, iPhone 17 மற்றும் Google Pixel 10 பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. Oppo K13 Turbo Pro விற்பனைக்கு வந்துவிட்டது, Vivo V60 அறிமுகமாகியுள்ளது.
Vivo V60, Oppo K13 Turbo Pro, iPhone 17 லீக்ஸ், Google Pixel 10 விலை விவரங்கள் போன்றவை முக்கியமாக இந்த வாரம் ட்ரெண்டிங்கில் பேசப்பட்டது.
Oppo K13 Turbo Pro
இந்தியாவில் குளிரூட்டும் விசிறி கொண்ட முதல் ஸ்மார்ட்போனான Oppo K13 Turbo Pro 5G விற்பனைக்கு வந்துள்ளது. 7000mAh பேட்டரி, 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங், 1.5K AMOLED திரை ஆகியவை சிறப்பாக உள்ளது. கேமர்கள் மற்றும் பவர் யூசர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த போன், 8GB + 256GB மாடல் ரூ.37,999 மற்றும் 12GB + 256GB மாடல் ரூ.39,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வங்கி சலுகைகள் மூலம் ரூ.3,000 தள்ளுபடியும் கிடைக்கும்.
Vivo V60 மற்றும் iPhone 17
Vivo தனது புதிய V60 5G போனை அறிமுகப்படுத்தியுள்ளது. மூன்று கேமரா அமைப்பு, IP68/IP69 நீர் எதிர்ப்பு, AMOLED டிஸ்ப்ளே, Snapdragon 7 Gen 4 சிப் ஆகியவை இதில் உள்ளன. விலை ரூ.36,999 முதல் ரூ.45,999 வரை. மறுபுறம், iPhone 17 தொடர் செப்டம்பர் 9 அன்று அறிமுகமாகி, செப்டம்பர் 19 அன்று விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Google Pixel 10 & Tecno Spark Go
Google Pixel 10 தொடர் ஆகஸ்ட் 20 அன்று வெளியாகும். Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL, Pixel 10 Pro Fold என நான்கு மாடல்கள் இருக்கும். அடிப்படை Pixel 10 மாடல் $799க்கு விலை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே நேரத்தில் Tecno, Spark Go 5G-ஐ ரூ.9,999 விலையில் வெளியிட்டுள்ளது. இதில் 6000mAh பேட்டரி உள்ளது.
