இவ்வளவு சீப்பா ஜியோ பிளேன் வந்தததே இல்ல; ஹாட்ஸ்டார் ஃபிரியாவே பார்க்கலாம்!!
ரிலையன்ஸ் ஜியோவில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா போன்ற பலன்களுடன் இலவசமாக ஹாட்ஸ்டார் சப்ஷ்கிரிப்ஷனையும் வழங்கும் 84 நாள்களுக்கான ஒரு திட்டம் மிகவும் குறைவான விலையில் கிடைக்கிறது. அதைப் பற்றி இத்தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

Reliance Jio Plans
ஜியோவின் 5G நெட்வொர்க் மிகவும் சிறப்பாக உள்ளது. பல இடங்களில் கிடைக்கிறது. சமீபத்தில் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை உயர்த்தியுள்ளதால், 5G நெட்வொர்க்கை சிறப்பாக விரிவுபடுத்த உள்ளது. இப்போதே ஜியோவில் பல திட்டங்கள் உள்ளன. அவற்றில் 84 நாட்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா போன்ற பலன்களை வழங்கும் பிளானைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
Jio 949 plan
ஜியோவில் 84 நாட்களுக்கு ஒரு நல்ல திட்டம் உள்ளது. அதன் விலை ரூ. 949. இந்தத் திட்டத்தில் எந்த எண்ணிற்கும் எத்தனை அழைப்புகளை வேண்டுமானாலும் செய்யலாம். எந்த மூலையில் ரோமிங்கில் இருந்தாலும் உங்கள் நெட்வொர்க் வேலை செய்யும். இதனுடன், நீங்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் OTT சந்தாவையும் இலவசமாகப் பெறலாம்.
Jio 84 days plan
இந்த திட்டத்தில், நீங்கள் தினமும் 2GB அதிவேக டேட்டா கிடைக்கிறது. ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் இலவசமாகக் அனுப்பலாம். உங்களிடம் 5ஜி போன் இருந்தால், 5ஜி நெட்வொர்க்கை எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஒரு வேளை நீங்கள் பிஎஸ்என்எல் (BSNL) சேவைக்கு மாற விரும்பினால், கிட்டத்தட்ட இதே விலையில் BSNL பிளான் ஒன்றும் உள்ளது.
BSNL 997
BSNL நிறுவனத்தில் ரூ.997 க்கு ஒரு பிளான் உள்ளது. இதில் தினமும் 2GB டேட்டாவும் 100 எஸ்எம்எஸ் இலவசமாகக் கிடைக்கும். அன்லிமிட்டெட் அழைப்புகளையும் செய்யலாம், நாட்டின் எந்த மூலையில் ரோமிங்கில் இருந்தாலும் நெட்வொர்க்கைப் பயன்படுத்தலாம். ஜியோ 949 பிளான் 84 நாளுக்கு மட்டும் வேலிடிட்டி கொடுக்கும் நிலையில், இந்த பி.எஸ்.என்.எல். திட்டம் 160 நாட்களுக்கு வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.
BSNL vs Jio
இரண்டு திட்டங்களும் மிகச் சிறந்த பலன்களை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கின்றன. அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன. ஆனால் பிஎஸ்என்எல் 4G நெட்வொர்க் இப்போதுதான் கட்டமைக்கப்பட்டு வருகிறது. 5G சேவைக்கான சோதனைகளும் நடந்து வருகின்றன. இதனால் இப்போது ஜியோ வழங்குவதைப் போன்ற சிறந்த சேவை கிடைக்காது. ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் போன்ற கூடுதல் பலன்களும் பிஎஸ்என்எல் 997 பிளானில் இல்லை.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.