MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • கால்ஸ், SMSக்கு தனி பிளான்கள் வந்தாச்சு; ஏர்டெல், ஜியோவில் எது பெஸ்ட்? முழு விவரம்!

கால்ஸ், SMSக்கு தனி பிளான்கள் வந்தாச்சு; ஏர்டெல், ஜியோவில் எது பெஸ்ட்? முழு விவரம்!

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள், வோடோபோன் ஐடியா போன்ற செல்போன் ரீசார்ஜ் நிறுவனங்கள் கால்ஸ், எஸ்எம்எஸ்களுக்கு தனி பிளான்கள் கொண்டு வந்துள்ளன. 

2 Min read
Author : Rayar A
Published : Jan 24 2025, 01:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
JIO and Airtel

JIO and Airtel

டிராய் புதிய விதிகள்

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்லும் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. தனியார் தொலைத் தொடர்பு துறை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக பல்வேறு சலுகை விலையில் திட்டங்களை அறிவித்து போட்டி போட்டு செயல்பட்டு வருகின்றன.

மேற்கண்ட செல்போன் ரீசார்ஜ் நிறுவனங்கள் கால்ஸ் வசதி, எஸ்எம்எஸ் வசதி மற்றும் டேட்டா ஆகியவற்றை கொண்ட தொகுப்பு ரீசார்ஜ் திட்டங்களை தான் செயல்படுத்தி வருகின்றன. கால்ஸ் வசதி மற்றும் எஸ்எம்எஸ் வசதிகளுக்கு என்று தனியாக திட்டங்கள் ஏதும் இல்லை.

இதனால் டேட்டா பயன்பாடு தேவையில்லாத வாடிக்கையாளர்களும் கால்ஸ் வசதி, எஸ்எம்எஸ் வசதி மற்றும் டேட்டா வசதி கொண்ட தொகுப்பு திட்டங்களை தான் ரீசார்ஜ் செய்ய வேண்டியதுள்ளது. இந்த தொகுப்பு திட்டங்களுக்கு கட்டணம் அதிகமாக உள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Calls and SMS Plans

Calls and SMS Plans

பணிந்த செல்போன் நிறுவனங்கள் 

இதனால் குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்க்கு ஒரு தனித்துவமான ரீசார்ஜ் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு கடந்த மாதம் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI)அதிரடி உத்தரவிட்டது. டிராய் உத்தரவால் இப்போது செல்போன் ரீசார்ஜ் நிறுவனங்கள் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு மட்டும் தனியாக பிளான்களை கொண்டு வந்துள்ளன.

பிஎஸ்என்எல் பேன்சி நம்பர் விற்பனை ஆரம்பம்! ஒரு நம்பருக்கு விலை எவ்வளவு தெரியுமா?

35
JIO Plan

JIO Plan

ஜியோவின் கால்ஸ் ஒன்லி பிளான் 

ஜியோ ரூ.458 மற்றும் ரூ.1958 விலையில் இரண்டு பட்ஜெட் கால்ஸ் ஒன்லி பிளான்களை கொண்டு வந்துள்ளது.  ரூ.458 திட்டம் வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இதில் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 1000 இலவச எஸ்எம்எஸ் அடங்கும்.

ஜியோவின் ரூ.1958 திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், பயனர்கள் ஆண்டு முழுவதும் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் கால்ஸ் வசதியை அனுபவிக்க முடியும், அத்துடன் 3600 இலவச எஸ்எம்எஸ்களும் கிடைக்கும்.

45
Aitel Plan

Aitel Plan

ஏர்டெல் திட்டங்கள்

ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்காக இரண்டு கால்ஸ் ஒன்லி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது: ஒன்று ரூ.509 மற்றும் மற்றொன்று ரூ.1999 ஆகும். ரூ.509 திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளிலும் 84 நாட்களுக்கு வரம்பற்ற கால்ஸ் அழைப்பையும், 900 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது.

ரூ.1999 திட்டத்திற்கு ஏர்டெல் ஒரு முழு வருட வேலிடிடிட் அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது,  இந்தத் திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 3600 இலவச SMS ஆகியவை அடங்கும்.

 

55
Vodofone Plan

Vodofone Plan

வோடோபோன்-ஐடியா பிளான் 

வோடாஃபோன்-ஐடியா ரூ.1460 விலையில் ஒரே ஒரு திட்டத்தை மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் 270 நாட்கள் வேலிட்டி வழங்குகிறது. இது அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் கால்ஸ் செய்ய அனுமதிக்கிறது. கூடுதலாக பயனர்கள் திட்டத்தின் காலம் முழுவதும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களை பெற முடியும். 

அம்பானிக்கு டஃப் கொடுக்கும் பிஎஸ்என்எல்; 5 ரூபாய்க்கு பல்க் டேட்டா, வேலிடிட்டி; வாடிக்கையாளர்கள் குஷி!
 

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜியோ
ஏர்டெல்
இந்தியா
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Jio Diwali Offer: ஜியோவின் மாஸ் தீபாவளி பரிசு! 5 மாதம் ரீசார்ஜ், OTT ஃப்ரீ! முழு விவரம்!
Recommended image2
Phone Charger: போன் இல்லை... சார்ஜர் மட்டும் சுவிட்சில் இருக்கிறதா? அப்போதும் மின்சாரம் செலவாகுமா?
Recommended image3
Cheapest Prepaid Plans: ஜியோ, ஏர்டெல், Vi வழங்கும் மலிவான ரீசார்ஜ் பிளான்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved