MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • 9000mAh பேட்டரி, 185Hz டிஸ்ப்ளே: கேமிங் உலகை புரட்டிப்போட வரும் iQOO Neo 12.. விலை என்ன?

9000mAh பேட்டரி, 185Hz டிஸ்ப்ளே: கேமிங் உலகை புரட்டிப்போட வரும் iQOO Neo 12.. விலை என்ன?

iQOO Neo 12 ஸ்மார்ட்போன் அக்டோபர் 28-ம் தேதி அறிமுகமாகிறது. 185Hz 2K டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 ப்ராசஸர், 9000mAh பேட்டரி என பல மிரட்டலான அம்சங்கள் இதில் உள்ளன. இது குறித்து விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 20 2026, 10:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
iQOO Neo 12 ஸ்மார்ட்போன்
Image Credit : x

iQOO Neo 12 ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் பிரியர்களும் கேமர்களும் ஆவலோடு காத்திருந்த iQOO Neo 12 ஸ்மார்ட்போன் அக்டோபர் 28-ம் தேதி சீனாவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. அறிமுகமாகும் அன்றே இந்த போன் விற்பனைக்கும் வரும் என நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. முந்தைய Neo 11 மாடலை விட, இந்த புதிய போன் டிசைன், ப்ராசஸர், டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி என எல்லாவற்றிலும் பெரிய அப்டேட்களை பெற்றுள்ளது.

கவர்ச்சியான டிசைன் மற்றும் கூலிங் வசதி

iQOO Neo 12 ஸ்மார்ட்போன், டிசைனில் இந்த முறை ஒரு படி மேலே போயுள்ளது. போனின் பின்பக்க மேல் பகுதியில் பெரிய சதுர வடிவ கேமரா மாட்யூல் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு கேமரா லென்ஸ்கள் மற்றும் 'Monster Inside' என்ற பிராண்டிங் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து கேம் விளையாடும்போது போன் சூடாவதை தடுக்க, உள்ளேயே ஆக்டிவ் கூலிங் ஃபேன் (Active cooling fan) கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக போனின் மெட்டல் ஃபிரேமில் காற்று வெளியேறும் வகையில் சிறப்பு டிசைன் செய்திருக்கிறார்கள். பின்பக்கம் பிரஷ்-ஸ்ட்ரோக் ஸ்டைலில் உள்ள சில்வர்-ப்ளூ கலர், இந்த போனுக்கு ஒரு பிரீமியம் கேமிங் லுக்கை கொடுக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
185Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 2K டிஸ்ப்ளே
Image Credit : x

185Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 2K டிஸ்ப்ளே

இந்த போனில், கேமிங் பிரியர்களுக்காகவே 2K ரெசல்யூஷன் மற்றும் 185Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச பிரைட்னஸ் ஹை-பிரைட்னஸ் மோடில் 2,200 நிட்ஸ் வரை வெளிச்சம் தரும். இருட்டில் கண்களை பாதுகாக்க, பிரைட்னஸை வெறும் 1 நிட் அளவுக்கு குறைத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.

5,000Hz டச் சாம்ப்ளிங் ரேட் இருப்பதால், கேமிங்கின் போது மிக வேகமாக செயல்படும். இந்த புதிய டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தை, சீனா அகாடமி ஆஃப் ஆர்ட் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

பவர்ஃபுல் ப்ராசஸர் மற்றும் பேட்டரி

இந்த போனின் வேகத்தை அதிகரிக்க, லேட்டஸ்ட் ஃபிளாக்ஷிப் ப்ராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Qualcomm Snapdragon 8 Elite Gen 5) ப்ராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் மற்றும் ஃப்ரேம் ரேட்டை அதிகரிக்க தனியாக Q3 கேமிங் சிப் உள்ளது.

நீண்ட நேரம் பயன்படுத்தும் வகையில் 9,000mAh திறன் கொண்ட பிரம்மாண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக 3D அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது. 50-க்கும் மேற்பட்ட பிரபலமான கேம்களில் 2K ஹை-லெவல் கேமிங் சப்போர்ட் கிடைக்கும்.

33
இந்திய வெளியீடு எப்போது?
Image Credit : iQOO India Twitter

இந்திய வெளியீடு எப்போது?

இந்த ஸ்மார்ட்போன், சீனாவில் வெளியான பிறகு உலக சந்தையில் iQOO 16R என்ற பெயரில் அறிமுகமாக வாய்ப்புள்ளது. கசிந்த தகவல்களின்படி, இது Android 17 அடிப்படையிலான OriginOS 7, 16GB RAM மற்றும் Adreno 840 GPU உடன் வரலாம்.

இந்தியாவில் Neo 10 மாடலுக்குப் பிறகு புதிய மாடல் எதுவும் வெளியாகவில்லை. அதனால், இந்த Neo 12 அல்லது iQOO 16R சீரிஸ் இந்திய கேமிங் பிரியர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேமரா விவரங்கள் மற்றும் சரியான விலையை வெளியீட்டு நாளில் நிறுவனம் அறிவிக்கும். இந்தியாவில் இதன் விலை தோராயமாக ரூ.52,999 ஆக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
திறன் பேசி
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
அடுத்த 20 ஆண்டுகளில்... விண்வெளியில் கோடிக்கணக்கான மக்கள்; நிலவில் ரோபோக்கள் ராஜ்ஜியம் - கணிக்கும் அமேசான் ஜெஃப் பெசோஸ்!
Recommended image2
8000mAh பேட்டரி, 108MP கேமரா: ரூ.20,000க்குள் டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்!
Recommended image3
720 அடி உயரத்திற்குச் சீறிய லாவா குழம்புகள்: ஹவாயில் ஜொலிக்கும் இரவு வானம்!
Related Stories
Recommended image1
சர்வீஸ் சென்டர் எல்லாம் போக வேண்டாம்... ஸ்மார்ட்போன் போல காருக்கும் வந்தாச்சு சாப்ட்வேர் அப்டேட்!
Recommended image2
100% சார்ஜ் ஆன பிறகும் ஸ்மார்ட்போன் பிளக்கில் இருந்தால் வெடிக்குமா? பலரும் சொல்லாத உண்மை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved