- Home
- டெக்னாலஜி
- iQOO Neo 11 Ultra: ‘மான்ஸ்டர்’ போன் ரெடி! ஆகஸ்ட் 18-ல் அறிமுகம்.. அசத்தும் அம்சங்கள் இதோ
iQOO Neo 11 Ultra: ‘மான்ஸ்டர்’ போன் ரெடி! ஆகஸ்ட் 18-ல் அறிமுகம்.. அசத்தும் அம்சங்கள் இதோ
iQOO Neo 11 Ultra: ஐக்யூ நிறுவனம் தனது நியோ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கேமிங் செயல்திறனை மேம்படுத்தும் "மான்ஸ்டர் சூப்பர் கோர் இன்ஜின்" மற்றும் தனித்துவமான 3D வடிவமைப்புடன் இந்த போன் வருகிறது.

ஐக்யூ நியோ 11 அல்ட்ரா
ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான நியோ 11 அல்ட்ராவை சீனாவில் ஆகஸ்ட் 18ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அன்றைய தினம் உள்ளூர் நேரப்படி மாலை 7 மணிக்கு அறிமுக நிகழ்ச்சி நடைபெறும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி இது மாலை 4.30 மணியாகும். நியோ 11 அல்ட்ராவுடன் ஐக்யூ Z11s மாடலும் சீன சந்தையில் அறிமுகமாக உள்ளது. இந்த இரண்டு போன்களுக்கான முன்பதிவும் சீனாவில் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்திய சந்தையில் இந்த போன் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்து தற்போது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
நியோ 11 அல்ட்ராவின் முக்கிய சிறப்பம்சமாக மீடியாடெக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட Dimensity 9500M சிப் உள்ளது. 3 நானோமீட்டர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த சிப் அதிக செயல்திறன் மற்றும் சிறந்த மின்சார சிக்கனத்தை வழங்கும் வகையில் ஐக்யூ கூறுகிறது. குறிப்பாக கேமிங் மற்றும் அதிக செயல்திறன் தேவைப்படும் பயன்பாடுகளில் சீரான அனுபவத்தை வழங்குவதற்காக இதில் “மான்ஸ்டர் சூப்பர் கோர் இன்ஜின்” இடம்பெற்றுள்ளது. இந்த தொழில்நுட்பம் மேம்படுத்துவதோடு மின்சார பயன்பாட்டையும் கட்டுப்படுத்த உதவும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐக்யூ நியோ 11 அல்ட்ரா வசதிகள்
திரை விஷயத்திலும் ஐக்யூ கவனம் செலுத்தியுள்ளது. F2 ஒளிரும் பொருளைப் பயன்படுத்தும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் நியோ 11 அல்ட்ரா என நிறுவனம் கூறுகிறது. இதன் திரை அதிகபட்சமாக 2,000 நிட்ஸ் வரை பிரகாசத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முழுத் திரையிலும் அதிக பிரகாசத்தை சீராக பராமரிக்க முடியும் என்று ஐக்யூ கூறுகிறது. இதனால் வெளிச்சம் அதிகமாக இருக்கும் இடங்களிலும் திரையில் உள்ள தகவல்களை தெளிவாகப் பார்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்தபட்ச பிரகாசம் 1 நிட்ஸ் வரை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்காகவும் சில வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. திரையின் முதல் சட்டகப் பிரகாச விகிதம் 98 சதவீதமாக இருக்கும் என நிறுவனம் கூறுகிறது. மேலும், தீங்கு விளைவிக்கும் நீல ஒளியின் வெளியேற்றம் 5 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RBI Rules: கடன் கட்டவில்லை என்றால் போன் முடக்கப்படுமா? ஆர்பிஐ விதி சொல்வது இதுதான்
ஐக்யூ நியோ 11 அல்ட்ரா கேமரா
இரவு நேரம் அல்லது குறைந்த வெளிச்சத்தில் பயன்படுத்தும்போது குறைந்தபட்சம் 1 நிட்ஸ் பிரகாசம் கண்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை குறைக்க உதவும் வகையில் இருக்கும் என நிறுவனம் விளக்குகிறது. வடிவமைப்பிலும் நியோ 11 அல்ட்ரா தனித்துவமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதன் பின்புறத்தில் 3D ஒளி ஓட்ட விளைவு கொண்ட வடிவமைப்பு இடம்பெறும். போனின் தடிமன் 9.13 மில்லிமீட்டராக இருக்கும் என்றும், வட்டமான மூலைகள் மற்றும் மேட் பூச்சுடன் கூடிய உலோக சட்டகம் பயன்படுத்தப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. சீன சந்தையில் இது லைட் ஒயிட், ஷேடோ பிளாக் மற்றும் விண்ட் சேசர் என மூன்று வண்ணங்களில் கிடைக்கும். தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள அம்சங்கள் சீன சந்தைக்கானவை மட்டுமே. எனவே இந்திய வெளியீட்டு தேதி, விலை மற்றும் இந்திய பதிப்பில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து ஐக்யூ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிறகே உறுதியான தகவல்கள் கிடைக்கும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

